Loading

Tuesday, May 1, 2012

துக்ளக் இதழின் கட்டுரை ஒன்று



துக்ளக்கில் வெளிவந்த துர்வாசரின் கட்டுரை ஒன்று !

சில தினங்களுக்கு முன்னால் கருணாநிதி ,தனது வழக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் .
சென்ற முறை அவர் முதலமைச்சராக இருந்த போது ,தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் பொங்கல் அன்றுதான் 
கொண்டாடப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றிய அந்த மலரும் நினைவுகளில் மூழ்கி அறிக்கை விட்டிருக்கிறார் .

கீறல் விழுந்த பழைய கிராமபோன் ரிக்கார்டு ,பாடியதையே திரும்பத் திரும்பப் பாடுவது போல் ,அவரது 
வழக்கமான 500 தமிழ்ப் புலவர்கள் கூடி விவாதித்து ,முடிவு செய்யப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு தைமாதம் பொங்கலன்றுதான் 
என்று கிழிந்து பீற்றாலாகிப் போன விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார் .

பச்சையப்பன் கல்லூரிகளில் எப்போதோ ,500 தமிழ்ப் புலவர்கள் ,தமிழர்கள் யுகயுகமாகக் கொண்டாடி 
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி அறிவித்ததை ,ஏதோ சரித்திர சான்று போல் திரும்பத் திரும்ப 500 தமிழ்ப்
புலவர்கள் பேசி முடிவு செய்தது என்று கருணாநிதி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிதற்றுகிறார் .

மறைமலை அடிகள் முதலான அந்த 500 தமிழ்ப் புலவர்களைத் தமிழகம் தலையில் தூக்கி வைத்துக் 
கொண்டாடி குரு பீடத்தில் வைத்திருந்தால்,1921-ல் அவர்கள் சொன்னது போல தமிழ் மக்கள் ஏகோபித்து 
'தைப் பொங்கலே வருக ' 'தைப் புத்தாண்டே வருக ' என்று கூத்தாடியிருப்பார்களே !

அல்லது 2008-ல் ஏதோ பெரிய சோழச் சக்கரவர்த்தி என்று தன்னை நினைத்துக் கொண்டு , தைப் பொங்கலைத்தான் 
தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாட வேண்டும் என்று கருணாநிதி உத்திரவிட்டதையாவது ,தமிழர்கள் பின்பற்றினார்களா 
என்றால் அதுவுமில்லை .கருணாநிதி பெரிதாக வியக்கிற அந்த 500 தமிழ்ப் புலவர்களையும் மதிக்கவில்லை ;
டாக்டர் கலைஞர் முத்தமிழ் வித்தகர் போட்ட சட்டத்தையும் தமிழர்கள் மதிக்கவில்லை .

யுக யுகாத்திரங்களாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்ற இவர் யார் ?
முதலைமைச்சராகி விட்டால் ,தன் மனம் போன போக்கில் சட்டம் போட்டு ,மக்களின் கொண்டாட்டத் தினங்களை
எல்லாம் மாற்றி விட முடியுமா ?

கருணாநிதி ஒரு சுத்த சுயம் பிரகாச நாஸ்திகர் .தமிழ்ப் புத்தாண்டோ கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
கொண்டாடுவது ,தமிழர்கள் எல்லாரும் கூடி ,518 தமிழ்ப் புலவர்கள் சொனார்கள் என்று ,பெரியாரின் 
பிறந்த தினத்தையோ ,அண்ணாத்துரையின் பிறந்த தினத்தையோ மாற்றி ,இந்தத் தேதியில்தான் பெரியார் ,அண்ணா 
பிறந்த நாள்களைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னால் கருணாநிதி ஏற்பாரா ?

அட ,இந்தக் கருணாநிதியின் பிறந்த தினத்தை மாற்றி வேறொரு தேதியில் கொண்டாடினால் ,அதை இந்த முத்தமிழ் 
வித்தகர் கலைஞர் திலகம்தான் ஏற்றுக் கொள்வாரா ? ஏதோ மைனாரிட்டி அரசாங்கத்தை அமைத்து முதல்வராகி விட்டதற்காக 
,பொது மக்களுடைய நம்பிக்கைகளை மாற்றி சட்டம் போட கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது ?

ஹிந்துக்களை தூஷிப்பது , ஹிந்துக்களின் நம்பிக்கைகளைக் கேலி செய்வது என்பது கருணாநிதிக்கும் 
அவரது அடிப் பொடிகளுக்கும் கை வந்தது .கிறிஸ்துவர்களின் கிறிஸ்துமசையும் இஸ்லாமிய மக்களின் ரமலான் 
நோன்பையும் சட்டம் போட்டு ,கருணாநிதி மாற்றுவாரா ? ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் படும் தினத்தையோ ,பக்ரீத் 
கொண்டாடப்படும் தினத்தையோ மாற்றிப் பார்க்கட்டுமே டாக்டர் கலைஞர் ? ஹிந்துக்கள் என்றால் 
இளிச்சவாயர்களா ?

மக்களுடைய மத நம்பிக்கைகளில் குறுக்கிட கருணாநிதி யார் ?



No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்