Loading

Friday, November 15, 2013

பார்வதி !!!

பார்வதி !!
பார்த்தவுடன் ஈர்த்தவள்தான் இந்த பார்வதி !
பார்வதியை ஷாப்பிங் மாலிலோ,
ஸ்கைவாக் சென்டரிலோ சந்தித்திருப்பேன் 
என நீங்கள் நினைத்தால்,
அது உங்களின் கற்பனை வறட்சியை காட்டுகிறது.
நான் சந்தித்தோ அதைவிட 
கூட்ட நெரிசல் கொண்ட ரேஷன் கடையில்.

"ரேஷன் கடையில் கிடைத்த ரவாலட்டு"
என்ற கன்னாபின்னா
கவிதைகள் என் மூளையில் உதிக்குமளவுக்கு
உலுக்கி எடுத்தது அவளின் ஓரப்பார்வை!

மண்ணெண்ணெய் வாங்கும் மும்முறத்திலிருந்த 
என்னை மலேசியாவுக்கு
டூயட் பாட அழைப்பது போல் இருந்தது அவளின் ஒற்றைப்பார்வை!
இரண்டு நாட்களாக ஏன் ரேஷன்கடை திறக்கவில்லையென மற்றவர்கள் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்க,
24 வருடங்களாக ஏன் என்னை பார்க்க வரவில்லையென பார்வதியிடம் மானசீகமாக கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தேன் !

மண்ணெண்ணெய் தீர்ந்துபோய் விடுமென்ற 
முன்ஜாக்கிறதை காரணமாக அடித்துப்பிடித்து
வரிசையில் நான்காம் இடத்திலிருந்த நான்,பொதுநலன் கருதி(பார்வதிநலன்) வழிவிட ஆரம்பித்த என்னை,
"வாவ்,வாட் அ மேன்"
என்று சில பெருசுகள் ஆச்சர்யத்ததை ஆஸ்கார் அவார்டாக நான் பெற்றுக்கொண்டதை
பார்வதியும் கவனிக்கத் தவறவில்லை.

பார்வதி வராது போயிருந்தால்,மண்ணெண்ணெய்க்காக போரிட்ட மாவீரன் என்ற பெயர் கிடைத்திருக்கும்தான்,
அதானலென்ன ,இப்போது மண்ணெண்ணெய் வாங்க வழிவிட்ட கர்மவீரன் என்ற பட்டம் கிடைத்திருக்கிறதே
என்ற அல்ப சந்தோசத்துடன் திருப்திபட்டுக்கொண்டேன்..
சில நிமிடமாக ,சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி,திடிரென வைத்த கண் வாங்காமல்
என்னை பார்த்தபோது,எனக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த முயல்குட்டி முழித்துக்கொண்டது.
கியுவின் நடுப்பகுதி வரை வழிவிட்ட  என்னை நோக்கி,அவசரமாக வர ஆரம்பித்தாள் பார்வதி.

"வீடுதேடி வரும் ரேஷன்பொருட்கள் திட்டம் எவ்வளவு அரிதானதோ,
அதுபோல என்னைத்தேடி வரும் பெண்களும் மிக மிக அரிது "

கிட்டே நெருங்கிவிட்ட பார்வதியை கொட்ட கொட்ட நான் பார்த்துக்கொண்டிருந்ததை
யாரும் பார்க்கவில்லை.உடனே அவளிடம்
"எனி ஹெல்ப் ஷாலுமா? என்று வழமையாக நான் கேட்க நினைத்தபோது
அவளே என்னிடம் 'ஒரு ஹெல்ப் நாராயணா ?என்று கேட்டு என் நெஞ்சில் கிஷ்னாயிலை வார்த்தாள்.

சொல்லுங்க பார்வதி என்றேன் பவ்யமாக!
பார்வதியும் பாராயணம் பாட ஆரம்பித்தாள்.

லேடிஸ் கியூ ரொம்ப நீளமா.. இருக்கு
கிஷ்னாயில் தீர்ந்துடுமோனு பயமா இருக்கு
சோ,எனக்காக ஒரு 5லிட்டர் கிஷ்னாயில் வாங்கித்தரமுடியுமா என கேட்டாள்.

ஷுயர் பார்வதி ,
ஐ கேன் என்று கூறினேன்.

இல்லைங்க ..
"ஐ கேன்"
என்று அவளுடைய மண்ணெண்ணெய் கேன்"னை 
காண்பித்து,என்னுடைய ஆங்கிலத்தில் அரைலிட்டர் 
கிஷ்னாயிலை ஊற்றி கொழுத்திவிட்டாள்.

சரி,ஓகே கொடுங்க 
என்று கேனை வாங்கிய கையோடு,
கியூவில் வழிவிட்ட அத்தனைபேரையும் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்!

"வாவ்,வாட் அ மேன்"
என்று ஜெபித்தவர்கள் எல்லாம்,
"ச்சே என்ன மனுஷன்யா நீ"
என்று அர்ச்சனை செய்ததை
பார்வதிக்காக பெருமையுடன் வாங்கிக்கொண்டேன்.

"கீதை உபதேசம் கேட்பதை விட கஷ்டம்,
கிஷ்னாயில் வாங்குவது" 
என்ற உண்மையை பலமுறை அனுபவித்திருந்ததால்
கசங்கி,கந்தலாகித்தான்,
எனக்கும்,பார்வதிக்கும் கிஷ்னாயில் வாங்கமுடிந்திருந்தது.

இருந்தாலும்,உலகப்போரில் வென்றது போன்ற 
கம்பீரத்தை வரவழைத்துக்கொண்டு 
பார்வதியிடம் மண்ணெண்ணெய் கேனை நீட்டினேன்!
ஏதோ காதலர்தினப் பரிசை பெற்றுக்கொள்வது 
போல பரவசத்துடன் வாங்கிக்கொண்டாள்.

வாங்கிமுடித்த கையோடு "வாட்ஸ்அப்பில்" பேசலாம்,
நம்பர் தாயேன் எனறு  அவள் கேட்பாளென மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த என்னைப் பார்த்து

"ரொம்ப நன்றிங்ணா,
இந்த ஹெல்ப்பை மண்ணெண்ணெய்
 தீரும் வரை மறக்கமாட்டேங்ணா
என்று வார்த்தையால் கோட்டையை இடித்து தள்ளினாள்.

பொதுஇடம் நாகரிகம் கருதி,
அதை சிரித்துக்கொண்டே ஆமோதித்தாலும்,
உள்ளுக்குள்ளே நான்கு அணுமின் நிலையங்கள் வெடித்துக்கொண்டிருந்ததை
நான் மட்டுமே அறிந்திருந்தேன்.
ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு,
பரவாயில்லையென சொல்லி
பார்வதியை அனுப்பிவைத்தேன்.

உன்னை "அண்ணா"
என்று சொல்லிவிட்டாளே
என்று நீங்கள் என்னை எள்ளி நகையாட முனையலாம்.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தொப்புளுக்காக நீதி கேட்டு போராடிய நஸ்ரியாவே கூட,
அவரது காதலனை 
முதலில் "பிரதர்'" என்று அழைத்து,
பிறகுதான் என் பிராணநாதா 
என்று  அழைத்ததாக வரலாறு இருக்கிறது!

அதுபோலத்தான் 
என் பார்வதியும்,முதலில்
"அண்ணா" என ஆரம்பித்து 
பிறகு கண்ணாவென அழைப்பாள்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதென்பதை கூறிக்கொண்டு
கிஷ்னாயிலோடு விடைபெறுகிறேன்..
நன்றி வணக்கம் !





Saturday, November 9, 2013

ரசிகன் ரொம்ப ரொம்ப பாவம் பாஸ் !


சில வாரங்களாக,தமிழ் சினிமாவில்
ஹீரோக்கள் தான்  பாவம்,
வில்லன்கள் தான் பாவமென வரிந்துகட்டி எழுதியவர்களை
பார்த்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்..

உங்களோட ஐந்தாம் அறிவை ,சாரி ஆறாம்அறிவை கொஞ்சூன்டு யோசிச்சு பாருங்க,
யார் பாவம்னு உங்களுக்கே புரியும் பாஸ்!

முழுசா ஒரு அஞ்சு நிமிஷம் கூட கண்ணாடியில நம்ம முகத்தை,நம்மளாலயே
பார்க்க முடியாதுங்க ..ஆனா இரண்டரை மணி நேரம்,ஹீரோவையும்,வில்லனையும்,
பத்தாத குறைக்கு லூசுத்தன கேரக்டர் கொண்ட ஹீரோயினோட மூஞ்சூரு,சாரி மூஞ்சியையும்
கண் கொட்டாம ,கண் எரிச்சலோட பார்க்கிற எங்க வலியையும் நினைச்சு பாருங்க!

அது மட்டுமா?ஹீரோவோட நண்பர்கள்னு ஒரு நாலு பேர்,
வில்லன்களோட அடியாட்கள்னு ஒரு பத்து பேர்,
இவிங்க எதுக்கு வர்றாய்ங்க,போறாய்ங்கனு தெரியாமலேயே
கடைசிவரை குழம்பி,புலம்பி,புண்பட்டு அகோரியா மாறி
வெளியே வர்ற எங்க நிலைமையை பதினோரு பேர் கொண்ட குழு
அமைச்சாலும் நீங்க தீர்க்க முடியாதுங்க!

கன்னத்துல மரு வச்சதால,வில்லனுக்கு ஹீரோவோட அடையாளம் தெரியாம
போய்டுச்சேங்கிறதை அப்படியே நம்பி,கடன்காரன்கிட்ட
மரு வச்சு ஏமாத்த பார்த்து,ஒரு ரூபா காய்ன் சைஸ்
"வடுவ" கன்னத்துல வாங்கிட்டு நிக்குற
எங்க நிலைமையை பத்தி யாராவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா?

துப்பாக்கியை எடுத்து வில்லன் சுடும்போது,
கழுத்துல மாட்டியிருக்கிற டாலரால
உயிரை தக்கவச்சுகிட்ட "சூப்பர் ஹீரோவை "நம்பி
நாங்களும் மனைவியோட பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்க,
டாலரை மாட்டிப்பார்த்தோம்!
மனைவி அடிச்ச அடியில டாலரையே காணோம்ங்க,
அப்படி ஒரு அடி,அகழ்வாராய்ச்சி நிபுணர்கள்
வந்தா கூட அந்த டாலரை உடம்புல இருந்து தோண்டி எடுக்கமுடியுமானு தெரியலைங்க!

பறந்து பறந்து அடிக்கும் ஹீரோ,
ஒரு ரயிலையே தாவும் ஹீரோ,
ஒளி வேகத்தில் பாயும் ஹீரோ,
இப்படி பல கிலோ மீட்டர் பாயும்
இவர்களையெல்லாம் நம்பி,
பரிட்சார்த்த முயற்சியாக தாவிப் பார்த்து,ஹைவேஸ்காரன்
தோண்டி வச்ச பள்ளத்தில் விழுந்து பாண்டேஜ் போட்டுக்கிட்டதுதான்
மிச்சம் பாஸ்!

வேலைக்குப் போனாதான் பொண்ணு தருவாய்ங்கனு,
நினைச்சுட்டிருந்த எங்க மனசுல,ஊர் சுத்துறவன்,தண்ணி அடிக்குறவனைத்தான்,
பொண்ணுங்க தேடி வருவாங்கன்னு நம்பவச்சு,இருந்த வேலையையும்
உதறிட்டு ,பொண்ணு வருமா?பொண்ணு வருமான்னு காத்திட்டிருந்த எங்களுக்கு ,
பசிக்கு பன்னு வாங்கித்தரக் கூட ஒரு ஆள் வரலைங்க!
இப்படி  எக்கச்சக்கமான வேதனைகளை உள்ளுக்குள்ள
வச்சுக்கிட்டும் கூட ,முதல் நாள்,முதல் ஷோ பார்க்க
முண்டியடிக்கும் எங்களை கொஞ்சமாவது  புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க பாஸ்!

சத்தியமா சொல்றேன்
ரசிகர்களான நாங்க  ரொம்ப ரொம்ப பாவம் பாஸ் !


பிரபலமான பதிவுகள்