Loading

Tuesday, November 29, 2016

குக் தியரி

இந்த சைன் தீட்டா,
காஸ் தீட்டா,
அல்ஜீப்ரா,
ஈக்குவேஷன்னு கண்ட கத்திரிக்காய எல்லாம்
சொல்லிக்கொடுக்குற ஸ்கூல்ல,
வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான
குக்கர் விசில் சத்தத்தை எண்ணுற தியரியை முதல்ல சொல்லிக்கொடுக்கலாம் !
ஒரு பயலுக்கும் சரியா எண்ணத் தெரியுறதில்லை ..
உங்க பொறுப்பற்ற தன்மையால
இன்னிக்கு குக்கர் விசிலாலயே அடி வாங்கத் தெரிஞ்சேன்டா ..பாவிங்களா !

கிராமர பார்க்கவேணாம் ,ராமரா பாருங்க !

இந்த இங்க்லீஷ் தெரிஞ்ச பொண்ணுங்க கிட்ட இங்க்லீஷல பேசினா ?!
கிராமர் மிஸ்டேக்லாம்
பார்த்து தொலையுதுங்க,
ஆனா அதே பொண்ணு
தமிழ்ல தப்பா பேசினாலும் 
சரியா புரிஞ்சிகிட்டு
நடந்துக்குற குணம் நமக்கு மட்டும்தான் இருக்கு ..
இப்படித்தான்
ஒரு இங்க்லீஷ் தெரிஞ்ச அம்மணி ..
வா மேன்...
படுத்துக்கு போலாம்னு
சொல்லுச்சு...
நான் பகீர்னு வழியாம ..
சரி வாங்க படத்துக்கு போலாம்னு
பெருந்தன்மையா நடந்துகிட்டேன் ..
இது மாதிரி நாங்க இங்க்லீஷ்
பேசும்போது ..கிராமர பார்க்காம
எங்களை ராமரா பார்த்தா தேவலை !

DIGITAL INDIA (டிஜிட்டல் இந்தியா )

கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி வரலைனு
தெரு முழுக்க ஒரே சத்தம்,
ப்பூ..இதெல்லாம் ஒரு மேட்டரா..
நாடே டிஜிட்டலா மாறுன இந்த நேரத்துல போய் ,
தண்ணி வரலை,வெண்ணி வரலைனு
சொல்லிகிட்டு ,
இருங்கடா நான் வரேனு
கிளம்பிப்போய்...,எல்லாரையும்
தள்ளிவிட்டு ,கார்ப்ப்ரேஷன் குழாய் முன்னாடி பந்தாவா நின்னு ,
டெபிட் கார்ட் காட்டுனேன் .
தண்ணி வரலை..
சரினு ஆப்ஷனலா கிரெடிட் கார்டு காட்டுனேன் ,
அப்பவும்
தண்ணி வரலை.
கொர்ர்ர்னு சத்தம் மட்டும் வந்தது..
திருப்பி பார்த்தா..எல்ல்லாரும் உர்ர்ர்னு சத்தம் கொடுக்குறானுங்க.
மன்னிச்சிடுங்க தாய்மார்ஸ்
டிஜிட்டல் இந்தியானு ஒரு குருட்டு நாய் சொன்னதை நம்பி இப்படி செஞ்சிட்டேங்க தாய்மார்ஸ் .

Monday, November 28, 2016

CASHLESS ECONOMY (கேஷ்லஸ் எக்கனாமி )

Cashless economyனு சொன்னதை நம்பி
எங்க ஆட்டயாம்பட்டிக்காரன்...
டவுனுக்கு போய், 10
தலப்பாகட்டி பிரியாணி சாப்பிட்டுட்டு
ஹோட்டலை விட்டு வெளியே கிளம்பிருக்கான்..அவனை கொத்தா பிடிச்சு காசு எடுனு கேட்டிருக்கானுங்க.
அதான் கவர்மெண்டே கேஷ்லெஸ் எக்கானமினு சொல்லிடுச்சேடா ,
அப்புறம் எதுக்குடா காசுனு கேட்டதுக்கு,
போடா மோடி முட்டினு திட்டிவிட்டிருக்கானுங்க.
கேஷ்லெஸ் எக்கனாமினா ..
பணமில்லா வாழ்க்கைமுறைனுதானடா அர்த்தம் ?அப்புறம் ஏண்டா எங்ககிட்ட காசில்லைனா திட்டுறீங்க ?

பிரபலமான பதிவுகள்