போலிஸ் ரவுடிகள் செய்யும் கொலையை,
அதே போலிஸ்சை வைத்தே கொல்ல வைக்கும் சாமான்யனின் கதைதான் "விக்ரம் வேதா ".
மெரினா கலவரத்துல ,குடிசைக்கும் ஆட்டோக்கும், தீ வச்ச கான்ஸ்டபிளை நீங்க அடிப்பீங்களா?
இல்லை அப்படி செய்ய சொன்ன ஐஜி யை ,அடிப்பீங்களானு உங்ககிட்ட கேள்வி கேட்டா,
உங்க பதில் என்னவா இருக்கும் ?
சொல்ற சாதரண ஏட்டையாவ விளாசுவீங்களா ?
இல்லை அப்படி சொல்லி,போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட தூண்டிய உயர் பதவி காக்கி ரவுடிகளை விளாசுவீங்களா ?
மொத்த காலனி யையும் எரிச்சு சாம்பலாக்கின தொண்டன்களை பொசுக்குவீங்களா ?இல்லை அப்படி செய்ய தூண்டின நயவஞ்சக ? தலைவனை பொசுக்குவீங்களா ?
யோசிக்க வைக்க கூடிய வகைல
நியாய அநியாயங்களை சரியான முறைல அலசிருக்காங்க.
ஜெயில்லையே வச்சு கொல்லப்பட்ட செய்தியும்,
பேராசைக்காக 1000கோடி திருடுன ,
ஓநாய்ங்களுக்கு, இதே போலிஸ் பைரவாக்கள் சல்யூட் அடித்து வரவேற்குற நியுஸ்சையும் பார்த்துட்டு தான் இருக்கோம்.
எந்த சட்டத்தின் மூலமா சிறையில அடைக்க முடியுது ?
அடிமைகள் எல்லாம் முதலாளிகளாக நடந்துகொள்வதையும் ஜனநாயகமென நம்ப வைக்கப்பட்டிருப்பதை ,இப்படம்
காட்சிக் குறியீடுகளால் உணர்த்தியிருக்கிறது.
வந்தா ரத்தம்,
வேதாளங்களுக்கு (உழைக்கும் மக்கள்)
வந்தா தக்காளி சட்னியா என
கேட்கப்படும் வசனத்துக்கு,படத்தை பார்க்கும் அடித்தட்டு ,நடுத்தர ,மக்களிடம்
அப்ளாஸ் அள்ளுகிறது.
கொலைகார கும்பலாக திரியும்,
காக்கி ரவுடிகளை ,போட்டு தள்ளும் ஒவ்வொரு காட்சியையும் சாமான்யன் கைதட்டி வரவேற்கிறான்.
அதிகார அத்துமீறலும் -சாமான்யனின் போராட்டமும் !!!
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது