Loading

Tuesday, July 5, 2016

ஆண் பார்க்கும் படலம் ?!

இந்த உலகம்
எப்போதும் பெண்களைப் பற்றியே பேசுகிறது,
பெண்களின் உலகத்தையே காண்பிக்கிறது,
பெண்களைப் பற்றியே எழுதியும் தொலைக்கிறது,
இப்படிப்பட்ட பெண்ணாதிக்க உலகத்தில்,
ஆண்களைப் பற்றி எழுதினால்
Gillettin ஐ வைத்து killettin பண்ணாத குறையாக ஊதாசினப் படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்திலே ஒருவரும் பேசுவதில்லை,காண்பிப்பதில்லை,எழுதித் தொலைவதுமில்லை.

இப்படிப்பட்ட அசாதாரண?சூழ்நிலையில் ஒரு மாவீரன்
எழுத முன் வந்தான் ..

அவன் யாரென்று கூறினால்
நீங்கள் கண் வைத்து விடுவீர்கள்
என்பதால்,
அவனின் துணிச்சலான எழுத்தை?! மட்டும் உங்களுக்கு தருகிறேன் ..

பெண்ணின் அச்சம் ,மடம் ,
நாணம் ,பயிர்ப்பெல்லாம்
எழுதித் தள்ளும் உலகம்,
ஓர் ஆணின் அல்பம்,
மடத்தனம்,
நாதாரித்தனம்,
பன்னாடைத்தனம் பற்றியெல்லாம் சொல்வதேயில்லை.

அதைத்தான், இந்த
ஆண் பார்க்கும் படலத்தில் சொல்லபோகிறேன்,

வீட்டில் கல்யாணப் பேச்சை
ஆரம்பித்ததும்,பெண்களுக்கு நாணம் வந்து,
அவளின் கால் கட்டை விரல்,
காம்பஸ் இல்லாமலே 90டிகிரி
 வரை, தரையைக் கீறுவதை காட்டும் சமூகம்,
ஓர் ஆணின் பக்கம் கேமராவை திருப்புவதேயில்லை,

இதுவே ஆண்களுக்கு நாணம்? வந்தால்,
பெண்களைப் போல
ஆர்ப்பட்டமெல்லாம் செய்யாமல்,
அமைதியாக ரூம் கதவை சாத்திக்கொண்டு,
அங்க என்னப்பா செவுரு முழுக்க
சத்தம்னு அப்பா கேக்கும் வரை அடக்கமாக இருப்பான் .

அது மட்டுமா....
காலையில் எழுந்தவுடன் பல் விளக்கும் பழக்கத்தை எந்த அனிமல் கண்டுபிடிச்சான்னு
கழுவி ஊத்திக்கொண்டிருந்ததை கைவிட்டு,
தினமும் இருவேளை பல் விளக்குவான்.
இரு வேளை குளிப்பான்,
இருவேளை ஜாக்கி ஜட்டிகளை மாற்றுவான்..

பெண் பார்க்கும் படலத்தை போ
ல,
ஆண் பார்க்கும் பழக்கத்தை
கொண்டு வந்துவிடுவார்களோ
என பயந்து,
அதுவரை ஏலியன் கிரகமாக இருந்த கிச்சன் உலகத்தை
முதன் முதலில் எட்டிப் பார்த்து,
பரவசமடையத் தொடங்குவான்,
காஃபி போடும் பழக்கத்தை
மசாலா பொடி போட்டு கற்றுக்கொள்வான்,
திடிரென பெண்ணின் காலில்
விழச்சொல்லிவிட்டால் என்ன செய்வதென யோசித்து,
ஜெயா நியுஸ் பார்த்து
வளைய கற்றுக்கொள்வான் .

அதுவரை ...
மரியாதை கொடுத்தே பழக்கமில்லாதவன்,
கண்ட நாய்க்கு எல்லாம் நான்
எதுக்கு விஷ் பண்ணனும்னு
பந்தாவாக திரிந்த காலம் போய்,
கண்ட நாய்க்கும்...ச்சி கண்ணில் படும் பெருந் தலைவர்களுக்கெல்லாம் வணக்கம் வைப்பான்,
தெருவில் வாழும் அத்தனை ஜீவராசிகளையும் நேசிப்பான்,
இப்படித்தான் பக்கத்து தெரு திடீர் மாப்பிள்ளை ஒருவன்,
சொறி நாய் ஒன்றுக்கு வணக்கம் வைக்க,
அந்த நாய் இவனுக்கு பதில் (வவ்) வணக்கம் வைக்க தினமும் துரத்திக்கொண்டிருப்பதாக தகவல்.

இந்த லேகியம் விக்குறவன்,
லாட்ஜ் டாக்டர்கள் எல்லாம்
மிகப் பெரும் போர்ஜரி போலிகள்
என்று பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நாறவாய்,
அந்த சேலம் தாத்தா ரொம்ப நல்லவரா தெரியுறார்ல என
நண்பர்களிடம் வேற வாயாக சிலாகிப்பான்.
அவரிடம் போய் குட் செர்ட்டிபிகேட் வாங்குவதென
சபதமெடுப்பான் .
11மணிக்கு டிவியில் வரும்
லாட்ஜ் தாத்தாவிடம்,கெட்டு குட்டிச்சுவரா போய்ட்டீங்களேடா என திட்டு வாங்க பழகிக் கொள்வான்.

இறுதியாக அவனுக்கு ஒரு வினோத
ஆசை கலந்த பயம் கவ்விக்கொள்ளும்,
நாம கெத்து பார்ட்டியா
என சோதனை (டிரையல்)செய்து பார்த்துக்கொள்ளலாமா என
விபரீதமாக தோனும்.
அப்படி யோசித்ததற்கான தண்டனையோ .
என்னவோ,
எங்கு போனாலும் அவனை ஒருவன் ?வாட்ச் செய்வான்?
குறுகுறுவென பார்ப்பான் ?
கண்ணை ஜாடை மாடையாக காட்டித் தொலைவான்?

அவனா ?இவண் ?
என வெகுண்டெழுந்து ..
நெருப்புடா என சொல்லத் துணிவான்,
பதிலுக்கு அவ(ள்)ன் ?! நெருங்குடா என சொல்லித் தொலைக்குமே என்பதால்
டிரயல் செய்து பார்க்கும் திட்டத்தை கைவிடுவான்.

இவ்வளவு அல்லல்,அவதி,கஷ்ட நஷடப்படும்
ஆண்களை ,இந்த சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குதான் பாரபட்சமாக ஒதுக்கித் தள்ளிவைக்குமோ எனத் தெரியவில்லை.

பிரபலமான பதிவுகள்