Loading

Friday, March 30, 2012

மின் கட்டண உயர்வு -ஒரு கடுப்பு பார்வை


இதோ ,அதோ என இழுத்தடித்து ,மீண்டும் ஒரு விலை ஏற்றத்தை மக்கள் தலையில் இறக்கி வைத்து விட்டது .காரியம் முடிஞ்ச பின்ன ,கைவிடுறது ,காதலனோட பழக்கம் மட்டுமில்லை ,கழக அரசோட 
பழக்கமும் அதுதான்னு தெளிவாக உணர்த்திவிட்டது ,இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு .

கடந்த ஆதிமுக ஆட்சியில்  ,அரசு ஊழியர்கள் மீது பாய்ந்த  அம்பு ,இந்த முறை சாமன்ய மக்களின் 
மீது பாய்ந்திருக்கிறது. இதுதான் நிர்வாகத் திறன் என்று ,எந்த மடையன் அல்லது மடையச்சி சொன்னான்(ள்) என தெரியவில்லை . இருக்கும் விலைவாசியே ,மக்களுக்கு சொல்லொண்ணாத் துயரை தருகையில் ,மீண்டும் மக்களை வதைக்க வந்திருக்கிறது இந்த உயர்வு .

இந்த கட்டண உயர்வுக்கு ,ஒரு சமாளிப்பு வேறு சொல்லியிருக்கிறார்கள் .நூறு யூனிட்டுக்கு மேல்
உபயோகிப்பவர்களுக்கு மட்டும்தான் கட்டணம் உயற்றப்படுமென .இந்த சப்பைக்கட்டு எல்லாம் 
திமுக ஆட்சியிலையே நாங்கள் பழகிவிட்டோம் .
பேருந்துகளை தினுசாக விட்டு ,விலையை ஏற்றியது போல் ,நீங்கள் எந்த மாதிரியான கோல்மால் 
செய்வீர்கள் என மக்களுக்குத் தெரியாதா ?
ஊழல் புரிந்த பணத்தில் ,கால்வாசியை கஜானாவிற்கு திருப்பி விட்டாலே போதுமே ,இந்த விலை ஏற்றத்தை தவிர்த்து விடலாமே .


சரி விலையை ஏற்றி விட்டாச்சு ,நீங்கள் ஏற்றிய மின்கட்டண அறிவிப்பு இங்க இருக்கு ,மின்சாரம் எங்கேன்னு மக்கள் கேட்டா ,என்ன பதில் சொல்வீங்க ? பொழுது விடியுறதும் மின்'வெட்டுல,பொழுது அனையுறதும் மின்வெட்டுல. இந்த லட்ச்சனத்துல வக்கணையா ஒரு அறிவிப்பு .
உங்களுடைய ஆட்சி ,என்ன மாதிரியான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என தெள்ளத் தெளிவாக சொல்கிறது  . வெற்றி தந்த போதை ,அதிகாரம் கிடைத்ததால் வந்த  ஆணவம் 
உங்களின் ஒவ்வொரு  நடவடிக்கைகளிலும் தெரிகிறது .

உங்களின் கட்டண உயர்வு அறிவிப்பு -அண்ணா நாமத்தை சுலபமாக வாழவிட்டு   விடாது .


ராமஜெயத்தின் படுகொலை !சொல்வது என்ன ?


திமுகவின் பெரும்புள்ளி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ,நேற்று மர்ப நபர்களால் கடத்தப்பட்டு
கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .கொலை எதனால் நடந்தது என்று குறிப்பாக சொல்லமுடியாவிட்டாலும்
ராமஜெயத்தின் பல அடாவடி செயல்களில் ,பாதிக்கப்பட்ட மற்றொரு கும்பல்தான் இந்த காரியத்தை செய்திருக்கிறது
என்பதை சுலபமாக ஊகிக்க முடிகிறது .

கடந்த ஆட்சியில்தான் ,ராமஜெயத்தின் கரங்கள் திருச்சி முழுவதும் ,அசுரத்தனமாக அத்தனை இடங்களையும்
வளைத்து போட்டிருக்கிறது . திருச்சியின் மையமே  தான்தான் எனும்படியாக ,அவர் நடந்துகொண்ட விதத்தை
திருச்சி மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் .2007ல் ரியல் எஸ்டேட் ,தொழில் போட்டி தகராறில் இருவரை ,காரோடு எரித்துக்கொன்ற சம்பவத்தில்தான்
முதன் முதலில் ராமஜெயத்தின் பெயர் ,அனைவருக்கும் பரிச்சயமானது .திருச்சியின் ஆட்சியே ராமஜெயத்தின் கையில் இருந்ததால்
தட்டி கேட்க ஆளில்லை  .எந்த ஒரு முறைகேடான விசயத்தையும் ,மறைமுகமாக செய்யாமல் ,வெளிப்படையாக
அடாவடி ஆட்களுடன் காரியத்தை முடித்த விதம் சொல்லி மாளாது .
நிலம் சம்பந்த பட்ட விஷயத்தில்தான் ,ராமஜெயத்துக்கு ஆர்வம அதிகமாக இருந்திருக்கிறது .திருச்சியில் உள்ள பல நிறுவங்கள் 
ராமஜெயத்திற்கு கப்பங்கள் கட்டியிருப்பதாக ஒரு தகவலும் வெளிவந்தது உண்டு. பதவி வெறி கொடுத்த போதையில் 
சகட்டு மேனிக்கு பகையை வளர்த்த ராமஜெயம் ,ஆதிமுக ஆட்சி வந்த பிறகு ,ரெய்டில் சிக்கி ,ஜெயிலுக்கு போக அஞ்சி , ,துபாய்க்கு தப்பியோட முயற்சித்தார் .
இதை தெரிந்து 
காவல்துறை ,ராமஜெயத்தை  விமான நிலையத்தில் பிடித்து  ,கோர்ட்டில் ஒப்படைத்தனர் .சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்ததை 
அறிந்துகொண்டு ,இதுதான் சமயமென ,கொலைகும்பல் ,காலை நேரமாக பார்த்து கதையை முடித்திருக்கிறார்கள் .

அராஜகம் ,அட்டுழியத்தில் ஈடுபடுவது பல 
விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ராமஜெயத்திற்கு தெரியாமல் 
போனது துரதிஷ்டமே . கடந்த கால சம்பவங்களைப் பார்த்தால் திமுக புள்ளிகளுக்கு ,எப்போதுமே காலை நேரம் கெட்டதாகத்தான் அமைந்திருக்கிறது .
திமுகவில் பல ராமஜெயம்கள் ,இந்த சம்பவத்தை பார்த்து திருந்துவார்களா என்றெல்லாம் தெரியாது .காலையில் வாக்கிங் 
செல்வதை தவிர்ப்பார்கள் என்பது மட்டும் தெரிகிறது .. 
 

Monday, March 26, 2012

Seeking justice (ஹாலிவுட் சினிமா விமர்சனம் )நிகோலஸ்கேஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் !பல முடிச்சுகளோடு கதையை நகர்த்திய
விதத்தில் seeking justice கவனத்தை ஈர்க்கிறது !


நிகோலஸ் கேஜ் ஒரு ஸ்கூல் டீச்சர் ,அவருக்கு ஒரு அழகான மனைவி !இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி 
கொண்டிருக்க ,துரதிஷ்டவசமாக நிகோலஸின் மனைவியை ஒருவன் கற்பழித்து காயப்படுத்துகிறான் .
மனைவியை மருத்துவமனையில் பார்த்து ஆத்திரப்படும் நிகோலசை ,சைமன் என்பவன் சந்தித்து 
உன் மனைவியை கற்பழித்தவனை தண்டிக்க வேண்டுமா என கேட்க்கிறான் ,முதலில் தயங்கும் நிகோலஸ் 
பிறகு சம்மதிக்கிறான் !
சைமன் சொன்னபடியே,நிகோலஸ் மனைவியை  கற்பழித்தவன் மறுநாள் காலை கொலையாகி கிடக்கிறான் .

ஆறு மாதம் கழித்து ,நிகோலஸுக்கு ஒரு போன் கால் வருகிறது .சைமன் பேசுகிறான் .தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமென .
நிகொலஸுக்கு சைமனை பிடிக்காவிட்டாலும் ,தன் மனைவியை கற்பழித்தவனை கொன்றதற்கு உதவி புரிந்ததால் 
சம்மதித்து ,என்ன உதவி வேண்டுமென சைமனிடம் கேட்கிறான் நிகோலஸ் .
சைமன் ,ஒரு கொலையை செய்ய வேண்டுமென நிகோலஸுக்கு கட்டளையிடுகிறான் .அதை மறுக்கும் நிகோலஸ் 
சைமனை திட்டி அனுப்புகிறார் .இருந்தும் சைமன் ,தொடர்ந்து நிகோலஸ்சை நச்சரித்துக்கொண்டே இருக்கிறார் .இதனால் 
மனம் வெறுத்துப் போன நிலையில் ,கொலையை செய்ய அரை மனதுடன் சம்மதிக்கிறார் .கொலை செய்ய வேண்டிய நபரின் 
போட்டோவையும் ,அவர் செய்த செக்ஸ் குற்றங்களையும் ,ஒரு கவரில் கொடுத்து அனுப்புகிறான் சைமன் .
சைமன் சொன்ன இடத்திற்கு வருகிறான் நிகோலஸ் . தான் கொலை செய்யப்போகும்  நபரிடம் பேசிப்பார்க்கலாம் 
என நிகோலஸ் முயற்சிக்கும்போதே ,நிகோலஸ்சை தாக்க முயற்சிக்கிறான் .தாக்குதலில் இருந்து தப்பிக்க நிகோலஸ் முயற்சிக்கையில் 
தாக்கியவன் பாலத்தில் இருந்து விழுந்து மரணமடைகிறான் .
இதைக்கண்டு பயந்து போன நிகோலஸ் ,வேகமாக வீட்டிற்கு வருகிறான் .வீட்டிற்கு வந்த ,அடுத்த மணிநேரத்தில் 
போலீஸ் நிகோலஸ்சை கைது செய்கிறது . நிகோலஸ் கொலை செய்யவில்லையென வாதிடுகிறார் .

எந்தப் போலிசும் நம்பத் தயாராக இல்லை .இறுதியில் ஒரு காவல்துறை அதிகாரி ,நிகோலஸ்சை ஓடச்சொல்கிறார் .
அவர் சொன்னபடியே அங்கிருந்து தப்பித்து , சைமன் யார் ? அவனின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க 
நிகோலஸ் எடுக்கும் முயற்சியே இந்த "சீக்கிங் ஜஸ்டிஸ் " திரைப்படத்தின் கதையாகும் .


பல வருடத்திற்கு முன்பு பார்த்த ,நிகோலஸ் இன்னும் அதே இளமையுடன் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது .நடுத்தர தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாம் 
பத்து வருடம் கழித்து ,தொப்பையுடன் காட்ச்சியளிக்கையில் ,நிகோலஸ் மட்டும் ,அதே உடலமைப்புடன் இருப்பது ,ஆச்சர்யத்தை 
அளிக்கிறது .நிகோலஸ்சிற்கு இந்த மாதிரி படங்கள் அழகாக பொருந்துகிறது .அவருடைய மனைவியாக வருபவரும் ,தன்னுடையை 
பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் .கார் சேசிங் காட்சி ஒன்றில் ,கேமேராவின் மெனக்கெடல் நன்றாக தெரிகிறது .வழமையாக வரும் ஹாலிவுட் சினிமா ,கிளைமாக்ஸ் 
டச் ,இந்த படத்திலும் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .

seeking justice - தேட முயற்சித்து இருக்கிறது 

Tuesday, March 13, 2012

THE DIRTY PICTURE (சில்க் ஸ்மிதா )


1980களில் நம் வாழ்க்கையில் கவர்ச்சி போதையாக தெரிந்த சில்க் ஸ்மிதா ,அவளின் வாழ்க்கை
சிறப்பாக இருந்ததா என்ற கேள்விக்கு
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அலசும் இந்த படம் சொல்கிறது . முதலில் நம்முடைய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை பதிவு செய்ததற்காக DIRTYPICTURE குழுவினருக்கு வாழ்த்துக்கள் .இந்த திரைப்படத்தில்
சில்க் ஸ்மிதாவாக நடித்து ,சமீபத்தில் தேசிய விருது பெற்ற வித்யாபாலனுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் .
இந்த படத்தின் கதை ஒரு இயக்குனரின் மூலம் சொல்லப்படுகிறது .
ஒரு கிராமத்தில் பிறந்து ,சினிமாவுலகுக்கு வர ஆசைப்படும் வித்யாபாலன் (சில்க்ஸ்மிதா ) அதன்படியே அவளின் அம்மாவுடன் 
நகரத்திற்கு வருகிறார் .முதலில் சான்ஸ் கிடைக்க சிரமப்பட்டாலும் ,மனதில் எந்த தாழ்வுமனப்பான்மை இல்லாமல்   அப்போது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறாள்
பின்னாளில் ,எதேச்சையாக ஒரு கவர்ச்சி பாடல் காட்ச்சியால் ஓவர்நைட்டில் புகழடைகிறார். 
அப்புறம் படவுலகின் சூப்பர்ஸ்டார் சூர்யகாந்தை வளைத்து போடுகிறார் வித்யாபாலன் .சூர்யகாந்த் அவரை 
வெறும் படுக்கையறைக்கு மட்டுமே உபயோகித்து கைவிடுகிறார் .இதனால் முதலில் மனம்உடையும் வித்யாபாலன் 
அடுத்து சூர்யகாந்தின் தம்பி ரமாகாந்தை காதலிக்கிறார் ..அவர் சில்க்ஸ்மிதா யாருக்கும் அடங்கமாட்டார் என்பதை புரிந்துகொண்டு 
அவரும் கைவிடுகிறார் ..இதனிடையே புகழின் உச்சியில் இருந்த வித்யாபாலன் படிப்படியாக திரைப்பட வாய்ப்பில்லாமல் தல்லாடுகிறார் .வித்யாபாலனின் 
அம்மாவும் அவரை வெறுக்கிறார் .
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டிருந்தார் . அந்த நேரத்தில் முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் (இவரின் மூலம்தான் கதை சொல்லப்படுகிறது )
வித்யாபாலன் மீது கரிசனம் கொள்கிறார் . ஆனால் வித்யாபலனை ஆரம்பத்தில் குறைசொல்லியே வந்த இந்த இயக்குனரை வித்யாபாலன் அவ்வளவாக கண்டுகொல்வதில்லை .

வித்யாபலனுக்கு கடன்தொல்லை கழுத்தை நெறிக்கிறது.சான்ஸ் கேட்டு போராடுகிறார் .இறுதியில் அவருக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறது .நிர்வாண படத்தில் நடிக்கச்சொல்லி..
வேறுவழியில்லாமல் போதையில் சம்மதம் தெரிவிக்கிறார் ..அதன்பின் உண்மையை உணர்ந்து அழுகிறார் ..அழுதுகொண்டே ஒரு முடிவு எடுக்கிறார் .இதை அந்த இயக்குனரிடம் 
சாடை மாடையாக சொல்கிறார் வித்யாபாலன் ..இயக்குனர் வித்யாபாலனின்  வீட்டுக்கு வந்து பார்கிறார் .வித்யாபாலன் தூக்கமாத்திரை விழுங்கி தற்கொலை செய்துகொன்டதை 
பார்த்து அதிர்ச்சியடைகிறார் ..அத்துடன் முடிகிறது இந்த திரைப்படம் ..

வித்யாபலனின் நடிப்பை ,அந்த கேரக்டரின் ஈடுபாடை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் .வாழ்கையை அதன் போக்கில் விட்டுவிடுவது ,எதையும் ஸ்போர்ட்டிவாக
எடுத்துகொள்ளும் வித்யாபாலன் ,அப்படியே சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார் .1980களின் ஹீரோக்களை சூர்யகாந்த நியபகப்படுத்துகிறார்
நாக்க முக்க பாடலை வித்யாபலனின் அதிரடி ஆட்டத்திற்கு பின்னணி இசையாக சொருகிஇருக்கிறர்கள் .


என் பள்ளிப்பருவத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் ,சில்க்ஸ்மிதாவின் பாடல்களை அடிக்கடி பார்த்து ரசிப்பார் ..சில்க்ஸ்மிதாவையும் அவரையும் இணைத்து
நாங்கள் ஏதாவது சொன்னாலும் அவர் சந்தோசப்படுவார் .துரதிஷ்டவசமாக அன்றைய வருடமே சில்க்சஸ்மிதாவின் தற்கொலை செய்தியை கேட்டு அவர் குலுங்கிஅழுததை 
என்னால் நம்பமுடியவில்லை ..சில்க்ஸ்மிதாவை எவ்வளவு நேசித்து இருக்கிறார் என்பதை அவரின் அழுகை சொல்லியது .சில்க்ஸ்மிதா ..ரசிகர்களுக்கு போதையை ஏற்றி 
தானும் போதையால் வீழ்ந்த சில்க்ஸ்மிதா இன்றும் ஒரு மர்மம்தான் .

Saturday, March 10, 2012

அரவான் (தமிழ் சினிமா )


பதினெட்டாம் நூற்றாண்டில் களவுத்தொழில் செய்து வந்த கிராமங்களை சூழ்ந்து கதை பின்னப்பட்டு இருக்கிறது .
காவல்கோட்டம் நாவலின் சிறு பகுதியை ,திரைக்கதையில் இணைத்து சொல்லப்பட்டிருக்கும் அரவான் ,தமிழ் சினிமாவுக்கு
கொஞ்சம் புதிது என்றே சொல்லலாம் .வெயில் ,அங்காடித்தெரு இயக்குனரின் அசரவைக்கும் படைப்புதான் இந்த அரவான்


ஆதி (வரிப்புலி ),பசுபதி(கொம்ப்பூதி ) ,பரத் ,கரிகாலன் ,சிங்கம்புலி ஆகியோர் வாழ்ந்திருக்கும் திரைப்படம் இந்த அரவான் .

ஆரம்பக்காட்சிகளிலியே களவுத்தொழிளில் ஈடுபடும் பசுபதி குழுவினரின்(வேம்பூர் கிராம மக்கள் ) ஒவ்வொரு செயலும் ,மிக நேர்த்தியாக
காட்டப்பட்டு மனதை ஈர்க்கிறது .அடுத்தடுத்த காட்சிகளில் ,களவுத்தொழில் செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கும் என்று 
சொல்வதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது . அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த ராணியின் வைரமாலையை திருடியதாக வேம்பூர் கிராமத்தின் மீது
பழி விழுகிறது .அதை தாங்கள் செய்யவில்லை , வைரமாலையை திருடியவனை கண்டுபிடித்து பொருளை கொண்டுசேர்ப்பதாக 
பசுபதி, அரண்மனை காவலாளிகளுக்கு வாக்கு கொடுக்கிறார்.சொன்னபடியே திருடனை சந்தையில் கண்டுபிடிக்கிறார்'.
அந்த திருடன்தான் ஆதி (வரிப்புலி ). பசுபதிக்கு ,ஆதியின் களவாடும் யுக்தி பிடித்திருப்பதால் ஆதியையும் வேம்பூர் கிராமத்தில் தங்கவைக்கிறார்.
ஒரு கட்டத்தில் ,காளையை அடக்கும் போட்டியில் வேம்பூர் கிராமத்திற்கு சவால் விடுகிறார் ஒரு பெரியவர் .சவாலை ஏற்று 
பசுபதி காளையை அடக்கப் போனதில் ,பலத்த காயம் ஏற்பட ,வேறுவழியில்லாமல் ஆதி காளையை அடக்க களமிறங்குகிறார் .
என் அம்மாவின் பூர்விக ஊர் வேம்பூர்தான் என்று கூடியிருந்த மக்களிடத்தில் சொல்லிவிடுகிறார் . இந்த செய்தியை கேட்டுவிட்ட கரிகாலன் 
ஆதியை அடித்து ,உதைத்து இழுத்துச்செல்கிறார்.


இதைப் பார்த்த பசுபதி ,தட்டி கேட்கும்போது  ,ஆதி ஒரு கொலையாளி ,அதனால் அவனை பலியிடப்போகிறோம் என்று கரிகாலன் கூறுகிறார்.
ஆதியின் பிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது .ஆதியும் ,நண்பர்களும் காவல் காக்கும் பணியைச் செய்கிறார்கள். அந்த நேரத்தில் வந்தேறி பரத்தை யாரோ கொலைசெய்து விடுகிறார்கள்
அந்த கொலை ஆதியின் ஊரில் வைத்து செய்யப்பட்டதால் , அந்த ஊரின் இளைஞர் ஒருவரை பலியிட வேண்டும் என்று கரிகாலன் சொல்கிறார்'
அதை ஒப்புக்கொண்ட ஆதியின் ஊர்க்காரர்கள் , துரதிஷ்டவசமாக ஆதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.. ஆதி அதற்குள் கொலையாளியை கண்டுபிடிக்க 
முயற்சி செய்கிறார் ? தீவிர முயற்சிக்குப் பின் பரத்தை கொன்றது ஜமீந்தார் என கண்டுபிடிக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு ஊர் போய் சேர்வதற்குள் 
ஆதியின் நண்பனை பலியிட்டு விடுகிறார்கள் .இதனால் ஊரே ஆதியை வெறுக்க ,ஆதி தலைமறைவு வாழ்க்கையாக ஊர் ஊராக சுற்றித் திரிகிறார்.அப்படிதிரிந்து தான் 
கரிகாலனிடம் கடைசியில் மாட்டிக்கொள்கிறார்..இறுதியில் ஆதியை கொன்றார்களா ?  ஆதியை பசுபதியால் காப்பாற்ற முடிந்ததா என்பதை திடுக் 
கிளைமாக்ஸ்சுடன் படத்தை முடிக்கிறார்கள் .
திரைப்படத்தின் பிளஸ் என்று  பார்த்தால் வசந்தபாலனின் திரைக்கதை நேர்த்திதான் .ஒவ்வொரு காட்சியும் ,ரசிகன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
நிறைய மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். பாடகர் கார்த்திக் முதன்முதலாக இசையமைத்து இருக்கிறார்.பாடல்கள் அருமை..பின்னணி இசைதான் கொஞ்சம் இரைச்சல் .
சிங்கம்புலியின் கொஞ்சூண்டு கலாட்டாக்கள் ரசிக்க வைக்கிறது .பரத் ,அஞ்சலிக்கு சிறு கேரக்டர் மட்டுமே ஆனாலும் ,கதையுடன் நன்றாக பொருந்துகிறார்கள்.

ஆதியின் முறுக்கேறிய உடம்பு ,வரலாற்று படத்திற்கான பாத்திரத்தை அப்படியே நிஜமாக்குகிறது. வசன உச்சரிப்புகளும் வட்டார மொழிப்பேச்சிற்கு 
நன்றாகவே பொருந்துகிறது.பசுபதி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் நிலைக்கிறார்.முதல்பாதியில் அவர்தான் திரைக்கதையை தாங்கிப்பிடிக்கிறார்.

மொத்தத்தில் அரவான் - தமிழ் ரசிகர்களை அரவனைத்துவிட்டான் .


Friday, March 9, 2012

முப்பொழுதும் உன் கற்பனைகள் !(தமிழ் சினிமா )

அதர்வா ,அமலாபால் ,மற்றும் சந்தானம் நடித்த திரைப்படம் .


அதர்வா (ராம் )ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் இளைஞன் .அதர்வாவுக்கு சாருலதா (அமலாபால் ) என்ற காதலி இருக்கிறாள்,
இருவரும் ஒரே பிளாட்டில் வசிக்கிறார்கள் . அதேநேரத்தில் அமலாபாலுக்கு அமெரிக்காவில் திருமண நிச்சயம் நடக்கிறது .சொந்தங்களை பார்ப்பதற்காக
இந்தியாவுக்கு திரும்பிவருகிறார். இங்கு வந்து பார்க்கையில் ,அமலாபாலின் அலுவலகத்தில்தான் அதர்வா வேலை பார்க்கிறார் என்பது தெரிகிறது. அதர்வாவுக்கு அமலாபால்
யாரென்பதே தெரியவில்லை .அதர்வாவின் காதலியிடம் ,உன்னைப் போலவே எங்கள் அலுவலக எம்டி(அமலாபால் ) இருக்கிறார் என சொல்கிறார் .

அமலாபாலுக்கு சந்தேகம் வருகிறது.ஏனென்றால் ,அமலாபாலுக்கு அதர்வாவுடன் நட்புடன் பழகியது நினைவுக்கு வருகிறது அதர்வா யாருடன் குடும்பம் நடத்துகிறார்,
யாருடன் செல்போனில் பேசுகிறார் ,என்று அறியும் ஆவலாய் ,பிளாட்டுக்கு ஒரு
மனோதத்துவ நிபுணருடன் செல்கிறாள் .அங்கு போய் பார்த்தால் ,அதர்வா மட்டும் தனியாக அமலாபாலுடன் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு வாழ்கிறார் .
அவர் ஏன் அப்படி வாழ்கிறார் ? என்பதை பிளாஷ்பேக்குகளுடன் சொல்லி ஒரு வழியாக கதையை முடிக்கிறார்கள்.

முதல்பாதி  வரை நன்றாக கதையை நகர்த்திய இயக்குனர் எல்ரட்குமார் ,பிற்பகுதியில் மிகவும் சொதப்பிவிட்டார் .ஒரு த்ரில்லர் படத்துக்குண்டான கதையை ஆரம்பித்து
இடையிலையே அந்த சஸ்பென்சை உடைத்துவிடுவதால் ,படத்தின் மீது மேற்கொண்டு ஆர்வமாக ஓட்டமுடிவதில்லை .இதில் அதர்வாவின் கோபமான நடிப்பு
கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது .அமலாபாலின் எக்ஸ்ப்ரெஸன் ஓகே ரகம் .சந்தானத்தின் காமெடி ,ஏற்கனவே பழகிய விஷயம் என்பதால்
பெரிதாக ஒன்றுமில்லை .

இசை ஜிவி.பிரகாஷ் .ரெண்டு பாடல்கள் இப்போதைக்கு தேறுகிறது. fightclub படம் போல் ,சிறப்பாக எடுத்திருக்கவேண்டிய படத்தை ,சொதப்பலான திரைக்கதையில்
கோட்டைவிட்டு இருக்கிறார்கள் .

முப்பொழுதும்' உன் கற்பனைகள் - கற்பனை வறட்சி !
Immortals (ஹாலிவுட் சினிமா )


இந்த சரித்திரகால ஆக்சன் படங்கள் ,எப்பவுமே வரவேற்பை பெறுபவை .அதன் நேர்த்திக்காகவே அந்த படங்களை ரசித்துவிட்டு வரலாம் .
அப்படி ரசித்த படம்தான் immortal.
கதை ரொம்ப சின்னதுதான் .தீயசக்திகளுக்கும் ,நல்ல சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதே கதையின் ஒன்லைன்.
இந்த ஒன்லைன் டெவலப் செய்த விதத்தில் ,மிகத் திறமையாகவே திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

இனி கதையின் சுருக்கம் .

ஹைபீரியன் என்ற அரக்க வீரர்கள் , எபிரஸ் அம்பு என்ற புனித அம்பை தேடி அலைகிறார்கள் .அந்த அம்பை கைப்பற்றிவிட்டால் 
உலகை ஆளலாம் என்ற எண்ணம் தான் முதன்மையான காரணம் .அந்த புனித அம்பை எடுப்பதற்காக ,ரகசியம் தெரிந்த மதகுருக்களை இம்சிக்கிறார்கள்.
அம்பு இருப்பதாக சொல்லப்படும் இடங்களில் உள்ள மக்களையெல்லாம் துன்புறுத்துகிறார்கள். அதில் ஹீரோவின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.நிறைய இளைஞர்கள்
எதிர்த்து போராட முன்வருகிறார்கள் .ஹீரோ அதை தன் தாய்க்காக மறுக்கிறார். இருந்தும் ,அரக்க எதிரிப்படை ,அவர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து
அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள் ,அதில் நாயகனின் அம்மாவும் ஒன்று .இதை சகிக்கமுடியாத ஹீரோ ,அவர்களை எதிர்த்து ஒற்றை ஆளாக 
சண்டையிட்டு சரண் அடைகிறார்.

இவரைப் போலவே ,அங்கு நிறைய பேரை சிறைப்படுத்தி அடிமைகளாக வைத்து இருக்கிறார்கள். அங்கு கதையின் நாயகி 

Freida Pinto

(வருவதை முன்கூட்டியே கணிக்கும் தெய்வப்பிறவி )
உதவி செய்து ,நாயகனுடன் சேர்ந்து தப்பிக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் அந்த புனிதஅம்பை நாயகன் கைப்பற்றுகிறார் .இருந்தும் ஒரு அசம்பாவித சூழ்நிலையில் 
அம்பை எதிரிப்படையிடம் தவறவிடுகிறார். அரக்க வீரர்கள் போருக்கு தயாராகிறார்கள் . இந்த அரக்க வீரர்களை எதிர்த்து போரிட ,முன்னமே இளைஞர்கள் படை தயாராக இருக்க 
அதில் நம் ஹீரோவை இணைத்துக்கொள்கிரார்கள். இறுதியில் எந்த சக்தி ஜெயித்தது என்பதை ,சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள் .

கலை நேர்த்திதான் எனக்கு இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் .கதையின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்பதால் ,அந்த காலத்தில்
மலைகளை குடைந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நேர்த்தியுடன் செய்து இருக்கிறார்கள் . இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அவ்வளவு தேவை இல்லையென்றாலும்
ஸ்பெசல் எபெக்ட்ஸ் நன்றாக எடுபடுகிறது .


இம்மார்டல் -ஆக்சன் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிற படமாக அமைந்து இருக்கிறது !

பிரபலமான பதிவுகள்