Loading

Sunday, June 26, 2016

நியாயமாரே !!!

ஆள் அரவமில்லாத
ரோட்டில் நடந்துகொண்டிருந்தேன்,
திடிரென கண்முன்
100ரூபாய் தாள் கொண்ட
கட்டொன்று தட்டுப்பட்டது.
அனேகமாக 10,000ரூபாயாக
இருக்கலாமென யூகிக்க முடிந்திருந்தது.
யாரும் தவறி விட்டு விட்டார்களாவென சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ஓரமாக படுத்துக்கொண்டிருந்த நாயைத் தவிர யாருமில்லை,
கீழே கிடக்கும் பணக்கட்டை
எடுத்துவிடலாமா என மனம் சபலப்பட்டது,
உண்மையில்
சபலப்பட்டது என்று சொல்வதை
தாராளமாய் எடுக்கலாமென்று
என்னை சமாதானப்படுத்தியது.
இருந்தாலும் மனதின் மற்றொரு
நேர்மையான முகம் ,
என்னிடம் விதண்டாவாதம் செய்தது.
பணக்கட்டை முதன் முதலில் பார்த்த்து,
"நீயா அல்லது நாயா என ?"
நாய்தான் என்பதை ஒப்புக்கொண்டாலும்,
இந்த பணத்தை ,நாய்
வைத்துக்கொண்டு, ஆக்சிஸ் பேங்கில் அக்கவுண்டா ஆரம்பிக்கப் போகிறதென
எனக்குள்ளே பேசிக்கொண்டேன்.
என்னதான் இருந்தாலும்
முதலில் அந்த பணக்கட்டை பார்த்தது நாய்தான் என்பதால்,
அதற்குறிய பங்கை கொடுத்துவிடலாமென
முடிவெடுத்து,
20ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட்
வாங்கி ,
வைத்துவிட்டு நடையை கட்டினேன் .
நாய் மட்டும் தனியாக ...
"நியாயமாரே" என அதன் பாஷையில் நெடுநேரமாக கத்திக்கொண்டிருந்தது .

Friday, June 24, 2016

CONTENT கந்தசாமி

எனக்குத் தெரிந்த ஒரு மேனேஜர்
இருக்கிறார்.அவர் ஒரு வித்தியாசப் பேர்வழி என்பதை விட வினோதப் பேர்வழி
எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும் .
அவரிடம் யார் பேசச் சென்றாலும்
CONTENT டாக தான் பேச வேண்டும் .வள வள பேச்சுக்கு இடமில்லை.இந்த பழக்கம் இப்போது முத்திப்போய்
அவரின் அம்மாவிடம் கூட CONTENT இல்லாம ஏன் பேசுறனு
கேட்கும் அளவுக்கு போய்விட்டது .
காலையில் சாப்பிடும் பிரேக்பாஸ்டை கூட ,
பசிக்குது மா,சாப்பாடு கொண்டு
வாங்க என கெஞ்சலாக சொல்லாமல்,
பிரேக் பாஸ்ட் டைம் ஆகிடுச்சு,
CONTENT எங்கே என்று கேட்பதுதான் மேனேஜரின் ஸ்பெஷல் .
அவரின் அப்பாவிடம் கூட ,
சுகர் டேப்லேட் ,
பிரசர் டேப்லெட் எடுத்துக்கோங்கபா என பரிவோடு சொல்லாமல்,
சுகர்க்கு இந்த கண்டெண்ட் .
பிரசர்க்கு இந்த் கண்டெண்ட்
என கறாராக பேசித் தொலைக்குதாம் .
அவரின் ஆபிசிலும் இதே கதைதான் .ஆபிஸ் பாய் ,
குட் மார்னிங் சாரென சிரித்துக்கொண்டே சொன்னால்,
ஏன் எப்பவுமே ரெடிமேடாவே விஷ் பண்ணுற ,ஏதாவது CONTENT டோடு விஷ் பண்ணுயாவென
ஆபிஸ் பாயை கூட ,கிறுகிறுக்க வைத்து கீழ்பாக்க ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்துவிட்டார்
இதற்கெல்லாம் ஒரு படி மேலே
ஒரு விசயம் நடந்திருக்கிறது.
போன வாரம்,
மேனேஜருக்கு பொண்ணு பார்க்க போனார்கள்,போன இடத்தில்
நம்ம மேனேஜர் உம்மென்று இருக்க,
பெண்ணிடம் தனியாக பேச பிரியப்படுகிறார் என நினைத்து,
மேனேஜரையும்,
பெண்னையும் தனியறையில்
விட்டிருக்கிறார்கள்,
சில நிமிடமாகியும் மேனேஜர் பேசாததால்,
அந்த பெண்ணே,
ஹாய்,ஹலோ என ஆரம்பித்திருக்கிறார்,
நம்ம மேனேஜர் அப்பெண்ணை ,
ஏற இறங்க பார்த்துவிட்டு,
"CONTENT "இருக்காவென கேட்க ,
அப்பெண் பயந்துபோய்,
சேலை எதுவும் விலகியிருக்கிறாதாவென பதறிப்போய்
சேலையை அட்ஜஸ்ட் செய்து,
ரூமை விட்டு ஓடியிருக்கிறார்.
கடைசியில்
பெண்ணின் பெற்றோரிடம்
""காமக்கொடுரா""
என ஸ்பெஷல் பாராட்டு வாங்கி வந்ததுதான் மிச்சம் ..
இப்படி CONTENT வெறி பிடிச்ச மேனேஜரின் கழுத்தில்,
மணி கட்டுவது போல்,
ஒருநாள் மேனேஜருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு,
படுத்த படுக்கையாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார்,
டாக்டரிடமும் கண்டெண்ட் புராணத்தை
ஆரம்பித்திருப்பார் போல,
வாயில் டியுப் வைத்து அடைத்துவிட்டிருந்தார்கள் ..,
மேனேஜரின் அப்பாவும்,
அம்மாவும் கனிவுடன் கவனித்து
வந்ததை படுக்கையில் இருந்த
மேனேஜரும் கவனித்திருக்கிறார்.
அவரை பார்க்க வந்த உறவினர்களும் ,
ஆபிஸ் கொலீக்களும் ,
உடம்பை பார்த்துக்கங்க சார்,
உங்களுக்கு ஒன்னும் ஆகாதென
நலம் விசாரித்துப் போனதில்
மேனேஜரின்
மனதில் ரசாயனமில்லாத மாற்றம் நிகழ்ந்து ,
ஒன்றை புரிந்துகொண்டார் ..
நேசம் ,பாசம்,
அன்பு ,அக்கறை
இவற்றில் CONTENT எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
என்பதை அவரின் கண்களில்
விழுந்த கண்ணீர் மேலும் உறுதிப்படுத்தியது .

Wednesday, June 22, 2016

பார்த்த முதல் நாளே !

10நாட்களாக
கடும் உழைப்பை
செலவழித்து ?! டிவி
பார்த்துக்கொண்டிருந்ததால்,
அதிகாலை 11மணிக்குதான்
கண்விழிக்க முடிந்தது !
நீண்ட நாட்களுக்கு பிறகு ,
தலை ,கனமாக இருப்பதைப் போல உணர்ந்தேன்..
நேற்றுதான் டெட்பூல் படத்தை
பார்த்து தொலைத்திருந்தேன்,
ஒருவேளை டெட்பூல் தான் என்
தலையில் பாறாங்கல்லை
கட்டி வைத்து தொலைத்துவிட்டானோ என
தூங்கு மூஞ்சியுடன் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ச்சே அப்படியெல்லாம் இருக்காதென சமாதானமடைந்தாலும் ,கனம் குறைந்தபாடில்லை,ஒருவேளை
சிறு வயதிலிருந்தே வளராத
என் மூளை தான் ,திடிரென
வளர்ந்து அறிவாளியா போய்ட்டேனானு அல்ப சந்தோசப்
பட்டாலும்,சுவற்றில் மாட்டியிருந்த என் தாத்தா ஃபோட்டோ ,அதெல்லாம் நம்ம பரம்பரைக்கே இல்லடா என உறுதிபடுத்தியதால், கஷ்டப்பட்டு என் கையை தூக்கி தலையைத் தடவிய போதுதான் தெரிந்தது,
கொரியன் குரங்கு போல
என் தலைமுடி வளர்ந்து தொலைத்திருக்கிறதென ..
சரி ,இனி விட்டுவைத்தால் ஜூவில் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள் என்பதால்,கஷ்டப்பட்டு
பக்கத்து தெரு "நியுலுக் "சலூன் கடைக்கு போய் தலையை கொடுத்து
தலைகனத்தை குறைத்த போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது,
சரி நம்ம ஸ்மார்ட் முகம் இப்போ எப்படியிருக்குனு கண்னாடியை
பார்த்தா ,
கண்ணாடி என் மண்டையை காறித்துப்பிக் கொண்டிருந்தது ..
அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியதை விட கேவலமாக கொத்தியிருந்தான்,அடேய் இப்டியாடா குதறி வைப்பனு
எதிர்த்துக் கேட்டா ,பழைய ஹேர்கட் கடனை எல்லாம் கேப்பானேனு மன்னித்து தொலைத்து
வெளிய வந்தபோதுதான் ,
அவளை பார்த்தேன்..

"பிங்க் கலர் சுடியில்
என்னை பிங் பண்ணிக்கொண்டிருந்தாள் "!

ஊரே என் கேவலமான ஹேர் கட் மண்டையை பார்த்து கண் வைத்தாலும்,நான் காரியத்தில் காலாய் இருந்தேன் .

அந்த பிங்க் கலர் பேபி ?
அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தபடி,ஒருவரிடம் ஏதோ விசார்த்துக்கொண்டிருந்தது.
தனியொருத்திக்கு ஹெல்ப் எனில் இந்த ஜகத்தினை சுற்றிடுவோம் என்ற கோட்பாட்டின்படி,அவளுக்கு
உதவி செய்யத் தோன்றியது .

இந்த கெட்டப்பில் போனால்,
காஞ்சனா பட பேயென நினைத்து ,பயந்து போய் என் இடுப்பில் ஏறிவிடுவாள் என்ற பாசிட்டிவ் யோசனையும் ஒரு பக்கம் வந்து ,எனக்கு சப்போர்ட் செய்ததால் ,கேசுவலாக
அவளருகே சென்று,
"எனி ஹெல்ப் ஷாலினி " என்றேன்,என்னை ஏற இறங்க ஏழாம் கிரக ஏலியனைப் போல பார்த்துவிட்டு,
ஆமா ,என் பேர் உங்களுக்கு எப்படி தெரியுமென கேட்டாள் .
அப்போ நிஜமாவே உன் பேர் ஷாலினிதானா என உண்மையை விளம்பாமல்,
பேசிக்கலி ஐ ஆம்
வெட்டி,இதனால உங்க நேம் தெரிஞ்சிக்கிறதெல்லாம் வெரி ஈசியென ,தன்னடக்கத்துடன் சொன்னதும் ,சரி ஓக்கே ..இந்த அட்ரஸ் தெரியுமாவென அவள் காரியத்தில் கண்ணாயிருந்தாள் .
ஓ தெரியுமே ..
என அட்ரஸ்சை பார்க்காமலே சொன்னேன் .
பயப்படாம
வாங்க ...நான்  கூட்டிட்டு போறேன் என சொன்னதும்,
ஏதோ கடத்தல் ஏஜேண்டோ என
எண்ணத்தொடங்கி விடுவாளோ என நினைத்தேன்,ஆனால்
சரியான கைப்புள்ளயா இருக்கானேனு நினைச்சுட்டுதான் கூட வந்திட்டிருக்கானு ,எனக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கிட்டேன் .

இந்த நேரத்தில் ஷாலுவை (அதுக்குள்ள ஷார்ட் பார்மாடா என முறைக்காதிங்க ப்ளீஸ் )பற்றி வர்ணிக்காமல் போனால்,
தேச தூரோக வழக்கு பாய்ந்துவிடும் என்பதால் ,கொஞ்சூண்டு சொல்லிக்கிறேன்,

ஷாலினி என்ற பெயருக்கு ஏற்றது ? போல் சார்மிங்காக இருந்தாள்,இந்த சமந்தா ,மடொனா செபாஸ்டீன் எல்லாம் ஷாலுவுக்கு முன்னால் தூசி ....
ம்க்கும் ம்க்கும் (இருமல் )
சரி ..ஆங்காங்கே,
இந்த கதையை  வாசிக்கும் சிலர் என்னை முறைப்பதால் ஷாலுபுராணத்தை
நிறுத்தித் தொலைகிறேன் ..

எங்கே...
அந்த அட்ரஸ்ச காட்டுங்க என ஷாலுவிடம்  கேட்டதும்,உடனே கொடுத்தாள்,
அப்படியே கொஞ்சம் லவ் கேட்டாலும் ,உடனே கொடுத்திடுவாளாவென என் இல்லாத மூளை ஜொள்ளு கொட்டினாலும் ,அதை மறைத்துக்கொண்டு அட்ரஸ்சை பார்த்தேன்,

ஆம்பூர் பிரியாணி,
ஆட்டையாம்பட்டி நாய்க்குதான்  கிடைக்கனும்னு இருந்தா,
கிடைச்சுத்தான் ஆகும்ங்கிற மாதிரி,எங்க ஏரியா அட்ரஸ்சை,என்கிட்டயே காட்டுனா ஷாலு .

அடடா ..இந்த சந்தோசத்துக்கு
இப்ப நான் எதையாவது வாங்கியாகனுமேனு,
அந்த டீ எவ்ளோ விலைடானு
டீக்கடைக்காரண்ட கேட்டா,
ஒழுங்கு மரியாதையா ,பழைய அக்கவுண்டை கட்டுறானு பொறாமைல சொல்றான் .

அவனை அப்புறம் கவனிச்சிக்கலாம்,
ஓக்கே ஷாலினி,
ஆக்சுவலி இது எங்க ஏரியா அட்ரஸ் தான்,
ஆமா என்ன விசயமா வந்திருக்கீங்க ?


PG Course பண்ண ,இந்த ஊர் காலேஜ்ல தான் அட்மிஷன் கேட்டிருக்கேன் ,
அதான் அக்கா வீட்டுல தங்கி
படிக்கலாம்னு வந்திருக்கேன் என அவள் சொன்னதும்,

நகையணிந்த அனாதை பிணத்தை பார்த்த
ஏட்டையாவின் சந்தோசத்தை உணர்ந்தேன் ..
இனி வீட்டுக்கு போய் ,சகிலா  நடிச்ச ,ச்சி ஷாலினி நடிச்ச படமா பார்க்கனும்,
ஷாலினி போட்டோவ ரூம்ல மாட்டனும்,
ஷாலினிக்காக அஜித் ரசிகனா
மாறுற கன்றாவி ஒன்னுதான் கஷ்டம்,
மத்தபடி கொஞ்சம் ஈசிதான்னு
தன்னம்பிக்கை நினைப்புகள் என்னுள் நான் ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது .

ஒருவழியாக ஏழு கடல் தாண்டி,
ஏழு மலை தாண்டி ,
ஷாலினியை எங்கள் ஏரியாவுக்குள் அழைத்து சென்று
எனக்கு நானே இட்ட
கடமையை முடித்தேன் ..

இறுதியாக என்னைப்
பார்த்து
தேங்க்ஸ் ப்ரோ என்றாள்,
நானும் சிரித்துக்கொண்டே,
ஆமாங்க ..
ப்ரூ காஃபினா ரொம்ப பிடிக்குமென உளரிக்கொட்டினேன்.

புரிந்துகொண்டு சிரித்தாள் .
பற்றிக்கொண்டது காதல் .

நான்  கூட
காதல் ஒரு வெட்டி வேலை,
உதவாக்கரைகள் செய்ற டாஸ்க்னு நினைச்சேன்,
ஆனா அதெல்லாம் நமக்கு பிடிச்ச விசயமாச்சேனு தெரிஞ்சதும், இன்னும் தீவிரமா ஷாலு மேல காதல்
பரவிட்டு இருக்குது  .


அதெப்படிரா ஒரு நாள்ல ,
உடனே
உங்களுக்கு காதல் வருமென
அப்பாஸ் காலத்து கேள்வியை
கேக்கும் அச்சுபிச்சு அங்கிள்களுக்கு ...ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..

தமிழ்நாட்டுல பொண்ணு கிடைக்குறது ,
நேர்மையான ஆட்சி கிடைக்குறதை  விட ரொம்ப கஷ்டம்டா ,
சோ.. ஒரு நாள் என்ன ,
பார்த்த ஒரு செக்கண்ட்ல காதல் வந்தாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணித்தாண்டா ஆகனும் ..

Monday, June 20, 2016

கவிதா VS இனிதாகவிதா vs இனிதா !கவிதா என்னிடம் ஒரு வாரமாக பேசவில்லை ....
ஒரு மணிநேரம் பேசாவிட்டாலும் கூட ,அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்
கவிதா ,என்னிடம் பேசவில்லை
என்பதை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

கவிதாவிடம் எனக்குப் பிடித்ததே ,அவளின் கண்கள்தான் .நான் புவி ஈர்ப்பு விசையை ,ஒழுங்காக படித்தேனோ இல்லையோ ,
கவிதாவின் விழி ஈர்ப்பு விசையை எளிமையாக புரிந்துகொண்டேன் .கவிதாவினுடனான என் காதல் ,வரும் ஏப்ரல் மாதத்துடன்
மூன்று வருடம் ஆகப்போகிறது.இப்படிப்பட்ட நேரத்தில்தான் ,கவிதா என்னுடன் பேசவில்லை.

கவிதாவுக்காக் ,நான் வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களை விட ,
எனக்காக அவள் வாங்கிக்கொடுத்த பரிசுப் பொருட்களே அதிகம்..
பிரியத்துடன் என் தோல் மேல் சாய்ந்துகொள்வதும்,
 'போடா' "வாடா" என செல்லச்சண்டை
இட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள் .

சரி கவிதா ஏன் உன்னுடன்  பேசவில்லை என்று நீங்கள் கேட்பது  புரிகிறது ?
கேள்வி கேட்பது ஈசி ,பதில் சொல்வதுதான் ரொம்ப கஷ்டம் என்று கமல்ஹாசன் சொன்னதுதான் நியாபகத்திற்கு வருகிறது.
கவிதா ஏன் பேசவில்லை என்பது ,எனக்கே தெரியாத போது ,நான் எப்படி உங்களுக்கு பதில் சொல்ல முடியும்.
இருந்தாலும் பரவாயில்லை ,ஒரு வாரமாக இல்லாத மூளையை கசக்கி பிழிந்ததில்,
இனிதாவிடம் இதை கேட்டுவிடலாம் என்று தோன்றியது .

இனிதா ??????
ஆம் ,கவிதாவின் அழகுத்தங்கைதான் இந்த இனிதா .
அளவான உயரம்,
அளவான தேகம் ,
அளவில்லாத அழகு, என அத்தனை
அம்சமும் கொண்ட இனிதாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் .
பிரம்மன் படைத்திருக்க வேண்டிய படைப்பை ,
பாழாய்ப்போன குப்புசாமி (கவிதா ,இனிதாவின் தந்தை ) படைத்தது ஒன்றுதான்
என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை .

சரி விசயத்துக்கு வருவோம் ,இனிதாவிடம் கவிதாவைப் பற்றி கேட்டேன் ..

நான் : கவிதாவுக்கு என்னாச்சு ?ஏன் உம்முனு இருக்கா ?

இனிதா : எனக்கும் அதுதான் வருத்தமாயிருக்கு ரவி ,
          நம்ம காதலை ,கவிதாகிட்ட சொன்னதுல இருந்தே ,யார்கிட்டயும் பேசமாட்றா ,நீதான் அவளை சமாதானப்படுத்தனும் ..


நான் : அடிப்பாவி ,அவகிட்ட ஏண்டி சொன்ன ??????????????????

கல்ப்பனா !!க்கக்க்க்காதல் கதை !அம்மா அலாரம் கிளாக்கை எங்க வச்சீங்க ?
என்னடா ரமேஷ் ?
எதுக்கு இப்போ அலாரம் கிளாக் ?
ஒண்ணுமில்லைமா  ,நாளையிலிருந்து நானே காலையில எந்திருச்சு பால் வாங்கப் போறேன் ,நீ ஒன்னும் கஷ்ட்டப்படவேணாம் .

டேய் ரமேஷ் , நீயாடா இப்படி சொல்ற ? என்னால நம்பவே முடியலையே ..எப்படிடா உனக்கு நல்ல புத்தி வந்துச்சு ..

 ஏம்மா ,வளவளனு பேசாதம்ம்மா ... அப்புறம் நாளைக்கு பால் வாங்க போமாட்டேன் .

சரி சரி விடு ... நல்ல புத்தி வந்தா சரி .

அதிகாலை 10 மணிக்கு எந்திரிக்கிற நமக்கு ,நள்ளிரவு(என் கணக்குப்படி ) 6 மணி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் .
இருந்தாலும் வேறு வழியில்லை ..காரணம் கல்ப்பனா ..

புதிதாக எங்கள் தெருவில் குடியேறியவள். பெண்களை பற்றி கம்பன் எழுதிய கவிதைகளில் ஏதாவது ஒன்று இவளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை ,. ஆனால் எங்கள் தெரு கசாப்புக்கடை பாய் ,பாடும்
கூந்தல் கருப்பு ஆஹா ..
குங்குமம்  சிவப்பு ஓகோவென கோரஸ் பாடுமளவுக்காவது
கொஞ்சம் சுமாராக இருப்பாள்
,அவளை தனியே சந்திக்கும் வாய்ப்பே மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து தொலைக்கிறது ..காலேஜுக்கு  போகும்போது கூட ,
கல்லூரியின் வாகனத்தில் சென்றுவிடுவதால் பார்க்கும் வாய்ப்பு கிட்டித் தொலையவில்லை .

எப்படியாவது அவளை பார்த்து பேசிவிட வேண்டும் என்று
 இதுவரை யோசித்து பழகாத என் மூளையை கசக்கி பிழிந்து,
ஆய்வு நடத்தியபோது  வந்த யோசனைதான் ,
அதிகாலையில்
பால் வாங்கச் சென்றால் ,அவளை பார்த்து விடலாம் .

அதன்படி,,இதுவரை  வாழ்நாளில் பயன்படுத்திப் பார்க்காத அலாரம் கிளாக்கை தலைமாட்டில் வைத்துக்கொண்டு ,அலாரம் கிளாக்கிர்க்கு நான் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தேன் .
என் கணக்குப்படி அந்த நள்ளிரவு 6 மணியும் வந்தது .அப்பாவின் ஆஸ்துமாவிற்காக ,தனியாக வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரை வைத்து முகம் கழுவி ,தங்கை பயன்படுத்தும் க்ரீமை முகத்தில் அப்பிக்கொண்டு ,ஒரு தூக்குச்சட்டியை எடுத்து கிளம்பினேன் .

குப்பை பொறுக்கும் சாம்பு அண்ணன் ,எதிர் வீட்டு பங்கஜம் பாட்டி ,பேப்பர் போடும் பெரியவர் , என்னிடம் கல்லடி வாங்கிய எங்கள் தெரு நாய் உட்பட அனைவரும் என்னை வேற்றுக் கிரகவாசியை பார்ப்பதுபோல் பார்த்ததை ,நான் கண்டும் காணாமல் வேக வேகமாக ,
கல்ப்பனாவை பார்ப்பதற்கு ஆவலுடன் முதல் ஆளாக பால்பூத்திற்கு சென்றுவிட்டேன் .
எதிர் வீட்டு அண்ணாச்சி என்னை பார்த்துவிட்டு ,
ஏல ரமெஸூ என்ன இந்த பக்கம் ?

ஒன்னுமில்லைனே
சும்மா பால் வாங்க வந்தேன் ,
சரி ,அப்படியா ..
 எனக்கு ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வந்திடு என்றார் ..

எல்லாம் நேரம் ,என்று அண்ணாச்சியின் தூக்கையும்
தூக்கிக்கொண்டு  ..
கல்ப்பனாவின் அதிகாலை அறிமுக தோற்றத்திற்காக தவம் கிடந்தேன் .
6.15

6.30
6.45
6.55
7.10
7.30
என்று நேரம் ஆகியதே ஒழிய ..கல்ப்பனா வரவேயில்லை ..
வேறு வழியில்லாமல் பால்கார அண்ணாவிடமே கேட்டுவிட்டேன் ..
அண்ணே ,நம்ம தெருவுக்கு புதுசா குடி வந்த பொண்ணு ....

டேய் ..நீதான் அந்த பையனோட பிரெண்டா?
எங்கடா அந்த பொண்ண ?

அண்ணே எந்த பையன் ? எந்த பொண்ணு ?

அடப்பாவி உனக்கு விசயமே தெரியாதா ?
அந்தப்ப் பொண்ண ,முந்தா நேத்து ,,ஒருத்தன் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாண்டா ..என
அண்ணாச்சி அதிர்ச்சி காட்ட
....
....
....
..நானும்
என் பங்குக்கு
வாங்கி வைத்திருந்த அண்ணாச்சி வீட்டு
பாலை மட்டும் ,அதிர்ச்சியில் கொட்டி விட்டு
சமர்த்தாக வீட்டை நோக்கி நடந்தேன் . .பிரபலமான பதிவுகள்