Loading

Monday, June 20, 2016

கல்ப்பனா !!க்கக்க்க்காதல் கதை !அம்மா அலாரம் கிளாக்கை எங்க வச்சீங்க ?
என்னடா ரமேஷ் ?
எதுக்கு இப்போ அலாரம் கிளாக் ?
ஒண்ணுமில்லைமா  ,நாளையிலிருந்து நானே காலையில எந்திருச்சு பால் வாங்கப் போறேன் ,நீ ஒன்னும் கஷ்ட்டப்படவேணாம் .

டேய் ரமேஷ் , நீயாடா இப்படி சொல்ற ? என்னால நம்பவே முடியலையே ..எப்படிடா உனக்கு நல்ல புத்தி வந்துச்சு ..

 ஏம்மா ,வளவளனு பேசாதம்ம்மா ... அப்புறம் நாளைக்கு பால் வாங்க போமாட்டேன் .

சரி சரி விடு ... நல்ல புத்தி வந்தா சரி .

அதிகாலை 10 மணிக்கு எந்திரிக்கிற நமக்கு ,நள்ளிரவு(என் கணக்குப்படி ) 6 மணி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் .
இருந்தாலும் வேறு வழியில்லை ..காரணம் கல்ப்பனா ..

புதிதாக எங்கள் தெருவில் குடியேறியவள். பெண்களை பற்றி கம்பன் எழுதிய கவிதைகளில் ஏதாவது ஒன்று இவளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை ,. ஆனால் எங்கள் தெரு கசாப்புக்கடை பாய் ,பாடும்
கூந்தல் கருப்பு ஆஹா ..
குங்குமம்  சிவப்பு ஓகோவென கோரஸ் பாடுமளவுக்காவது
கொஞ்சம் சுமாராக இருப்பாள்
,அவளை தனியே சந்திக்கும் வாய்ப்பே மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து தொலைக்கிறது ..காலேஜுக்கு  போகும்போது கூட ,
கல்லூரியின் வாகனத்தில் சென்றுவிடுவதால் பார்க்கும் வாய்ப்பு கிட்டித் தொலையவில்லை .

எப்படியாவது அவளை பார்த்து பேசிவிட வேண்டும் என்று
 இதுவரை யோசித்து பழகாத என் மூளையை கசக்கி பிழிந்து,
ஆய்வு நடத்தியபோது  வந்த யோசனைதான் ,
அதிகாலையில்
பால் வாங்கச் சென்றால் ,அவளை பார்த்து விடலாம் .

அதன்படி,,இதுவரை  வாழ்நாளில் பயன்படுத்திப் பார்க்காத அலாரம் கிளாக்கை தலைமாட்டில் வைத்துக்கொண்டு ,அலாரம் கிளாக்கிர்க்கு நான் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தேன் .
என் கணக்குப்படி அந்த நள்ளிரவு 6 மணியும் வந்தது .அப்பாவின் ஆஸ்துமாவிற்காக ,தனியாக வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரை வைத்து முகம் கழுவி ,தங்கை பயன்படுத்தும் க்ரீமை முகத்தில் அப்பிக்கொண்டு ,ஒரு தூக்குச்சட்டியை எடுத்து கிளம்பினேன் .

குப்பை பொறுக்கும் சாம்பு அண்ணன் ,எதிர் வீட்டு பங்கஜம் பாட்டி ,பேப்பர் போடும் பெரியவர் , என்னிடம் கல்லடி வாங்கிய எங்கள் தெரு நாய் உட்பட அனைவரும் என்னை வேற்றுக் கிரகவாசியை பார்ப்பதுபோல் பார்த்ததை ,நான் கண்டும் காணாமல் வேக வேகமாக ,
கல்ப்பனாவை பார்ப்பதற்கு ஆவலுடன் முதல் ஆளாக பால்பூத்திற்கு சென்றுவிட்டேன் .
எதிர் வீட்டு அண்ணாச்சி என்னை பார்த்துவிட்டு ,
ஏல ரமெஸூ என்ன இந்த பக்கம் ?

ஒன்னுமில்லைனே
சும்மா பால் வாங்க வந்தேன் ,
சரி ,அப்படியா ..
 எனக்கு ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வந்திடு என்றார் ..

எல்லாம் நேரம் ,என்று அண்ணாச்சியின் தூக்கையும்
தூக்கிக்கொண்டு  ..
கல்ப்பனாவின் அதிகாலை அறிமுக தோற்றத்திற்காக தவம் கிடந்தேன் .
6.15

6.30
6.45
6.55
7.10
7.30
என்று நேரம் ஆகியதே ஒழிய ..கல்ப்பனா வரவேயில்லை ..
வேறு வழியில்லாமல் பால்கார அண்ணாவிடமே கேட்டுவிட்டேன் ..
அண்ணே ,நம்ம தெருவுக்கு புதுசா குடி வந்த பொண்ணு ....

டேய் ..நீதான் அந்த பையனோட பிரெண்டா?
எங்கடா அந்த பொண்ண ?

அண்ணே எந்த பையன் ? எந்த பொண்ணு ?

அடப்பாவி உனக்கு விசயமே தெரியாதா ?
அந்தப்ப் பொண்ண ,முந்தா நேத்து ,,ஒருத்தன் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாண்டா ..என
அண்ணாச்சி அதிர்ச்சி காட்ட
....
....
....
..நானும்
என் பங்குக்கு
வாங்கி வைத்திருந்த அண்ணாச்சி வீட்டு
பாலை மட்டும் ,அதிர்ச்சியில் கொட்டி விட்டு
சமர்த்தாக வீட்டை நோக்கி நடந்தேன் . .No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்