Loading

Wednesday, June 22, 2016

பார்த்த முதல் நாளே !

10நாட்களாக
கடும் உழைப்பை
செலவழித்து ?! டிவி
பார்த்துக்கொண்டிருந்ததால்,
அதிகாலை 11மணிக்குதான்
கண்விழிக்க முடிந்தது !
நீண்ட நாட்களுக்கு பிறகு ,
தலை ,கனமாக இருப்பதைப் போல உணர்ந்தேன்..
நேற்றுதான் டெட்பூல் படத்தை
பார்த்து தொலைத்திருந்தேன்,
ஒருவேளை டெட்பூல் தான் என்
தலையில் பாறாங்கல்லை
கட்டி வைத்து தொலைத்துவிட்டானோ என
தூங்கு மூஞ்சியுடன் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ச்சே அப்படியெல்லாம் இருக்காதென சமாதானமடைந்தாலும் ,கனம் குறைந்தபாடில்லை,ஒருவேளை
சிறு வயதிலிருந்தே வளராத
என் மூளை தான் ,திடிரென
வளர்ந்து அறிவாளியா போய்ட்டேனானு அல்ப சந்தோசப்
பட்டாலும்,சுவற்றில் மாட்டியிருந்த என் தாத்தா ஃபோட்டோ ,அதெல்லாம் நம்ம பரம்பரைக்கே இல்லடா என உறுதிபடுத்தியதால், கஷ்டப்பட்டு என் கையை தூக்கி தலையைத் தடவிய போதுதான் தெரிந்தது,
கொரியன் குரங்கு போல
என் தலைமுடி வளர்ந்து தொலைத்திருக்கிறதென ..
சரி ,இனி விட்டுவைத்தால் ஜூவில் கொண்டுபோய் சேர்த்துவிடுவார்கள் என்பதால்,கஷ்டப்பட்டு
பக்கத்து தெரு "நியுலுக் "சலூன் கடைக்கு போய் தலையை கொடுத்து
தலைகனத்தை குறைத்த போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது,
சரி நம்ம ஸ்மார்ட் முகம் இப்போ எப்படியிருக்குனு கண்னாடியை
பார்த்தா ,
கண்ணாடி என் மண்டையை காறித்துப்பிக் கொண்டிருந்தது ..
அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியதை விட கேவலமாக கொத்தியிருந்தான்,அடேய் இப்டியாடா குதறி வைப்பனு
எதிர்த்துக் கேட்டா ,பழைய ஹேர்கட் கடனை எல்லாம் கேப்பானேனு மன்னித்து தொலைத்து
வெளிய வந்தபோதுதான் ,
அவளை பார்த்தேன்..

"பிங்க் கலர் சுடியில்
என்னை பிங் பண்ணிக்கொண்டிருந்தாள் "!

ஊரே என் கேவலமான ஹேர் கட் மண்டையை பார்த்து கண் வைத்தாலும்,நான் காரியத்தில் காலாய் இருந்தேன் .

அந்த பிங்க் கலர் பேபி ?
அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தபடி,ஒருவரிடம் ஏதோ விசார்த்துக்கொண்டிருந்தது.
தனியொருத்திக்கு ஹெல்ப் எனில் இந்த ஜகத்தினை சுற்றிடுவோம் என்ற கோட்பாட்டின்படி,அவளுக்கு
உதவி செய்யத் தோன்றியது .

இந்த கெட்டப்பில் போனால்,
காஞ்சனா பட பேயென நினைத்து ,பயந்து போய் என் இடுப்பில் ஏறிவிடுவாள் என்ற பாசிட்டிவ் யோசனையும் ஒரு பக்கம் வந்து ,எனக்கு சப்போர்ட் செய்ததால் ,கேசுவலாக
அவளருகே சென்று,
"எனி ஹெல்ப் ஷாலினி " என்றேன்,என்னை ஏற இறங்க ஏழாம் கிரக ஏலியனைப் போல பார்த்துவிட்டு,
ஆமா ,என் பேர் உங்களுக்கு எப்படி தெரியுமென கேட்டாள் .
அப்போ நிஜமாவே உன் பேர் ஷாலினிதானா என உண்மையை விளம்பாமல்,
பேசிக்கலி ஐ ஆம்
வெட்டி,இதனால உங்க நேம் தெரிஞ்சிக்கிறதெல்லாம் வெரி ஈசியென ,தன்னடக்கத்துடன் சொன்னதும் ,சரி ஓக்கே ..இந்த அட்ரஸ் தெரியுமாவென அவள் காரியத்தில் கண்ணாயிருந்தாள் .
ஓ தெரியுமே ..
என அட்ரஸ்சை பார்க்காமலே சொன்னேன் .
பயப்படாம
வாங்க ...நான்  கூட்டிட்டு போறேன் என சொன்னதும்,
ஏதோ கடத்தல் ஏஜேண்டோ என
எண்ணத்தொடங்கி விடுவாளோ என நினைத்தேன்,ஆனால்
சரியான கைப்புள்ளயா இருக்கானேனு நினைச்சுட்டுதான் கூட வந்திட்டிருக்கானு ,எனக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கிட்டேன் .

இந்த நேரத்தில் ஷாலுவை (அதுக்குள்ள ஷார்ட் பார்மாடா என முறைக்காதிங்க ப்ளீஸ் )பற்றி வர்ணிக்காமல் போனால்,
தேச தூரோக வழக்கு பாய்ந்துவிடும் என்பதால் ,கொஞ்சூண்டு சொல்லிக்கிறேன்,

ஷாலினி என்ற பெயருக்கு ஏற்றது ? போல் சார்மிங்காக இருந்தாள்,இந்த சமந்தா ,மடொனா செபாஸ்டீன் எல்லாம் ஷாலுவுக்கு முன்னால் தூசி ....
ம்க்கும் ம்க்கும் (இருமல் )
சரி ..ஆங்காங்கே,
இந்த கதையை  வாசிக்கும் சிலர் என்னை முறைப்பதால் ஷாலுபுராணத்தை
நிறுத்தித் தொலைகிறேன் ..

எங்கே...
அந்த அட்ரஸ்ச காட்டுங்க என ஷாலுவிடம்  கேட்டதும்,உடனே கொடுத்தாள்,
அப்படியே கொஞ்சம் லவ் கேட்டாலும் ,உடனே கொடுத்திடுவாளாவென என் இல்லாத மூளை ஜொள்ளு கொட்டினாலும் ,அதை மறைத்துக்கொண்டு அட்ரஸ்சை பார்த்தேன்,

ஆம்பூர் பிரியாணி,
ஆட்டையாம்பட்டி நாய்க்குதான்  கிடைக்கனும்னு இருந்தா,
கிடைச்சுத்தான் ஆகும்ங்கிற மாதிரி,எங்க ஏரியா அட்ரஸ்சை,என்கிட்டயே காட்டுனா ஷாலு .

அடடா ..இந்த சந்தோசத்துக்கு
இப்ப நான் எதையாவது வாங்கியாகனுமேனு,
அந்த டீ எவ்ளோ விலைடானு
டீக்கடைக்காரண்ட கேட்டா,
ஒழுங்கு மரியாதையா ,பழைய அக்கவுண்டை கட்டுறானு பொறாமைல சொல்றான் .

அவனை அப்புறம் கவனிச்சிக்கலாம்,
ஓக்கே ஷாலினி,
ஆக்சுவலி இது எங்க ஏரியா அட்ரஸ் தான்,
ஆமா என்ன விசயமா வந்திருக்கீங்க ?


PG Course பண்ண ,இந்த ஊர் காலேஜ்ல தான் அட்மிஷன் கேட்டிருக்கேன் ,
அதான் அக்கா வீட்டுல தங்கி
படிக்கலாம்னு வந்திருக்கேன் என அவள் சொன்னதும்,

நகையணிந்த அனாதை பிணத்தை பார்த்த
ஏட்டையாவின் சந்தோசத்தை உணர்ந்தேன் ..
இனி வீட்டுக்கு போய் ,சகிலா  நடிச்ச ,ச்சி ஷாலினி நடிச்ச படமா பார்க்கனும்,
ஷாலினி போட்டோவ ரூம்ல மாட்டனும்,
ஷாலினிக்காக அஜித் ரசிகனா
மாறுற கன்றாவி ஒன்னுதான் கஷ்டம்,
மத்தபடி கொஞ்சம் ஈசிதான்னு
தன்னம்பிக்கை நினைப்புகள் என்னுள் நான் ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது .

ஒருவழியாக ஏழு கடல் தாண்டி,
ஏழு மலை தாண்டி ,
ஷாலினியை எங்கள் ஏரியாவுக்குள் அழைத்து சென்று
எனக்கு நானே இட்ட
கடமையை முடித்தேன் ..

இறுதியாக என்னைப்
பார்த்து
தேங்க்ஸ் ப்ரோ என்றாள்,
நானும் சிரித்துக்கொண்டே,
ஆமாங்க ..
ப்ரூ காஃபினா ரொம்ப பிடிக்குமென உளரிக்கொட்டினேன்.

புரிந்துகொண்டு சிரித்தாள் .
பற்றிக்கொண்டது காதல் .

நான்  கூட
காதல் ஒரு வெட்டி வேலை,
உதவாக்கரைகள் செய்ற டாஸ்க்னு நினைச்சேன்,
ஆனா அதெல்லாம் நமக்கு பிடிச்ச விசயமாச்சேனு தெரிஞ்சதும், இன்னும் தீவிரமா ஷாலு மேல காதல்
பரவிட்டு இருக்குது  .


அதெப்படிரா ஒரு நாள்ல ,
உடனே
உங்களுக்கு காதல் வருமென
அப்பாஸ் காலத்து கேள்வியை
கேக்கும் அச்சுபிச்சு அங்கிள்களுக்கு ...ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..

தமிழ்நாட்டுல பொண்ணு கிடைக்குறது ,
நேர்மையான ஆட்சி கிடைக்குறதை  விட ரொம்ப கஷ்டம்டா ,
சோ.. ஒரு நாள் என்ன ,
பார்த்த ஒரு செக்கண்ட்ல காதல் வந்தாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணித்தாண்டா ஆகனும் ..

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்