Loading

Wednesday, January 18, 2012

புராண நாடகங்கள் :ஒரு பார்வை.
கிராமத்து திருவிழாக்களை இன்றும் ,உயிர்ப்புடன் வைத்திருப்பது , இரவு நேரம் நடைபெறும் வள்ளித் திருமணம் , வீரபாண்டிய கட்டபொம்மன், சில நேரங்களில் பகத்சிங்
மற்றும் ராமாயணத்தின் வனவாசப்பகுதி போன்ற வரலாற்று நாடகங்கள்தான்.
வரலாற்றை அதன் கதைப் போக்கில் , கேட்பது ,மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
அப்படிப்பட்ட நாடகங்கள் , கடந்த பத்து வருடங்களாக ,ஆபாச வசனங்கள் மூலம் ,கதையை நகர்த்தும் விதம் கவலையளிக்கிறது.

எடுத்த எடுப்பில் ,பபூன் என்ற கோமாளி வேடத்தில் வந்து , பெண்களை இழிவுபடுத்துவதும், தாம்பத்திய விசயங்களை வெட்ட வெளிச்சமாக ,வீதிக்கு
கொண்டுவருவதும் ,மக்களிடையே நகைச்சுவை உணர்வை தூண்டுகிறேன் என்ற பெயரில் ,மக்களின் ரசனையை மிகவும் மட்டமாக்கி விட்டார்கள்.

சமீபத்தில் வள்ளித் திருமணம் என்ற ஒரு புராண நாடகத்தை பார்க்க நேர்ந்தது. முருகனின் அறிமுகப்படலம் இவ்வாறு தொடங்கியது.

அவர்(முருகன் ) யார் தெரியுமா ,
 அவர் நடந்தா சூறாவளி ,
அடிச்சா கில்லி ,
பிடிச்சா உடும்புப்பிடி என்ற
 போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார்கள்
சமீபத்திய திரைப்பட வசனங்களை ,தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பேசுவது போல் நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்..அதோடு இல்லாமல் , முருகன் ,வள்ளி ,சந்திப்பின்போது ,
முருகன் வள்ளியை பார்த்து பாடுகிறார்.. why this kolaveri di என .அடுத்தபடியாக நாரதர் ,முருகன் ,வள்ளியை இணைப்பதற்காக
வள்ளியை பார்த்து ,முருகனின் ஆண்மை திறனை வியந்து , ஆபாசமாக விவரிக்கிறார். அவர்களைச் சொல்லி குற்றமில்லை,
ஆபாசப் பேச்சை ,பெருவாரியாக நுழைத்தால்தான் நாடகம் சிறப்பாக இருந்தது என்ற பெயர் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக
அப்படி செய்கிறார்கள்.

இந்த ஆபாசப் பேச்சுக்களை ,தவிர்த்துவிட்டு பார்த்தால் ,நாடகக் கலை வியக்க வைக்கிறது. பாடல்கள் ,பதினான்கு பக்க அளவில் உள்ள
வசனங்களை அனாயசமாக சொல்கிறார்கள்.. திரைக்கதையை இவர்கள் நகர்த்தும் விதம் ,மிகவும் சிறப்பாக இருக்கிறது. இன்றைய சினிமா நடிகர்கள் ,ஒரு வரி வசனங்களை கூட ,
பல முறை சொல்லி பயிற்சி எடுத்தும் சொதப்புகிறார்கள். அந்த வகையில் ,கூத்துப்பட்டறை நடிப்பு பயிற்சியை விட ,நாடகங்களில் நடிக்கும் நடிகர்கள் ,ஒரு படி மேலேதான்
இருக்கிறார்கள்.

தேசியவிருது இத்யாதி கவுரவிப்பு எல்லாம் ,இவர்களின் திறமையை பார்த்து பிச்சைதான் எடுக்க வேண்டும்.
பல கிராமங்களில் ,ஆடல் பாடல் ,சினிமா குத்தாட்ட நிகழ்ச்சிகள் ,நாடகத் துறையை அழித்து வருவதால்தான்
ஆபாச பேச்சுக்களை ,நாடகத்தில் சேர்ப்பதாக நாடகக் குழுவினர் சொல்கிறார்கள்.. பல துறையில் ,சீரழிந்து விட்ட தமிழகம் ,நாடகக் கலையை
பெருமளவு ஆபாசப்படுத்தி இருப்பது வேதனைக்குறியது.

8 comments:

 1. அழிந்து வரும் கலைகளை மட்டுமல்ல, பயன்படுத்த முடியாமல் கலைத்திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கலைஞர்களை காணும்போதும் நம்மில் வருத்தமே மிஞ்சுகிறது. பதிவிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 2. நல்ல பதிவு.நன்றாக எழுதியுள்ளீர்கள்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சினிமா எனும் சுனாமியால் அழிந்த நாடகக்கலை பற்றிய பதிவு சிந்திக்க வைக்கிறது !

  ReplyDelete
 4. எனது சின்ன வயசு ஞாபகங்களை கிளறி விட்டன.கடந்த பத்து வருடங்களாக இல்லை.85 டு 95 கால கட்டத்தில் ஒவ்வொரு வருடமும் எங்களது ஊரில் வள்ளி திருமணம் , மதுரை வீரன் , மற்றும் பல நாடகங்கள் போடுவார்கள்.பபூன் வந்து டபுள் மீனிங்கில் பேசிவிட்டு கதைக்குள் நுழையும் போது நிறைய பேர் கலைய ஆரம்பித்து விடுவார்கள்.விடியகாலை வரை நடக்கும் .இப்போது டிஜிட்டல் ஸ்க்ரீனில் படம் போட ஆரம்பித்து விட்டனர்

  ReplyDelete
 5. கோவை நேரம் அவர்களே மிகச் சரியாக சொன்னிர்கள் ,
  கலைந்து போய் விடுவதற்காகவே ,நாடகக் கதையையும் இரட்டை அர்த்த வசனங்களை இணைத்து விடுகிறார்கள்

  ReplyDelete
 6. ஆனந்து அவர்களே , மிக்க நன்றி

  ReplyDelete
 7. குமரன் அவர்களே மிக்க நன்றி :-)

  ReplyDelete
 8. வே சுப்பிரமணியன் அவர்களே , அழிந்து வரும் நாடகக் கலையை மீட்க ,மக்களாகிய நாம் நினைத்தால் மட்டுமே முடியும் .. கமென்ட் செய்ததற்கு நன்றி

  ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்