சிறு குழந்தைகளுக்கு உணவூட்ட நமக்கு எவ்வளவு பொறுமையும் ,நிதானமும் தேவையோ ,அதுபோல ஒரு சிறப்பான திரைப்படத்தை ,அதன் அடிப்படை அழகியலோடு எடுக்கவும் திறமை தேவை. அந்த திறமை கெவின் ஒ கார்னரிடம் இருக்கிறது.
கான்லனுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பிரென்டன், இளைய மகன் டாமி. இந்த இருவருக்கும் அப்பாவின் கெட்ட பழக்க வழக்கங்கள் பிடிக்காததால் இருவருக்கும் அப்பாவை பிடிக்காமல் போகிறது. இதன் தொடர்ச்சியாக மூத்த மகன் பிரென்ட்டனுக்கும் இளைய மகன் டாமிக்கும் கூட மனக்கசப்பு ஏற்பட்டு பிரென்டன் தனியாக பிரிந்துவிடுகிறார்.
இளைய மகன் டாமி ,ஒரு குத்துச்சண்டை போட்டியில் ,முக்கியமான வீரரை வீழ்த்தி, யூடியுப் மூலம் ஓவர் நைட்டில் புகழடைகிறார்.இதனிடையே கான்லன் , தான் திருந்திவிட்டதாக டாமியிடம் சொல்கிறார். இதை நம்பமறுக்கும் டாமி அப்பாவை எடுத்தெறிந்து பேசுகிறார்.
இந்த பக்கம் ,மூத்த மகன் பிரென்டன் , கல்யாணம் முடித்து ,ஒரு பள்ளியில் பிசிக்ஸ் வாத்தியாராக வேலை பார்க்கிறார். ஒரு கட்டத்தில் கடன் அவரை நெருக்க ,சிறிய அளவிலான குத்துச்சண்டையில் போட்டியிட்டு பணத்தை சேமிக்கிறார். இதை அனுமதிக்காத பள்ளி நிர்வாக விதிமுறை ,பிரன்டனை சஸ்பென்ட் செய்கிறது. இதனால் மாணவர்களும் ,ப்ரின்சிபாலும் பிரென்டனை நினைத்து வருத்தமடைகிறார்கள். மனம் தளராத பிரென்டன் அவனுடைய நண்பன் நடத்தும் குத்துச்சண்டை பயிற்சியில் சேர்ந்து இளம் வீரர்களுக்கு பயிற்ச்சியளிக்கிறார். பயிற்ச்சியின்போது முக்கிய வீரர் காயமடைய ,பிரென்டன் வலிய சென்று தான் போட்டியில் கலந்துகொள்கிறேன் என நண்பனிடம் சொல்லி சம்மதம் வாங்குகிறான்,
இதனிடையே ஸ்பார்ட்டா குத்த்துச்சண்டை போட்டி தொடங்குகிறது. டாமி முதல் ரவுன்டிலேயே எதிரியை அடித்து வீழ்த்துகிறார். பிரென்டனும் தட்டுத்தடுமாறி லீக் சுற்றில் படிப்படியாக முன்னேறுகிறார். தன் மகன்கள் வெற்றி பெறுவதை பார்த்து சந்தோஷப்படும் கான்லன் ,இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். எதுவும் பயனளிக்கவில்லை.
அரையிறுதியில் முக்கிய வீரர்களை பிரெண்டனும் ,டாமியும் தனித்தனியே வீழ்த்தி ,இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறார்கள். அந்த உணர்வுப்பூர்வமான இறுதிப் போட்டியில் வென்றது யார் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குனர் சிறு சிறு சம்பவங்களை கூட நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். உதாரணத்திற்கு பிரன்டன் முதல் போட்டியில் கலந்துகொள்ளும்போது ,அவனுடைய மனைவி போட்டியை பார்க்காமல் வழக்கம்போல் வீட்டு வேலைகள் செய்துகொண்டிருப்பாள். வெற்றி என்ற செய்தி வரும்போதுதான் அவளின் முகத்தில் புன்னகை பூக்கும்.
படத்தில் எனக்குப் பிடித்த வசனம் ஒன்றை சொல்கிறேன், பிரன்டனின் கோச் நண்பர் ,பிரன்டனை பார்த்து சொல்கிறார், "நீ இன்னிக்கு ஜெயிச்சாதான் ,உனக்கு வீடு கிடைக்கும் ,ஏன்னா இப்போ வரைக்கும் உனக்கு வீடு இல்லை "
அதே போல் ,பிரன்டனின் பள்ளி மாணவர்களும் ,பிரின்ஸிபால் உட்பட அனைவரும் பிரன்டனின் ஒவ்வொரு வெற்றியைப் பார்த்து ஆனந்தப்படுவார்கள் ,நானும்தான் !
என் பார்வையில் WARRIOR ,நல்ல அழகியல் திரைப்படம்தான் .
நச்சுன்னு ஒரு விமர்சனம். நல்லாயிருக்கு. நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஹாலிவுட் ரசிகன் அவர்களே
ReplyDeleteதொடர்ந்து நல்ல விமர்சனங்கள் எழுதி மனதை கவர்கிறீர்கள் நண்பரே..இந்த படத்தை எப்பொழுது பார்ப்பேன்று தெரியவில்லை..பார்த்தவுடன் சில வாத்தைகளாவது பகிர முயற்சிக்கிறேன்.நன்றி..
ReplyDeleteநிச்சயம் பாருங்கள் குமரன் அவர்களே ,அழகான திரைப்படம்
ReplyDelete