Loading

Sunday, October 26, 2014

வரலாற்றுக் கதை !!

வருடம் :2002

எஸ்மா சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களை 
டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது தமிழக அரசு என்ற
தலைப்புச் செய்தியை தினசரி தாளில் படித்துக்கொண்டிருந்த
நேரத்தில்தான் ப்ரியாவை பார்த்தேன் !

ஊர் திருவிழாவுக்காக  ஃபாரினிலிருந்து ..
சாரி ..
பட்டினத்திலிருந்து ..
மன்னிக்கவும்
பக்கத்து ஊரிலிருந்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள் .
அவளை பார்த்தவுடன் ..இரண்டு நாட்களாக வராமலிருந்த
காவிரித் தண்ணீர் வந்தது போல ஆத்ம(அத்தியாவசிய )
திருப்தியடைந்தேன் !

"ப்ரியா" 

கோதுமையிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மைதா நிறத்தை
ஒத்திருந்தாள் என நான் அடித்துவிட்டாலும் ..
நீங்கள் நம்பப்போவதில்லையென
 தெளிவாக தெரிந்திருப்பதால்
கோதுமை நிறத்திலாவது இருந்தாள் என்பதை
தயவு செய்து நம்பித் தொலையுங்கள் .

சிறு வயதிலிருந்தே பழகியிருந்த
என் தங்கையை தேடிக்கொண்டே
என் வீட்டில் நுழைந்த
ப்ரியா, என்னருகில் வந்ததும் ..

"ஜாமீன் கிடைத்துவிட்ட வதந்தியை நம்பி 
பத்து நிமிடம் செம ஆட்டம் போட்ட 
அதிமுகவினரின் அல்ப சந்தோசத்தை அனுபவித்தேன்" !

என் சந்தோசம் பொறுக்காமலோ என்னவோ ..
கையிலிருந்து பேப்பரை பிடுங்கிய என் தாத்தா ..

"இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைதென்ற
செய்தியை
சத்தம் போட்டு வாசித்ததும் ..
கொடுத்த ஜாமீனை  திரும்பி 
வாங்கிக்கொண்ட ஷாக்கிங்கை
சில நொடிகள் அனுபவிக்க நேர்ந்தது !

இருந்தும் ,,
மனம் தளராத  மன்மோகன் சிங்காய்
மௌனப் பார்வையுடன் இரண்டு நாள் திருவிழாவிலும்
கிரிவலம் வந்து ப்ரியாவின் கவனம் பெற்றதும்
காதலை கற்றுமுடித்த  சிம்புவாக நினைத்துக்கொண்டேன் !

சிம்புவாக நினைத்துக்கொண்ட பாவமோ என்னவோ ,
அவளின் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து சொம்போடு
எங்கள் வீட்டிற்கு வந்தார் ,
வெற்றிலையை சொம்பிலும் ,
எச்சிலை என் முகத்திலும் ஸ்ப்ரே பண்ணித்தொலைத்த
கையோடு திருவிழாவும் முடிய ..

"கள்ளப்பார்வையுடன் பிரியாவும் .
கசாப்பு பார்வையுடன் அவளின் அப்பாவும் "
என்னை விட்டு பிரிந்து சென்றார்கள் !

வருடம் :2003

கோவில் திருவிழாக்களில் ஆடு ,மாடுகளை 
வெட்டத் தடை -தமிழக அரசு உத்தரவு 

என்ற செய்தியை தாத்தா
அறிவித்துக்கொண்டிருந்த நேரத்தில்
ஊர் திருவிழா மாதமும் ஒன்றாக வந்ததில் ,
ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஊர் மக்களின்
நாக்குகள் சந்தித்தன ,
அதிர்ஷ்டவசமாக  ,
ப்ரியா வரப்போகிறாள்  என்ற செய்தியறிந்த
என் நாக்கு மட்டும் வெகுவாக ஊறியது !

சொன்னபடியே ப்ரியாவும் வந்தாள்,
இந்த முறை பிரியா  என்னிடம் வந்து
ஃப்ரியா இருக்கியா என கேட்டதும்
சிரியா நாட்டின் கலவரச் செய்தி தந்த துக்கம் கூட
காணாமல் போயிருந்தது ,,

இந்த சுவிசேஷ நிகழ்வைக் கூட மோப்பம் பிடித்துக்கொண்ட
ப்ரியாவின் சொம்பு ..ச்சே வம்பு பிடித்த
அவளின் அப்பா என்னை அவ்வப்போது சில பல வார்த்தைகளால்
பாராட்டிக்கொண்டிருந்தார் .(வீட்டில் பாராட்டு வாங்கி பழகிவிட்டதால் ,
இந்த பாராட்டுகளையும் சிரமமில்லாமல் வாங்கமுடிந்திருந்தது)

பத்தாத குறைக்கு ,தமிழக அரசும் எனக்கு பக்கபலமாக
ஆடு மாடுகளை வெட்ட தடையென்ற உத்தரவிட்டு
என் கிட்னியில் சற்று மெக்னீசியம் வார்த்ததால்
அன்றைய வருட திருவிழா
நாளொரு பார்வையும்,
பொழுதொரு சந்திப்புமாக இனிதே கடந்து சென்றன !

வருடம் 2004!!

முன்பைப்போல திருவிழாவுக்கெல்லாம் காத்திராமல்
தியேட்டர் பக்கம் தேவுடு காத்து
பத்துரூபாய் டிக்கெட்டை
ரூல்ஸ் பேசி நைசாய் வாங்கி சந்திக்கத் தொடங்கினோம்..
மொக்கை படங்களுடன் என் மொக்கை காதலும்
வளர்ந்த வண்ணமிருந்ததால்
டென்ஷனாகிய ஆடியன்ஸ்..சாரி
டென்ஷனாகிய அவரின் அப்பா ,பல ஊர் சொம்புகளுடன்
மீண்டும் படையெடுத்து வந்தார் !

அந்த நேரமாக பார்த்து ...
ஆடு மாடுகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை
ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட செய்தியை
டீக்கடை போஸ்டர் சந்தோசமாக தெரிவித்துக் கொண்டிருந்தது !

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்தது போல்
இந்த காதல் குவிப்பு வழக்கையும் இழுத்தடிக்க
முயன்று பார்த்தேன்..
துரதிஷ்டவசமாக இந்தமுறை
காமெடி தண்டபாணியாக இருந்த பிரியாவின் அப்பா
திடிரென காதல் தண்டபாணியாக மாறி கலவரமானாதில்
ஒரு மினி சுனாமி அதிர்வை (சுனாமி ஏற்படுவதற்கு முன்பே )
ஏற்படுத்தியதன் விளைவால் ..
என் வரலாற்றுக் காதல் கதையை வலுக்கட்டாயமாக
முடிவுக்கு கொண்டு வந்து தொலைத்தார்கள் !

(2005-2013)
ஆண்டுகள் விழுப்புர கல்யாண மகாலிளிருந்து
விஜய் வெளியே ஓடிய வேகத்திற்கு நிகராக ஓடியது !

வருடம் 2014!!

இப்போதும் ஊர் திருவிழாவுக்கு பிரியா வந்தாள்!
அவளின் எண்ணெய் படிந்த தலைகேசம்
பரிணாம வளர்ச்சியில் லூஸ் ஹேர் ஆகியிருந்தது .
அவ்வப்போது லூஸ் ஹேரை கோதிவிட்டுக்கொண்டு
லூஸ் போல பாவனை செய்தாள்.
திருவிழா போட்டிகளில் ஆசியன் கேம்ஸ்சில்
கலந்துகொண்டது போல் பெருமிதம் கொண்டாள் ..
தங்கையுடன் கலகலப்பாக பேசிக்கொண்டே
வீட்டிற்கும் வந்து போனாள்!காதலித்த சுவடே தெரியாமல்
கலகலப்பாக பேசியது சரித்திரத்தின் வியப்புக் குறியீடு!
இவை எல்லாவற்றையும் இயல்பாகவே எடுத்துக்கொண்டேன்!

"அவளின் குழந்தையை காட்டி
மாமா பாரு
மாமா பாரு -என்று
வித்தை காட்டியதை தவிர ....... "!Monday, March 10, 2014

தேர்தல் 2014(ஒரு பிரச்சார முன்னோட்டம் )

நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தாகிவிட்டது !
சுட்டெரிக்கும் வெயிலில் தேர்தல் சூடும் கலந்துவிட்டதால்
இனி ஒன்றரை மாதத்திற்கு வெப்பநிலை சில டிகிரி செல்சியஸ்
கூடுதலாகவே காணப்படும் !


முக்கியத் தலைகளில் இருந்து முத்துன தலைகள் வரை
பிரச்சார வேன்களை துடைத்து வைத்து
மக்களைத் தேடி ஓடி பாய்ந்து பறந்து ஊர்ந்து
வரவிருக்கிறார்கள் ...
இந்தமுறை அவர்கள் எப்படி பேசி ..
மக்களை கவருகிறார்கள் என்பதை சிறு முன்னோட்டமாக பார்த்துவிடலாம் !
முதலில் ..

நாராயணசாமி !!!

அன்னை சோனியா தலைமயிலான இந்த ஆட்சி
தொடர்ந்தாதான் நாட்டு மக்கள் ,ஈழ மக்கள் ,
உலக மக்கள் ..செவ்வாய்கிரக மக்கள்? எல்லாரும்
சந்தோஷமா இருக்கமுடியும் !
அணுமின் நிலையத்தை 15நாள்ல? கொண்டுவந்தோம்..
அதே மாதிரி மீனவ பிரச்சினையையும் 15நாள்ல? முடிவுக்கு கொண்டுவருவோம்

பத்து வருஷம்தான் ஆட்சி நடத்திருக்கோம்..
எங்க ராசிப்படி? 15வருஷம் ஆட்சி நடத்தனும் ...
அதனால உங்க ஒவ்வொரு ஓட்டையும்
15ஓட்டா நினைச்சு எங்களுக்கு போடனும் !
எங்கள் கூட்டணியை?ஏரோப்பிளேன்
வைத்து மோதினாலும் தகர்க்கமுடியாது
ஊழலில்லாத ஆட்சியை எங்களால்? மட்டுமே தரமுடியும்
என்பதை கூறிக்கொண்டு இறுதியாக ஒரு கவிதையை வாசித்துவிடுகிறேன் !

"மரத்துல தொங்குது காயி "
படுக்கத் தேவை பாயி"
நீங்க மட்டும் எங்களுக்கு ஒட்டு போட்டீங்கன்னா "
நான் உங்க நாயி,நாயி நாயி !!!


விஜயகாந்த் !!

என்னை வாழவைக்கும் மக்கலுக்கு வணக்கம் !
மக்களே நிம்மதியா தூங்க முடியலை..
நீங்க தூங்குரீங்க்களா ?(மக்களை பார்த்து கேட்கிறார்)

(கூட்டத்தில் ஒருவர் )ஆ,நல்லா தூங்குனோம்ங்க

ஷ்ஷ்...குறுக்க பேசாதிங்க மக்கழே..
அப்புறம் டாப்பிக் தாண்டி போய்டுவேன் ..
அதாவது மக்கழே ...
மண்டபத்தை இடிச்சாங்க ,,எம்எல்ஏக்களை பிரிச்சாங்க..
அதெல்லாம் பார்த்து துளி கலங்க மாட்டான் இந்த விஜயகாந்த் !
எனக்குதான் நீங்க இருக்கீங்க மக்கழே ..
பயப்படமாட்டான் இந்த விஜயகாந்த் !

(பேச்சினிடையே ..
கொடியை உயர்த்தி பிடித்திருக்கும் தொண்டரை பார்க்கிறார்..)

தம்பி அந்த கொடியை கொஞ்சம் இறக்கி பிடிங்க
மத்தவங்க கேக்கனும்ல ..
நீ கொடியை தூக்கி மறைச்சின்னா எப்படியா
ஜனங்களுக்கு கேக்கும் /(ஞே)..
நீ அறிவாளின்னா நான் என்ன முட்டாளா ..கொடியை இறக்குடா..

அதாவது மக்கழே..
விவசாயம் ,விலைவாசி ,எல்லாமே உயர்ந்துடுச்சு
இதை தட்டிக் கேட்க வந்தவன்தான் இந்த விஜயகாந்த்
வழக்கு போடுவியா ..போடு
கோடி வழக்கு கூட போடு ,
ஒத்தை ஆளா சந்திக்கிறேன்
என் மக்கலுக்காக சந்திக்கிறேன்
யாருக்கும் அஞ்சமாட்டான் இந்த விஜயகாந்த்

ஆகவே மக்களே
பாஜக,மதிமுக ,
ஆப ப ப(வாய் ரோலிங்)
மற்றும் பல கட்சிகள் சேர்ந்த ...

சுருக்கமா இந்த கூட்டணி
ஒரு பலமான கூட்டணி ..
ஊழலல்ற ஒரு கூட்டணியை உங்களுக்காக அமைச்சிருக்கேன்
எனவே ..
எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய
"திமுகவுக்கு??? வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் !

அவ்வ்வ்வ் !

                                                                                                         தொடரும் .....

Friday, February 28, 2014

நாராயணசாமி கதைகள் ! 18+

ஒருநாள் நாராயணசாமி வேட்டைக்கு போனார்!
நீண்ட நேரம் காத்திருந்து ஒரு குட்டிக் கரடியை சுட்டுக் கொன்றார்!
இதைக் கண்ட அப்பா கரடி கடும் கோபமுற்று
நாராயணசாமியை பிடித்து தின்ன பார்த்தது !
இருந்தும் நாராயணசாமியின் முகத்தை
உற்றுப் பார்த்த கரடி..   யோசனையுடன்
நாராயணசாமிக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தது !

முதல் சாய்ஸ் :உன்னை கொல்லப் போறேன் 
இரண்டாவது சாய்ஸ் :உன்னை என்ஜாய் பண்ணப் போறேன் என்றது கரடி !

நாராயணசாமி தீர்க்கமாக யோசித்து ..இரண்டாவது சாய்சை தேர்ந்தெடுத்தார் !

கரடி போட்ட போட்டில் ..நாராயணசாமிக்கு ஒரு மாதம் மருத்துவசிகிச்சை
அளிக்க நேர்ந்தது !
.
.
.
.

இரண்டு மாதம் கழித்து மீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் நாராயணசாமி !

இப்போதும் ஒரு குட்டிக் கரடியை சுட்டுக் கொன்றார்!
இருந்தும் அவர் அப்பா கரடியிடம் மாட்டிக்கொண்டார் !
முன்பை விட கடும் கோபத்திலிருந்த கரடி ...
நாராயணசாமியின் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே
இரண்டு சாய்ஸ்களை வழங்கியது !

முதல் சாய்ஸ் :உன்னை கொல்லப்போறேன் 
இரண்டாவது சாய்ஸ் :உன்னை என்ஜாய் பண்ணப் போறேன் என்றது கரடி !

மீண்டும் தீர்க்கமாக யோசித்த நாராயணசாமி இரண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுத்தார் !

இந்த முறை கரடி போட்ட போட்டில் இரண்டுமாதம்
தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து நாராயணசாமி மீண்டு வந்தார் !

சில மாதங்கள் கழித்து ....
..
.
.
.

மீண்டும் வேட்டைக்கு கிளம்பினார் நாராயணசாமி !!
.இந்த முறை சில நிமிடங்களிலேயே குட்டிக்கரடியை சுட்டுக்கொன்றார் !

சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த நாரயாணசாமியின் 
முதுகில் அப்பா கரடியின் கை விழுந்து ..
நாராயணசாமியின் முகத்தை  பார்த்து கேட்டது !

""நீ நிஜமாவே வேட்டைக்குத்தான் வர்றியா ""!!!

பிரபலமான பதிவுகள்