Loading

Tuesday, January 3, 2012

THE DEBT (2011) சினிமா விமர்சனம்

எடுத்த எடுப்பில் திரைக்கதையில் வேகத்தை கொண்டு வருவது என்பது சிரமமான காரியம் .. இந்த திரைப்படத்தில் அந்த சிரமமான காரியத்தை சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்,


 இஸ்ரேலிய உளவாளிகள் பற்றிய கதை..


முன்னாள் ஏஜென்ட்ட்டான ரேச்சலின் மகள் ,தன் அம்மாவின் வீர தீர சாகசத்தை புத்தகமாக எழுதி வெளியிடுகிறார். வெளியிடும் அதே நேரத்தில் ரேச்சலின் முன்னாள் கணவன் ஸ்டீபனை பார்த்துவிட்டு ,ஒருவர் வாகனத்தில் மோதி மரணமடைகிறார்.

கதை 1965க்கு பின்னோக்கி பயணிக்கிறது, மொசாத் ஏஜென்ட் ரேச்சல் ,ஜெர்மனியில் இறங்குகிறார்.அங்கு ஏற்கனவே ஏஜென்ட்டாக உள்ள டேவிட் மற்றும் ஸ்டீபனை சந்திக்கிறாள். மூன்று பெரும் சேர்ந்து கடத்தல் திட்டத்திற்கு தயாராகிறார்கள்.

ஜெர்மானிய போரின்போது ,யூதர்களை கொன்று குவித்த டாக்டர் ஒருவரைத்தான் இந்த மூவரும் இஸ்ரேலுக்கு கடத்தி அரசாங்கித்திடம் ஒப்படைப்பாதாக திட்டம் .அதன்படியே ரேச்சல் ,கர்ப்ப டெஸ்ட் எடுக்க இரண்டு முறை சென்று ,டாக்டரின் நடவடிக்கையை கண்கானிக்கிறாள். மூன்றாவது முறை ,டாக்டரை மயக்க ஊசி போட்டு ,சாமர்த்தியமாக கடத்துகிறார்கள்.. இருந்தும் நாடு கடத்துவதற்காக டாக்டரை ட்ரெயினில் ஏற்ற போடும் திட்டம் சொதப்பலாகிறது.


வேறுவழியில்லாமல் ,டாக்டரை , ஏஜன்ட்கள் தங்கியிருந்த அறைக்கு கொண்டு செல்கிறார்கள் ..டாக்டரை உளவியல் ரீதியாக பைத்தியமாக்க முயற்சி செய்கிறார்கள் ..எதுவும் பயனளிக்கவில்லை.. இந்நிலையில் டேவிட் மற்றும் ஸ்டீபன் இருவருக்குமே ரேச்சலின் மீது காதல் வருகிறது. ரேச்சலுக்கு டேவிட்டை பிடிக்கிறது. டேவிட் சற்றுத் தயங்கும் நேரத்தில் ஸ்டீபன் ரேச்சலுடன் உறவு கொள்கிறாள்.

சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் டாக்டர் ,ஒருநாள் டேவிட் ,ஸ்டீபன் இல்லாத போது, ரேச்சலை காயப்படுத்திவிட்டு தப்பிக்கிறார். இதனால் மூன்று பேரும் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். மனதை திடப்படுத்திக் கொண்டு ,ஸ்டீபன் ஒரு பொய்யை சொல்லிவிடலாம் என தீர்மானிக்கிறார்.இருவரும் சம்மதிக்கிறார்கள். அந்த பொய் என்னவென்றால் ? தப்பியோட முயற்சித்த டாக்டரை ரேச்சல் சுட்டுக் கொன்றுவிட்டார் என்பதே .

அனைவரும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மூன்று பேரையும் பாராட்டுகிறார்கள்.இந்த போலியான பாராட்டு பிடிக்காத டேவிட் அங்கிருந்து காணாமல் போகிறான்.. டேவிட் எங்கு போனான் ?அந்த குற்றவாளி டாக்டர் என்னவானார் ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
நம் மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த திரைப்படம் ,நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் .2007ம் வருடம் இஸ்ரேலில் வெளிவந்த இந்த படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்து 2011 வருடம் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். என் பார்வையில் நல்ல சஸ்பென்ஸ் திரைப்படம் .


6 comments:

 1. << எடுத்த எடுப்பில் திரைக்கதையில் வேகத்தை கொண்டு வருவது என்பது சிரமமான காரியம் .. இந்த திரைப்படத்தில் அந்த சிரமமான காரியத்தை சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்,>>>

  இந்த இப்படி எடுக்கபட்டிருக்கும் இந்த படத்தை பார்க்காமல் விட்டால் சினிமா தேவதை கண்ண குத்திரும் போலிருக்கே..
  அட வரிசையா நல்ல படமா எழுதுரீங்களே..அது எப்படி ?? (சும்மா ஜோக்க்...)

  நல்ல விமர்சனம்..தங்களிடம் எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று, எல்லாரும் புரிந்துக்கொள்ள ஏற்ற வகையில் சிறப்பாக எழுதுகிறீர்கள்..பார்த்துவிடுகிறேன்..நன்றி//

  ReplyDelete
 2. வெண்புரவி அவர்களே நன்றி

  ReplyDelete
 3. குமரன் அவர்களே ,முதலில் என் நன்றியை கூறிவிடுகிறேன் .

  இன்னொன்று உங்களை விட ,நான் சிறப்பாக ஒன்றும் எழுதிவிடவில்லை ..

  ReplyDelete
 4. படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம் ... என் உலக சினிமா விமர்சனம் உங்கள் பார்வைக்கு
  ரெட் டஸ்ட்- உலக சினிமா http://pesalamblogalam.blogspot.com/2011/07/blog-post_10.html

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஆனந்து அவர்களே

  ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்