Loading

Monday, April 30, 2012

THE DARKEST HOUR (ஹாலிவுட் விமர்சனம் )


திடீரென மர்மமான ஜந்துக்கள் ,விண்வெளியிலிருந்து இறங்கி நம்மை தாக்கினால் எப்படியிருக்கும் ?
என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த DARKEST HOUR திரைப்படம் .



ஒன்றரை மணிநேர விறுவிறுப்பு திரைப்படத்தை உருவாக்கிய விதத்தில் DARKEST HOUR
ஓகே ரகம்தான் .இனி சுருக்கமான திரைக்கதையை பார்க்கலாம் ..

அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் ,ஒரு பிராஜக்ட் விசயமாக வரும் இரண்டு
பையன்கள் ,இவர்களுக்கு  ரஷ்யாவின் மொழி ,வழி என எதுவுமே தெரியாமல் இருக்கிற நேரத்தில் விண்வெளியிலிருந்து
வேற்று கிரக ஜந்துக்கள் இறங்கி ஒட்டுமொத்த மக்களையும் பஸ்மமாக்குகிற நேரத்தில் உயிரை கையில் பிடித்து ஒரு
ரூமில் தங்குகிறார்கள் .ஐந்து நாட்களுக்குப் பிறகு ,இதற்கு மேல் ரூமில் அடைந்து கிடக்க முடியாதென முடிவெடுத்து
வெளியே வருகிறார்கள் .ஜந்துக்கள் இன்னும் ரஷ்யாவை விட்டுப் போகவில்லை என்பதை உணர்ந்து ,வேறுவழியில்லாமல்
அதை எதிர்க்க துணிகிறார்கள் .இறுதியில் அதை எதிர்த்து வெற்றி கண்டார்களா என்பதே THE DARKEST HOURன் திரைக்கதை .

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை அறிவியல் அறிவு வேண்டுமென்பதை ஓரளவுக்கு இந்த படத்தில்
புரிய வைக்கிறார்கள் .பல முனைகளிலிருந்து தாக்கினால் எவ்வளவு பலமுள்ள எதிரியும் காலிதான்
என்ற ரீதியில் வேற்றுகிரக ஜந்துக்களை விரட்டியடிக்கும் பாணி தமிழ் சினிமாவை பார்த்து எடுக்கப்பட்டதோ என எண்ணத்தோன்றுகிறது




இந்த நால்வருடன் சில ரஷ்ய ஆட்களும் இடையில் சேர்ந்து எதிர்த்து போராடும்போது ,ரஷ்யர்கள் தன்னுடைய நாட்டை
மீட்டாக வேண்டுமென டயலாக் அடிப்பது நன்றாகவே எடுபடுகிறது .கிராபிக்ஸ் யுக்திகள் ஏற்கனவே பார்த்து
பழக்கப்பட்டதுதான் என்றாலும் ,வேற்று கிரக வாசிகள் பூமியில் உள்ள உயிர்களை தேடித் தேடி கொல்லும் பாணி புதியதுதான் .பின்னணி இசை மிரட்டும்
பாணியில் உள்ளதால் ,படத்தில் ஆர்வத்துடன் ஒன்ற முடிகிறது .

THE DARKEST HOUR _ த்ரில்லர்  பொழுதுபோக்கு !




Sunday, April 29, 2012

பிஜேபி எழுச்சி பெறுமா ?



மதுரையில் நடைபெறப்போகும் பாஜகவின் பிரம்மாண்டமான மாநில மாநாடு ,பாஜகவுக்கு தமிழகத்தில்
பெரிய மாற்றத்தை கொடுக்கலாம் என்ற எண்ணம் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல பாஜகவினர்
நினைக்கின்றனர். அவர்களது நினைப்பு ,நல்ல பலனை கொடுக்குமா என்பதை குறித்துப் பார்ப்போம் ..

பாஜகவின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அத்வானி ,நரேந்திரமோடி ,நிதின்கட்காரி உள்ளிட்ட
பல தலைவர்கள் அவ்வப்போது தமிழகத்தில் வந்து ஒரு சில நாட்கள் தங்கி கட்சிப் பணிகள்,மற்றும்
பிரச்சாரங்களை செய்த போதும் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் அரை சதவிகிதம் கூட உயரவில்லை
என்பதுதான் கசப்பான உண்மை .98,99களில் இருந்த பாஜகவின் வேகம் தமிழகத்தில் இப்போது இல்லை.
இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தொண்டர்கள் அவ்வப்போது நாங்கள் பாஜகவினர் என்று
சொல்லும்போது நம்மையும் அறியாமல் ஆச்சர்யப்பட்டதுண்டு .

தமிழகத்தில் மத்தியில் பாஜக வரவேண்டும் என்ற பொதுவான மனநிலை மக்களிடத்தில் இருந்தாலும்
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓட்டளிக்க தயக்கம் காட்டியே வந்திருக்கிறார்கள் .இந்த நிலைமையில்
மதுரை மாநாட்டில் வைத்து ,தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் ? என்ற உயரிய கொள்கையை
முழங்கப் போகிறார்கள் என்ற செய்தி அடிபடுகிறது .ஒவ்வொரு கட்சிக்கும் தன் கட்சி ஆட்சிக்கு
வருவதென்பது  முக்கியமென்றாலும் ,பாஜகவின் லட்சியம் எந்த வகையில் சாத்தியப் படப்போகிறது
என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும் .




புதுப்புது கட்சிகளுக்கு கூட திராவிட கட்சிகள் கூட்டணிக்' கதவை திறந்துவிடும் வேளையில்
பாஜகவுக்கு மட்டும் தமிழகத்தில் கூட்டணிக்கான அனுமதியை கொடுக்க தயங்குகிறார்கள் .இருந்தும்
பாஜகவினர் தளராமல் தேர்தலில் போட்டியிடும் தைரியம் ஒன்றை அனைத்து மக்களும் மெச்சுகிறார்கள்.
மத்தியிலும் பாஜகவுக்கு கூட்டணி சரியில்லை என்றபோதிலும் மக்கள் ஒருமனதாக காங்கிரஸை
ஒதுக்கி பாஜகவை ஆதரிக்கும் பாங்கு தமிழகத்தில் வருமா என்பதுதான் தற்போதைய கேள்வி !

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ..மதுரையில் நடக்கப்போகும் மாநாட்டில்
பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது .இதைவைத்து
பஜாகவினருக்கு ஆதரவு பெறுகுகிறது என்று பாஜகவினர் திருப்தி பட்டுக் கொள்ளலாம் .
ஆனால் மதுரையை சுற்றி உள்ள மக்களுக்கோ ..பிரம்மாண்டமான செட்டுகளை கண்டுகளித்து ,உணவுகளை இலவசமாக ருசிபார்த்து
பொழுதை போக்கலாம் என்ற ஆசை இப்போதே வந்துவிட்டது என்பதை நாமும் புரிந்துகொள்ளலாம் .


Thursday, April 26, 2012

கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு !



நல்ல செயல்பாடுகளின் மூலம் அரசியல் செய்வது ஒரு வகை ,வெறும் வார்த்தை ஜாலத்தை
மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது மற்றொரு வகை ..அந்த வாய்ஜால வகையைத்தான்
நம் தமிழின தலைவர் ,கடந்த இருபது வருடமாக வெகுசிறப்பாக செய்து வருகிறார்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியபோது ,அவர் வெளிப்படுத்திய அறிக்கையே சொல்லிவிடும் ,அவரின்
இயலாமையை ..தமிழீழம்தான் தமிழ் மக்களின் இறுதித் தீர்வு என்ற லட்சியத்தை நோக்கித்தான் எமது கட்சி
செயல்பட்டு வருகின்றது என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
பதவியில் இருந்தபோதும் இதையே நான் சொல்லியிருக்கிறேன் என்றுவேறு மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அதாவது பதவியில் இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி ,வெறும் வாய்சொல்லை கட்டிக்கொண்டு
மாரடிப்பனே ஒழிய , செயல்பாடுகளை காட்டி யார் பகையையுயம் வளர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற கூற்று
அவர் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது .
இப்படிப்பட்ட  உயரிய கொள்கையை உடைய நம் கருணாநிதியின் அறிக்கையை நினைத்து உடன்பிறப்புகளே
நகைக்கும் அளவுக்கு போய்விட்டது என்பதை கருணாநிதி இன்னுமா அறியாமல் இருக்கிறார்? என்ற ஐயம் ஏற்படுகிறது .

ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் ,காங்கிரசின் கால்களில் விழுந்திருந்த
கருணாநிதி இலங்கை விவகாரத்தை மக்கள் மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது அடிக்கும்
அறிக்கை ஸ்டன்ட்தான் நேற்றைய கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை என்பது இலங்கை மக்களுக்குக் கூட தெரிந்திருக்கும்

கிராமத்தில் ஒரு சொலவடை ஒன்றை நான் கேள்விப்பட்டதுண்டு ..."வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது "
அந்த சொலவடை கருணாநிதிக்கு நன்றாக பொருந்துகிறது .

Tuesday, April 10, 2012

ocean's thirteen (ஹாலிவுட் சினிமா )


ஒசென்ஸ் 11,ஒசென்ஸ் 12 ஆகிய படங்களின் வரிசைப் பட்டியலில் கடைசிப் படம்தான் ஒசென்ஸ் 13.
கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்ற படங்களை சீரியஸ் தன்மையில் பார்த்து ,பழக்கப்பெற்ற நமக்கு,
நகைச்சுவை கலந்து ,லாஜிக் மீறாமல் ஒசென்ஸ் 13 படத்தை எடுத்திருப்பது ஒரு புதிய பாணிதான் .
இனி கதையின் சுருக்கம் ....



ரியுபனின் இடத்தை  ,வலுக்கட்டாயமாக ஏமாற்றி வாங்குகிறார் வில்லி பேங்க்.அங்கு  பெரிய சூதாட்ட விடுதியை  கட்டுகிறார் வில்லிபேங்க்.
 இதனால் ரியுபன்  நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு பெட்ரெஸ்டில் இருக்கிறார் .அவரின் சிஷ்யர்களான ஜார்ஜ்க்லூனி, மற்றும்
பிராட் பிட் குழுவினர் ,ரியுபன் ஏமாற்றபட்டதற்கு பழிவாங்க ,அந்த சூதாட்ட விடுதியை கொள்ளை அடிக்க
முடிவெடுக்கிறார்கள் .
அதன்பின் ஒவ்வொருவரும் ,அந்த ஹோட்டலின் ஒவ்வொரு பிரிவையும் நோட்டமிட்டு ,விஷயத்தை சேகரிக்கிறார்கள்.
இதனிடையே ,கொள்ளை அடிக்கும் பிளானில் ,பூகம்ப அதிர்வை உண்டாக்கக்கூடிய மிஷின் சொதப்ப, வேறு  மிஷின் வாங்க
பணம் தேவைப்படுகிறது .பெனடிக்ட் என்பவர் பணம் தர,ஒரு கண்டிஷனுடன்  முன்வருகிறார் .சூதாட்ட விடுதியில் ,உள்ள
நான்கு வைர நெக்லஸ்களை ,எடுத்து வரவேண்டுமென கண்டிஷன் போடுகிறார் .ஜார்ஜ்க்லூனி குழுவினர் ஒருவழியாக சம்மதிக்கிறார் .

அதன் பின் ..ஒவ்வொருவராக விடுதிக்குள் சென்று செய்யும் அட்டகாசங்கள்தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ் காட்சிகள் .
வில்லி பேங்கின் ஸ்டெனோவை கரெக்ட் செய்யும் காட்ச்சியில் ,மேட்டேமென் செய்யும் வித்தை காமெடி  ரகம். சூதாட்ட டைஸ்கள்
தயாரிக்கும் இடத்தில் ,ஜார்ஜ்க்லூனி ஆட்கள்  ,கெமிக்கல் கலவையை கலந்து , டைஸ்களை தங்களுக்கு ஏற்ப தாயாரித்து  ,சூதாட்ட விடுதியில்
செய்யும் ஜிம்மிக்ஸ் அட்டகாசம்தான் .


கடைசியில் வில்லிபேங்க் ,ஒன்றும் செய்வதறியாமல் நிற்க.... கண்முன்னே அத்தனையையும் சுருட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள் சூதாட்டகுழுவினர் .
படத்தில் பதிமூன்று பேரும் ,ஒவ்வொரு பகுதியில் இருந்து செய்யும் தொழில்நுட்ப ஹாக்கிங்..நம்மை வியக்கவைக்கிறது .கொள்ளையர்களின் படங்களை ,அமெரிக்க போலீசார் கண்டுபிடித்து ,வில்லிபேங்க்குக்கு
ஈமெயில் அனுப்பும்போது ,அதையும் வழிமறித்து புகைப்படங்களை மாற்றும் யுக்தி நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை .காமெடி ,த்ரில்லர் ,ரொமான்ஸ்
என்று அத்தனையையும் ,சரிவிகிதத்தில் கலந்து தந்த இயக்குனர் ,ஸ்டீவனின் திறமையை வெளிப்படுத்துகிறது இந்த ஒசென்ஸ் 13.





Sunday, April 8, 2012

ஒரு கொலையும் ,கொலையின் பின்னணியும்


கடந்த வாரம் வெளியான ஒரு செய்தியும் ,அதன் அதிர்ச்சி பின்னணியும் 
இங்கே தந்திருக்கிறேன் ..




கர்ப்பத்தை கலைக்க முடியாததால் காதலியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.   ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 24). இவர் சம்பவத்தன்று மர்மமான முறையில் கடலாடி ஊரணியில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாக்கிய லட்சுமியை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமியும், மேலக் கடலாடியை சேர்ந்த பரசுராமன் மகன் கார்த்திக் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் பாண்டியனை பிடித்து போலீசார் கிடுகிப்பிடி விசாரணை நடத்தினர்.   கார்த்திக் பாண்டியன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பாக்கியலட்சுமியும், நானும் காதலித்து வந்தோம். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால், அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம். எனவே கருவை கலைக்க பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. எனவே பாக்கியலட்சுமியை சம்பவத்தன்று கடலாடி ஊரணிக்கு வரவழைத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இதற்கு உடந்தையாக எனது நண்பர்கள் காளிதாஸ், குமரன் ஆகியோர் இருந்தனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பினோம் என்றார். இதையடுத்து கார்த்திக் பாண்டியனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த காளிதாசையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குமரனை தேடி வருகின்றனர்.


இந்த செய்தியில் பல வெளிவராத விசயங்களை பார்ப்போம் ..



கொலையாளியான இந்த காதலன் ,இதுவரை பல பெண்களை 
உல்லாச வலையில் வீழ்த்தி வந்திருப்பதாக சொல்கிறார்கள் ..கொல்லப்பட்ட இந்த பெண் 
கொலையாளியின் இன்னொரு தொடர்புப் பெண்(திருமணமாகி கணவரைப் பிரிந்து இருப்பவள் ) மூலம் பழக்கமாகி இருக்கிறாள் .அந்தப் பெண்தான் 
இவனுடன் பழக்கத்தை ஏற்படுத்த துணை புரிந்திருக்கிறாள்.இதெல்லாம் காவல்துறையின் 
தீவிர விசாரணையின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தொடர்பான  பெண்தான் ,இந்த மூன்று பேரையும் 
போலீசாரிடம் காட்டிக் கொடுத்திருக்கிறாள்.

கொலையாளியின் கூட்டாளிகள் ,மது அருந்தி விட்டுத்தான் இந்த காரியத்தில் இறங்கினார்கள் 
என்று அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .கொலையாளியிடம் அந்தப் பெண் ,ஏற்கனவே 
சில நகைகளை பறிகொடுத்து இருக்கிறாள் .இதனால் அந்தப் பெண்ணின் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் 
,நகையை திருப்பி கேட்ட நேரத்தில்தான் ,இவர்கள் இந்த கொடும் காரியத்தை புரிந்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் , கொலையாளியின் கூட்டாளி 
பிடிபடுவதற்கு முன்பு ,இப்படி சொல்லியிருக்கிறான் .

"நாட்டுல அநியாயம் பெருகிப்போச்சு "!

Friday, April 6, 2012

மாவோயிஸ்ட்களின் அணுகுமுறை சரியா ?



கடந்த ஒரு மாதமாக ,நீங்கள் இந்த விஷயத்தை கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டர்கள்
ஒரிசா மாநில எம்எல்ஏ ஒருவரை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற செய்தியையும்  ..
அதே மாவோயிஸ்ட்டின் மற்றொரு குழு ,சுற்றுலா வந்த இரு இத்தாலிய நாட்டினரை கடத்தி சென்றதையும்
நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இந்த கடத்தல் மூலம் ,சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் 27
மாவோயிஸ்ட் குற்றவாளிகளை விடுதலை செய்ய ,ஒரிசா அரசுக்கு நிபந்தனையையும் விதித்து ,அதற்கு
ஒரிசா அரசையும் சம்மதிக்க வைத்து தற்காலிக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வீரப்பன் செய்தது போன்றே ,அங்கே மாவோயிஸ்ட்கள் இத்தகைய கடத்தல் அணுகுமுறையை
மாதம் தவறாமல் செய்து வருகிறார்கள் . இத்தனை காலமாக மாவோயிஸ்ட்கள் போராடி ,கண்ட பலன்தான் என்னவென்று
பார்த்தால் ,எதுவுமே இல்லையென்ற உண்மைதான் வெளிப்படும் ..தேவை இல்லாத உயிரிழப்புகளை தவிர ,
மாவோயிஸ்ட் குழுக்கள் வேறு என்ன சாதித்தது ?



உள்ளூர் மக்களை ,வேலை வெட்டிக்கு போக விடாமல் ,புரட்சி வசனம் பேசி ,போராட்ட வட்டத்திற்குள்
இணைத்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கிய சாதனையைத் தவிர என்ன செய்து விட்டார்கள் இந்த
மாவோயிஸ்ட்கள் ? ஏராளமான ரயில்களை கவிழ்த்து ,அப்பாவி பொதுமக்களை இம்சித்ததை தவிர
மாவோயிஸ்ட்கள் என்ன பலனை கண்டார்கள் ? நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பை சந்தித்த
ஒரு குழு ,எந்த காலத்திலும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை ..
வெறும் ஒப்புக்கு மீடியாவின் வெளிச்சம் படலாமே ஒழிய ,அவர்கள்  மேல் உள்ள கறை என்றுமே நீங்காது
என்பதை அறியாத கூட்டமாக மாவோயிஸ்ட்கள் இருப்பது ,அவர்களின் அறியாமையை காட்டுகிறது .ஆயுதம் ஏந்தி போராட்டம்
நடத்தி வெற்றி பெறுவது  எல்லாம் ,இனி சாத்தியமில்லை என்பதை உலகமே ஒப்புக்கொண்டு போகையில் ,இவர்கள்  ஆயுதத்தால்
சாதிக்க நினைப்பது பகல் கனவை விட மோசமானது .

மாவோயிஸ்ட்களின்  உண்மையான நோக்கமே அடிபட்டு  , வெற்று  வன்முறையால் ,அமுங்கிப்போனது என்ற செய்தி மட்டுமே  வரலாற்றில் மாவோயிஸ்ட்களின்
பெயரை நியாபகப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .

Thursday, April 5, 2012

The double 2011(ஹாலிவுட் சினிமா )


உளவாளிகளை பற்றிய விறுவிறுப்பான திரைப்படம்தான் இந்த டபுள்ஸ் !துப்பறியும் பாணியில் கதையை
செலுத்திய விதம் கொஞ்சம் ஆவலைத் தருகிறது .இனி கதையை பாப்போம் ..

அமெரிக்க செனட்டர், ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்கிறான் ஒருவன் .அந்த கேஸை விசாரிக்க 
ஓய்வு பெற்ற பால் என்ற அதிகாரியை அழைக்கிறார்கள் .அவருக்குத் துணையாக பென் என்ற இளம் அதிகாரியையும் 
நியமிக்கிறார்கள் .கொலையை செய்தவன் ரஷ்ய உளவாளிதான் என்ற கண்ணோட்டத்துடன் விசாரிக்கிறார்கள் .
கழுத்தை கம்பியால் அறுத்து கொலை செய்பவன் பெயர் கேசியஸ் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.இதனிடையே 
இவர்கள் விசாரிக்கும் ஒவ்வொரு நபரையும் ,பால் தன் கைகடிகாரத்தின் கம்பியின் மூலம் கொலை செய்கிறார் .
இளம் அதிகாரி பென்னுக்கு கொஞ்சம் சந்தேகம் வருகிறது .இதை தெரிந்துகொண்ட பால் .பென்னின் மனைவியிடம் 
இந்த கேஸில் இருந்து பென்னை விலகுமாறு சொல்கிறார் . இன்னொரு ரஷ்ய உளவாளி போலோவ்ஸ்கி உளவு வேலையாக 
அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி வருகிறது. 

இதை சாதகமாக பயன்படுத்தும் பால் , போலோவ்ஸ்கிதான் நாம் தேடும் கேசியஸ் என்ற கொலையாளியாக 
இருக்கலாம் என்று தகவலை சொல்கிறார் .ஆனால் பென் இந்த கண்ணோட்டத்தில் விசாரிக்காமல் ,பாலின் பூர்விகத்தை அலசுகிறார் 
இறுதியில் பால்தான் அந்த கேசியஸ் என்று கண்டுபிடிக்கிறார் . அதே சமயத்தில் பால் ,பென்னை பற்றி ஒரு உண்மையை
கண்டுபிடிக்கிறார் ..அது என்ன ?  என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .


ரிச்சர்ட் கேரி ,மற்றும் டிராபர் கிரேஸ் ஆகிய இருவரும் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார்கள் .
கேசியஸ் என்ற கொலையாளியை முன்கூட்டியே நமக்கு சொல்லிவிடுவது கதையை 
எளிதில் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது .அந்த கதாபாத்திரத்தையும் சஸ்பென்சாக வைத்திருந்தால் ,கதையின் 
வேகம் இன்னும் கூடியிருக்கும் .உளவாளிகளின் வாழ்க்கையில் தனி நபர் பழிவாங்கலை பற்றி 
சொல்லும் இந்த திரைப்படம் ,கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம்தான் .


Tuesday, April 3, 2012

wrath of the titans 2012 (ஹாலிவுட் சினிமா )



தமிழ்நாட்டில் ,அவதார் படத்திற்கு பின்பு ,3டி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது .
மற்ற விட படங்களை 3டி குவாலிட்டி படங்கள் ,எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் ,அதன்
தொழில்நுட்பத்திற்கு நம்மை அறியாமலையே ரசிக்க வைத்து விடுகிறது .அந்த வகையில் மதுரை குரு
தியேட்டரில் wrath of the titans படத்திற்கு நல்ல கூட்டம்தான் .

கிளாஸ் ஆப் தி டைட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த ரேத் ஆப் தி தைட்டன்ஸ் !
படத்தின் ஒன் லைன் . கடவுளின் குழந்தைகளுக்கும் ,தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்தான் .இறுதியில்
யார் தற்காலிக வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் மையக்கரு .

சாம் வோர்திங்டன் ஹீரோவாக தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார் .தன் மகனை காப்பாற்ற ஆரம்பக் காட்சியில்
நெருப்பு பறவையுடன் அவர் மல்லுக்கட்டுவது , ஆர்வத்தை தூண்டுகிறது .இடையிடையே ஹீரோவுக்கு ,உப தெய்வங்கள்
வந்து ,தீய சகதிகளை அழிக்க வழி காட்டுகிறார்கள் .கிராபிக்ஸ் காட்சிகளில் பல விஷயங்கள்
நம் முன்பே பல படங்களில் பார்த்தவையாக இருந்தாலும் .சில விசயங்களை புதிதாக சேர்த்திருக்கிறார்கள் .
குறிப்பாக ,ஒற்றை கண் ராட்சச மனிதன்கள்,மற்றும் ஹீரோவின்  பறக்கும்  குதிரை மூலம் கொஞ்சம் ஆச்சர்யத்தை தருகிறார்கள் .


ஹீரோவுக்கு அப்பாவாக ,பேவரைட் ஸ்டார் லியம்நீசன் நடித்திருக்கிறார் .முதல் பாதியில்,
தீய சக்திகளிடம் சிக்கி  அடக்கி வாசிக்கும் 
அவர் ,இடைவேளைக்குப் பின் புகுந்து விளையாடுகிறார் .மனுஷன் வயசான கேரக்டர்ல நடிச்சாலும் 
தூள் பறத்துகிறார்  .மகாராணியாக  ஹீரோயினை காண்பித்து ,ஹீரோவின் வீர தீர சாகசங்களுக்கு துணை நிற்கிறார் 
கடைசி காட்சியில் வரும் லிப்கிஸ் சீனில் மட்டுமே நம் கண்களில் ஹீரோயின் நிற்கிறார் .மொத்தத்தில் 
அரதப் பழசான கதையை ,புதிய காட்சிகளை மட்டும் சேர்த்து ,3டி தொழில்நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள் .

அந்த 3டிக்காக வேண்டுமானால் ,ஒரு முறை பார்க்கலாம் .



Sunday, April 1, 2012

எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை


எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய
உருக்கமான கவிதை ஒன்று !

நடுத்தமிழ் நிற்கிறது
நடுத்தெருவில் ....
தன் விலாசத்தை
தவறவிட்டு ; அதன் -
திருவிழி உகுக்கிறது
தீர்த்தச் சொட்டு !



எம்.எஸ்
ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ?
எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!

இழந்து நிற்கிறது
இசைக்கலை -
தான்
தங்கியிருந்த -
எம்.எஸ்
என்னும் இன்ஷியலை!

ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி-இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி

என்னணம்
எண்டிசை-இனி
பயணிக்கக் கூடும் -நம்
பண்டிசை?

எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !

வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !

அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அக்தேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !

கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பனுவாய் வெள்ளையனுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கனும் சஞ்சரித்த குருதி !

என்ன சொல்லி
என்ன ?
எரிக்கும்  மயானத்தில்
இருக்கும் ..
வேகுந்தலம் புகுந்தது -காளிதாசன்
சாகுந்தலம் !

என்
எமபுரத்தில் கூவித்திரி என்று -
கூற்றுவன் அழைக்க-அந்தோ
அவன்
கூடப்போனாள் சாவித்திரி ;

தென்மதுரையில் கண்மலர்ந்து 
வட மதுரைக் கண்ணனிடம் 
மீண்டும் போய்ச் சேர்ந்தாள்-
மீரா!

பாட்டூர்புரம்-எனும் 
பதிமதுரை தோன்றிக் -கடைசியில் 
கோட்டூர்புரம் போந்த 
கோகிலத்திற்கு ..

மாங்குயிலும் பூங்குயிலும் 
மண்மிசை ஆகுமோ நேரா ?

தீ 
தின்றது ..
சங்கீத வாணியின் 
சரீரத்தை தான்;அது 
சாப்பிடப் போமோ -அவரது 
சாரீரத்தை ?

குறுந்தகடுகளில்;நாடாக்களில்-
குடியிருப்பார்..


எம்.எஸ்
என்றும் சாகாது;
கடல்-வெயிலடித்துக்
காய்ந்து போகாது ! 

                                                                                    நன்றி ;குமுதம் ரிப்போர்ட்டர் 

பிரபலமான பதிவுகள்