Loading

Thursday, April 5, 2012

The double 2011(ஹாலிவுட் சினிமா )


உளவாளிகளை பற்றிய விறுவிறுப்பான திரைப்படம்தான் இந்த டபுள்ஸ் !துப்பறியும் பாணியில் கதையை
செலுத்திய விதம் கொஞ்சம் ஆவலைத் தருகிறது .இனி கதையை பாப்போம் ..

அமெரிக்க செனட்டர், ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்கிறான் ஒருவன் .அந்த கேஸை விசாரிக்க 
ஓய்வு பெற்ற பால் என்ற அதிகாரியை அழைக்கிறார்கள் .அவருக்குத் துணையாக பென் என்ற இளம் அதிகாரியையும் 
நியமிக்கிறார்கள் .கொலையை செய்தவன் ரஷ்ய உளவாளிதான் என்ற கண்ணோட்டத்துடன் விசாரிக்கிறார்கள் .
கழுத்தை கம்பியால் அறுத்து கொலை செய்பவன் பெயர் கேசியஸ் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.இதனிடையே 
இவர்கள் விசாரிக்கும் ஒவ்வொரு நபரையும் ,பால் தன் கைகடிகாரத்தின் கம்பியின் மூலம் கொலை செய்கிறார் .
இளம் அதிகாரி பென்னுக்கு கொஞ்சம் சந்தேகம் வருகிறது .இதை தெரிந்துகொண்ட பால் .பென்னின் மனைவியிடம் 
இந்த கேஸில் இருந்து பென்னை விலகுமாறு சொல்கிறார் . இன்னொரு ரஷ்ய உளவாளி போலோவ்ஸ்கி உளவு வேலையாக 
அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி வருகிறது. 

இதை சாதகமாக பயன்படுத்தும் பால் , போலோவ்ஸ்கிதான் நாம் தேடும் கேசியஸ் என்ற கொலையாளியாக 
இருக்கலாம் என்று தகவலை சொல்கிறார் .ஆனால் பென் இந்த கண்ணோட்டத்தில் விசாரிக்காமல் ,பாலின் பூர்விகத்தை அலசுகிறார் 
இறுதியில் பால்தான் அந்த கேசியஸ் என்று கண்டுபிடிக்கிறார் . அதே சமயத்தில் பால் ,பென்னை பற்றி ஒரு உண்மையை
கண்டுபிடிக்கிறார் ..அது என்ன ?  என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .


ரிச்சர்ட் கேரி ,மற்றும் டிராபர் கிரேஸ் ஆகிய இருவரும் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார்கள் .
கேசியஸ் என்ற கொலையாளியை முன்கூட்டியே நமக்கு சொல்லிவிடுவது கதையை 
எளிதில் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது .அந்த கதாபாத்திரத்தையும் சஸ்பென்சாக வைத்திருந்தால் ,கதையின் 
வேகம் இன்னும் கூடியிருக்கும் .உளவாளிகளின் வாழ்க்கையில் தனி நபர் பழிவாங்கலை பற்றி 
சொல்லும் இந்த திரைப்படம் ,கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம்தான் .


3 comments:

  1. நண்பரே, முதலேயே வந்தேன்..இப்போது பின்னூட்டம்...
    நல்ல விமர்சனம்..சில நாட்கள் தங்களது பதிவுகளை தவற விட்டுவிட்டேன்.இனி டைம் கிடைப்பின் வாசித்து சொல்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  2. இதை இப்போ பார்க்கிற மூட் இல்லை. ஆனா உங்க ரெகமெண்டேசன்ல இப்போ தான் The Debt டவுன்லோட் போட்டு இருக்கிறேன். சீக்கிரம் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஹாலிவுட் ரசிகன் அவர்களே

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்