கடந்த ஒரு மாதமாக ,நீங்கள் இந்த விஷயத்தை கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டர்கள்
ஒரிசா மாநில எம்எல்ஏ ஒருவரை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற செய்தியையும் ..
அதே மாவோயிஸ்ட்டின் மற்றொரு குழு ,சுற்றுலா வந்த இரு இத்தாலிய நாட்டினரை கடத்தி சென்றதையும்
நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இந்த கடத்தல் மூலம் ,சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் 27
மாவோயிஸ்ட் குற்றவாளிகளை விடுதலை செய்ய ,ஒரிசா அரசுக்கு நிபந்தனையையும் விதித்து ,அதற்கு
ஒரிசா அரசையும் சம்மதிக்க வைத்து தற்காலிக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வீரப்பன் செய்தது போன்றே ,அங்கே மாவோயிஸ்ட்கள் இத்தகைய கடத்தல் அணுகுமுறையை
மாதம் தவறாமல் செய்து வருகிறார்கள் . இத்தனை காலமாக மாவோயிஸ்ட்கள் போராடி ,கண்ட பலன்தான் என்னவென்று
பார்த்தால் ,எதுவுமே இல்லையென்ற உண்மைதான் வெளிப்படும் ..தேவை இல்லாத உயிரிழப்புகளை தவிர ,
மாவோயிஸ்ட் குழுக்கள் வேறு என்ன சாதித்தது ?
உள்ளூர் மக்களை ,வேலை வெட்டிக்கு போக விடாமல் ,புரட்சி வசனம் பேசி ,போராட்ட வட்டத்திற்குள்
இணைத்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கிய சாதனையைத் தவிர என்ன செய்து விட்டார்கள் இந்த
மாவோயிஸ்ட்கள் ? ஏராளமான ரயில்களை கவிழ்த்து ,அப்பாவி பொதுமக்களை இம்சித்ததை தவிர
மாவோயிஸ்ட்கள் என்ன பலனை கண்டார்கள் ? நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பை சந்தித்த
ஒரு குழு ,எந்த காலத்திலும் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை ..
வெறும் ஒப்புக்கு மீடியாவின் வெளிச்சம் படலாமே ஒழிய ,அவர்கள் மேல் உள்ள கறை என்றுமே நீங்காது
என்பதை அறியாத கூட்டமாக மாவோயிஸ்ட்கள் இருப்பது ,அவர்களின் அறியாமையை காட்டுகிறது .ஆயுதம் ஏந்தி போராட்டம்
நடத்தி வெற்றி பெறுவது எல்லாம் ,இனி சாத்தியமில்லை என்பதை உலகமே ஒப்புக்கொண்டு போகையில் ,இவர்கள் ஆயுதத்தால்
சாதிக்க நினைப்பது பகல் கனவை விட மோசமானது .
மாவோயிஸ்ட்களின் உண்மையான நோக்கமே அடிபட்டு , வெற்று வன்முறையால் ,அமுங்கிப்போனது என்ற செய்தி மட்டுமே வரலாற்றில் மாவோயிஸ்ட்களின்
பெயரை நியாபகப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
மிக சரியான பதிவு. வன்முறைவாதிகளால் மக்களுக்கு துன்பத்தையும் அழிவையுமே தர முடியும்.
ReplyDelete// மேல் உள்ள கறை என்றுமே நீங்காது//
ReplyDelete"Surf Excel" உபயோகித்து பார்த்தால் என்ன?