மதுரையில் நடைபெறப்போகும் பாஜகவின் பிரம்மாண்டமான மாநில மாநாடு ,பாஜகவுக்கு தமிழகத்தில்
பெரிய மாற்றத்தை கொடுக்கலாம் என்ற எண்ணம் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பல பாஜகவினர்
நினைக்கின்றனர். அவர்களது நினைப்பு ,நல்ல பலனை கொடுக்குமா என்பதை குறித்துப் பார்ப்போம் ..
பாஜகவின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அத்வானி ,நரேந்திரமோடி ,நிதின்கட்காரி உள்ளிட்ட
பல தலைவர்கள் அவ்வப்போது தமிழகத்தில் வந்து ஒரு சில நாட்கள் தங்கி கட்சிப் பணிகள்,மற்றும்
பிரச்சாரங்களை செய்த போதும் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் அரை சதவிகிதம் கூட உயரவில்லை
என்பதுதான் கசப்பான உண்மை .98,99களில் இருந்த பாஜகவின் வேகம் தமிழகத்தில் இப்போது இல்லை.
இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தொண்டர்கள் அவ்வப்போது நாங்கள் பாஜகவினர் என்று
சொல்லும்போது நம்மையும் அறியாமல் ஆச்சர்யப்பட்டதுண்டு .
தமிழகத்தில் மத்தியில் பாஜக வரவேண்டும் என்ற பொதுவான மனநிலை மக்களிடத்தில் இருந்தாலும்
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓட்டளிக்க தயக்கம் காட்டியே வந்திருக்கிறார்கள் .இந்த நிலைமையில்
மதுரை மாநாட்டில் வைத்து ,தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் ? என்ற உயரிய கொள்கையை
முழங்கப் போகிறார்கள் என்ற செய்தி அடிபடுகிறது .ஒவ்வொரு கட்சிக்கும் தன் கட்சி ஆட்சிக்கு
வருவதென்பது முக்கியமென்றாலும் ,பாஜகவின் லட்சியம் எந்த வகையில் சாத்தியப் படப்போகிறது
என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும் .
புதுப்புது கட்சிகளுக்கு கூட திராவிட கட்சிகள் கூட்டணிக்' கதவை திறந்துவிடும் வேளையில்
பாஜகவுக்கு மட்டும் தமிழகத்தில் கூட்டணிக்கான அனுமதியை கொடுக்க தயங்குகிறார்கள் .இருந்தும்
பாஜகவினர் தளராமல் தேர்தலில் போட்டியிடும் தைரியம் ஒன்றை அனைத்து மக்களும் மெச்சுகிறார்கள்.
மத்தியிலும் பாஜகவுக்கு கூட்டணி சரியில்லை என்றபோதிலும் மக்கள் ஒருமனதாக காங்கிரஸை
ஒதுக்கி பாஜகவை ஆதரிக்கும் பாங்கு தமிழகத்தில் வருமா என்பதுதான் தற்போதைய கேள்வி !
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ..மதுரையில் நடக்கப்போகும் மாநாட்டில்
பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது .இதைவைத்து
பஜாகவினருக்கு ஆதரவு பெறுகுகிறது என்று பாஜகவினர் திருப்தி பட்டுக் கொள்ளலாம் .
ஆனால் மதுரையை சுற்றி உள்ள மக்களுக்கோ ..பிரம்மாண்டமான செட்டுகளை கண்டுகளித்து ,உணவுகளை இலவசமாக ருசிபார்த்து
பொழுதை போக்கலாம் என்ற ஆசை இப்போதே வந்துவிட்டது என்பதை நாமும் புரிந்துகொள்ளலாம் .
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது