தமிழ்நாட்டில் ,அவதார் படத்திற்கு பின்பு ,3டி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது .
மற்ற விட படங்களை 3டி குவாலிட்டி படங்கள் ,எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் ,அதன்
தொழில்நுட்பத்திற்கு நம்மை அறியாமலையே ரசிக்க வைத்து விடுகிறது .அந்த வகையில் மதுரை குரு
தியேட்டரில் wrath of the titans படத்திற்கு நல்ல கூட்டம்தான் .
கிளாஸ் ஆப் தி டைட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த ரேத் ஆப் தி தைட்டன்ஸ் !
படத்தின் ஒன் லைன் . கடவுளின் குழந்தைகளுக்கும் ,தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டம்தான் .இறுதியில்
யார் தற்காலிக வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் மையக்கரு .
சாம் வோர்திங்டன் ஹீரோவாக தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார் .தன் மகனை காப்பாற்ற ஆரம்பக் காட்சியில்
நெருப்பு பறவையுடன் அவர் மல்லுக்கட்டுவது , ஆர்வத்தை தூண்டுகிறது .இடையிடையே ஹீரோவுக்கு ,உப தெய்வங்கள்
வந்து ,தீய சகதிகளை அழிக்க வழி காட்டுகிறார்கள் .கிராபிக்ஸ் காட்சிகளில் பல விஷயங்கள்
நம் முன்பே பல படங்களில் பார்த்தவையாக இருந்தாலும் .சில விசயங்களை புதிதாக சேர்த்திருக்கிறார்கள் .
குறிப்பாக ,ஒற்றை கண் ராட்சச மனிதன்கள்,மற்றும் ஹீரோவின் பறக்கும் குதிரை மூலம் கொஞ்சம் ஆச்சர்யத்தை தருகிறார்கள் .
ஹீரோவுக்கு அப்பாவாக ,பேவரைட் ஸ்டார் லியம்நீசன் நடித்திருக்கிறார் .முதல் பாதியில்,
தீய சக்திகளிடம் சிக்கி அடக்கி வாசிக்கும்
அவர் ,இடைவேளைக்குப் பின் புகுந்து விளையாடுகிறார் .மனுஷன் வயசான கேரக்டர்ல நடிச்சாலும்
தூள் பறத்துகிறார் .மகாராணியாக ஹீரோயினை காண்பித்து ,ஹீரோவின் வீர தீர சாகசங்களுக்கு துணை நிற்கிறார்
கடைசி காட்சியில் வரும் லிப்கிஸ் சீனில் மட்டுமே நம் கண்களில் ஹீரோயின் நிற்கிறார் .மொத்தத்தில்
அரதப் பழசான கதையை ,புதிய காட்சிகளை மட்டும் சேர்த்து ,3டி தொழில்நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள் .
அந்த 3டிக்காக வேண்டுமானால் ,ஒரு முறை பார்க்கலாம் .
நல்ல விமர்சனம் நண்பரே,வாழ்த்துக்கள்..மற்றும் நன்றி.
ReplyDeleteவிமர்சனம் நல்லாயிருக்கு. நமக்கு டீவிடி வந்தாத் தான்.
ReplyDelete