Loading

Thursday, April 26, 2012

கருணாநிதியின் வார்த்தை விளையாட்டு !



நல்ல செயல்பாடுகளின் மூலம் அரசியல் செய்வது ஒரு வகை ,வெறும் வார்த்தை ஜாலத்தை
மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் செய்வது மற்றொரு வகை ..அந்த வாய்ஜால வகையைத்தான்
நம் தமிழின தலைவர் ,கடந்த இருபது வருடமாக வெகுசிறப்பாக செய்து வருகிறார்.

நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியபோது ,அவர் வெளிப்படுத்திய அறிக்கையே சொல்லிவிடும் ,அவரின்
இயலாமையை ..தமிழீழம்தான் தமிழ் மக்களின் இறுதித் தீர்வு என்ற லட்சியத்தை நோக்கித்தான் எமது கட்சி
செயல்பட்டு வருகின்றது என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கிறார்.
பதவியில் இருந்தபோதும் இதையே நான் சொல்லியிருக்கிறேன் என்றுவேறு மேற்கோள் காட்டியிருக்கிறார்.

அதாவது பதவியில் இருந்தாலும் சரி ,இல்லாவிட்டாலும் சரி ,வெறும் வாய்சொல்லை கட்டிக்கொண்டு
மாரடிப்பனே ஒழிய , செயல்பாடுகளை காட்டி யார் பகையையுயம் வளர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற கூற்று
அவர் பேசியதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது .
இப்படிப்பட்ட  உயரிய கொள்கையை உடைய நம் கருணாநிதியின் அறிக்கையை நினைத்து உடன்பிறப்புகளே
நகைக்கும் அளவுக்கு போய்விட்டது என்பதை கருணாநிதி இன்னுமா அறியாமல் இருக்கிறார்? என்ற ஐயம் ஏற்படுகிறது .

ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் ,காங்கிரசின் கால்களில் விழுந்திருந்த
கருணாநிதி இலங்கை விவகாரத்தை மக்கள் மறந்துவிடாமல் இருக்க அவ்வப்போது அடிக்கும்
அறிக்கை ஸ்டன்ட்தான் நேற்றைய கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை என்பது இலங்கை மக்களுக்குக் கூட தெரிந்திருக்கும்

கிராமத்தில் ஒரு சொலவடை ஒன்றை நான் கேள்விப்பட்டதுண்டு ..."வெறும் பேச்சு வேலைக்கு ஆகாது "
அந்த சொலவடை கருணாநிதிக்கு நன்றாக பொருந்துகிறது .

2 comments:

  1. இந்திய தமிழர்களுக்கு அண்ணாதுரையும் இவரும் திராவிடநாடு வாங்கி கொடுத்துவிட்டார்கள் அடுத்து ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் வாங்கி கொடுக்கபோகிறார்கள்.இவர்கள் கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லை.

    ReplyDelete
  2. சனியன் பிடிச்சவன பத்தி பேசுவதே வீண்

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்