Loading

Friday, June 24, 2016

CONTENT கந்தசாமி

எனக்குத் தெரிந்த ஒரு மேனேஜர்
இருக்கிறார்.அவர் ஒரு வித்தியாசப் பேர்வழி என்பதை விட வினோதப் பேர்வழி
எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும் .
அவரிடம் யார் பேசச் சென்றாலும்
CONTENT டாக தான் பேச வேண்டும் .வள வள பேச்சுக்கு இடமில்லை.இந்த பழக்கம் இப்போது முத்திப்போய்
அவரின் அம்மாவிடம் கூட CONTENT இல்லாம ஏன் பேசுறனு
கேட்கும் அளவுக்கு போய்விட்டது .
காலையில் சாப்பிடும் பிரேக்பாஸ்டை கூட ,
பசிக்குது மா,சாப்பாடு கொண்டு
வாங்க என கெஞ்சலாக சொல்லாமல்,
பிரேக் பாஸ்ட் டைம் ஆகிடுச்சு,
CONTENT எங்கே என்று கேட்பதுதான் மேனேஜரின் ஸ்பெஷல் .
அவரின் அப்பாவிடம் கூட ,
சுகர் டேப்லேட் ,
பிரசர் டேப்லெட் எடுத்துக்கோங்கபா என பரிவோடு சொல்லாமல்,
சுகர்க்கு இந்த கண்டெண்ட் .
பிரசர்க்கு இந்த் கண்டெண்ட்
என கறாராக பேசித் தொலைக்குதாம் .
அவரின் ஆபிசிலும் இதே கதைதான் .ஆபிஸ் பாய் ,
குட் மார்னிங் சாரென சிரித்துக்கொண்டே சொன்னால்,
ஏன் எப்பவுமே ரெடிமேடாவே விஷ் பண்ணுற ,ஏதாவது CONTENT டோடு விஷ் பண்ணுயாவென
ஆபிஸ் பாயை கூட ,கிறுகிறுக்க வைத்து கீழ்பாக்க ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்துவிட்டார்
இதற்கெல்லாம் ஒரு படி மேலே
ஒரு விசயம் நடந்திருக்கிறது.
போன வாரம்,
மேனேஜருக்கு பொண்ணு பார்க்க போனார்கள்,போன இடத்தில்
நம்ம மேனேஜர் உம்மென்று இருக்க,
பெண்ணிடம் தனியாக பேச பிரியப்படுகிறார் என நினைத்து,
மேனேஜரையும்,
பெண்னையும் தனியறையில்
விட்டிருக்கிறார்கள்,
சில நிமிடமாகியும் மேனேஜர் பேசாததால்,
அந்த பெண்ணே,
ஹாய்,ஹலோ என ஆரம்பித்திருக்கிறார்,
நம்ம மேனேஜர் அப்பெண்ணை ,
ஏற இறங்க பார்த்துவிட்டு,
"CONTENT "இருக்காவென கேட்க ,
அப்பெண் பயந்துபோய்,
சேலை எதுவும் விலகியிருக்கிறாதாவென பதறிப்போய்
சேலையை அட்ஜஸ்ட் செய்து,
ரூமை விட்டு ஓடியிருக்கிறார்.
கடைசியில்
பெண்ணின் பெற்றோரிடம்
""காமக்கொடுரா""
என ஸ்பெஷல் பாராட்டு வாங்கி வந்ததுதான் மிச்சம் ..
இப்படி CONTENT வெறி பிடிச்ச மேனேஜரின் கழுத்தில்,
மணி கட்டுவது போல்,
ஒருநாள் மேனேஜருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு,
படுத்த படுக்கையாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார்,
டாக்டரிடமும் கண்டெண்ட் புராணத்தை
ஆரம்பித்திருப்பார் போல,
வாயில் டியுப் வைத்து அடைத்துவிட்டிருந்தார்கள் ..,
மேனேஜரின் அப்பாவும்,
அம்மாவும் கனிவுடன் கவனித்து
வந்ததை படுக்கையில் இருந்த
மேனேஜரும் கவனித்திருக்கிறார்.
அவரை பார்க்க வந்த உறவினர்களும் ,
ஆபிஸ் கொலீக்களும் ,
உடம்பை பார்த்துக்கங்க சார்,
உங்களுக்கு ஒன்னும் ஆகாதென
நலம் விசாரித்துப் போனதில்
மேனேஜரின்
மனதில் ரசாயனமில்லாத மாற்றம் நிகழ்ந்து ,
ஒன்றை புரிந்துகொண்டார் ..
நேசம் ,பாசம்,
அன்பு ,அக்கறை
இவற்றில் CONTENT எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
என்பதை அவரின் கண்களில்
விழுந்த கண்ணீர் மேலும் உறுதிப்படுத்தியது .

3 comments:

  1. ஒருவேளை டியூபில் கன்டன்ட் தேடிக்கொண்டிருகிறாரோ ?

    ReplyDelete
  2. மனதை நெகிழ வைத்த பதிவு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்