இந்த சரித்திரகால ஆக்சன் படங்கள் ,எப்பவுமே வரவேற்பை பெறுபவை .அதன் நேர்த்திக்காகவே அந்த படங்களை ரசித்துவிட்டு வரலாம் .
அப்படி ரசித்த படம்தான் immortal.
கதை ரொம்ப சின்னதுதான் .தீயசக்திகளுக்கும் ,நல்ல சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதே கதையின் ஒன்லைன்.
இந்த ஒன்லைன் டெவலப் செய்த விதத்தில் ,மிகத் திறமையாகவே திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.
இனி கதையின் சுருக்கம் .
ஹைபீரியன் என்ற அரக்க வீரர்கள் , எபிரஸ் அம்பு என்ற புனித அம்பை தேடி அலைகிறார்கள் .அந்த அம்பை கைப்பற்றிவிட்டால்
உலகை ஆளலாம் என்ற எண்ணம் தான் முதன்மையான காரணம் .அந்த புனித அம்பை எடுப்பதற்காக ,ரகசியம் தெரிந்த மதகுருக்களை இம்சிக்கிறார்கள்.
அம்பு இருப்பதாக சொல்லப்படும் இடங்களில் உள்ள மக்களையெல்லாம் துன்புறுத்துகிறார்கள். அதில் ஹீரோவின் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.நிறைய இளைஞர்கள்
எதிர்த்து போராட முன்வருகிறார்கள் .ஹீரோ அதை தன் தாய்க்காக மறுக்கிறார். இருந்தும் ,அரக்க எதிரிப்படை ,அவர்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து
அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள் ,அதில் நாயகனின் அம்மாவும் ஒன்று .இதை சகிக்கமுடியாத ஹீரோ ,அவர்களை எதிர்த்து ஒற்றை ஆளாக
சண்டையிட்டு சரண் அடைகிறார்.
இவரைப் போலவே ,அங்கு நிறைய பேரை சிறைப்படுத்தி அடிமைகளாக வைத்து இருக்கிறார்கள். அங்கு கதையின் நாயகி
Freida Pinto
(வருவதை முன்கூட்டியே கணிக்கும் தெய்வப்பிறவி )
உதவி செய்து ,நாயகனுடன் சேர்ந்து தப்பிக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் அந்த புனிதஅம்பை நாயகன் கைப்பற்றுகிறார் .இருந்தும் ஒரு அசம்பாவித சூழ்நிலையில்
அம்பை எதிரிப்படையிடம் தவறவிடுகிறார். அரக்க வீரர்கள் போருக்கு தயாராகிறார்கள் . இந்த அரக்க வீரர்களை எதிர்த்து போரிட ,முன்னமே இளைஞர்கள் படை தயாராக இருக்க
அதில் நம் ஹீரோவை இணைத்துக்கொள்கிரார்கள். இறுதியில் எந்த சக்தி ஜெயித்தது என்பதை ,சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள் .
கலை நேர்த்திதான் எனக்கு இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் .கதையின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்பதால் ,அந்த காலத்தில்
மலைகளை குடைந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நேர்த்தியுடன் செய்து இருக்கிறார்கள் . இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அவ்வளவு தேவை இல்லையென்றாலும்
ஸ்பெசல் எபெக்ட்ஸ் நன்றாக எடுபடுகிறது .
இம்மார்டல் -ஆக்சன் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிற படமாக அமைந்து இருக்கிறது !
படத்தை நேரில் பார்த்தது போன்ற விமர்சனம்
ReplyDeleteமிக்க நன்றி தோழரே
ReplyDelete