Loading

Saturday, March 10, 2012

அரவான் (தமிழ் சினிமா )


பதினெட்டாம் நூற்றாண்டில் களவுத்தொழில் செய்து வந்த கிராமங்களை சூழ்ந்து கதை பின்னப்பட்டு இருக்கிறது .
காவல்கோட்டம் நாவலின் சிறு பகுதியை ,திரைக்கதையில் இணைத்து சொல்லப்பட்டிருக்கும் அரவான் ,தமிழ் சினிமாவுக்கு
கொஞ்சம் புதிது என்றே சொல்லலாம் .வெயில் ,அங்காடித்தெரு இயக்குனரின் அசரவைக்கும் படைப்புதான் இந்த அரவான்


ஆதி (வரிப்புலி ),பசுபதி(கொம்ப்பூதி ) ,பரத் ,கரிகாலன் ,சிங்கம்புலி ஆகியோர் வாழ்ந்திருக்கும் திரைப்படம் இந்த அரவான் .

ஆரம்பக்காட்சிகளிலியே களவுத்தொழிளில் ஈடுபடும் பசுபதி குழுவினரின்(வேம்பூர் கிராம மக்கள் ) ஒவ்வொரு செயலும் ,மிக நேர்த்தியாக
காட்டப்பட்டு மனதை ஈர்க்கிறது .அடுத்தடுத்த காட்சிகளில் ,களவுத்தொழில் செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கும் என்று 
சொல்வதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது . அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த ராணியின் வைரமாலையை திருடியதாக வேம்பூர் கிராமத்தின் மீது
பழி விழுகிறது .அதை தாங்கள் செய்யவில்லை , வைரமாலையை திருடியவனை கண்டுபிடித்து பொருளை கொண்டுசேர்ப்பதாக 
பசுபதி, அரண்மனை காவலாளிகளுக்கு வாக்கு கொடுக்கிறார்.சொன்னபடியே திருடனை சந்தையில் கண்டுபிடிக்கிறார்'.
அந்த திருடன்தான் ஆதி (வரிப்புலி ). பசுபதிக்கு ,ஆதியின் களவாடும் யுக்தி பிடித்திருப்பதால் ஆதியையும் வேம்பூர் கிராமத்தில் தங்கவைக்கிறார்.
ஒரு கட்டத்தில் ,காளையை அடக்கும் போட்டியில் வேம்பூர் கிராமத்திற்கு சவால் விடுகிறார் ஒரு பெரியவர் .சவாலை ஏற்று 
பசுபதி காளையை அடக்கப் போனதில் ,பலத்த காயம் ஏற்பட ,வேறுவழியில்லாமல் ஆதி காளையை அடக்க களமிறங்குகிறார் .
என் அம்மாவின் பூர்விக ஊர் வேம்பூர்தான் என்று கூடியிருந்த மக்களிடத்தில் சொல்லிவிடுகிறார் . இந்த செய்தியை கேட்டுவிட்ட கரிகாலன் 
ஆதியை அடித்து ,உதைத்து இழுத்துச்செல்கிறார்.


இதைப் பார்த்த பசுபதி ,தட்டி கேட்கும்போது  ,ஆதி ஒரு கொலையாளி ,அதனால் அவனை பலியிடப்போகிறோம் என்று கரிகாலன் கூறுகிறார்.
ஆதியின் பிளாஷ்பேக் ஆரம்பிக்கிறது .ஆதியும் ,நண்பர்களும் காவல் காக்கும் பணியைச் செய்கிறார்கள். அந்த நேரத்தில் வந்தேறி பரத்தை யாரோ கொலைசெய்து விடுகிறார்கள்
அந்த கொலை ஆதியின் ஊரில் வைத்து செய்யப்பட்டதால் , அந்த ஊரின் இளைஞர் ஒருவரை பலியிட வேண்டும் என்று கரிகாலன் சொல்கிறார்'
அதை ஒப்புக்கொண்ட ஆதியின் ஊர்க்காரர்கள் , துரதிஷ்டவசமாக ஆதியை தேர்ந்தெடுக்கிறார்கள்.. ஆதி அதற்குள் கொலையாளியை கண்டுபிடிக்க 
முயற்சி செய்கிறார் ? தீவிர முயற்சிக்குப் பின் பரத்தை கொன்றது ஜமீந்தார் என கண்டுபிடிக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு ஊர் போய் சேர்வதற்குள் 
ஆதியின் நண்பனை பலியிட்டு விடுகிறார்கள் .இதனால் ஊரே ஆதியை வெறுக்க ,ஆதி தலைமறைவு வாழ்க்கையாக ஊர் ஊராக சுற்றித் திரிகிறார்.அப்படிதிரிந்து தான் 
கரிகாலனிடம் கடைசியில் மாட்டிக்கொள்கிறார்..இறுதியில் ஆதியை கொன்றார்களா ?  ஆதியை பசுபதியால் காப்பாற்ற முடிந்ததா என்பதை திடுக் 
கிளைமாக்ஸ்சுடன் படத்தை முடிக்கிறார்கள் .




திரைப்படத்தின் பிளஸ் என்று  பார்த்தால் வசந்தபாலனின் திரைக்கதை நேர்த்திதான் .ஒவ்வொரு காட்சியும் ,ரசிகன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
நிறைய மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். பாடகர் கார்த்திக் முதன்முதலாக இசையமைத்து இருக்கிறார்.பாடல்கள் அருமை..பின்னணி இசைதான் கொஞ்சம் இரைச்சல் .
சிங்கம்புலியின் கொஞ்சூண்டு கலாட்டாக்கள் ரசிக்க வைக்கிறது .பரத் ,அஞ்சலிக்கு சிறு கேரக்டர் மட்டுமே ஆனாலும் ,கதையுடன் நன்றாக பொருந்துகிறார்கள்.

ஆதியின் முறுக்கேறிய உடம்பு ,வரலாற்று படத்திற்கான பாத்திரத்தை அப்படியே நிஜமாக்குகிறது. வசன உச்சரிப்புகளும் வட்டார மொழிப்பேச்சிற்கு 
நன்றாகவே பொருந்துகிறது.பசுபதி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் நிலைக்கிறார்.முதல்பாதியில் அவர்தான் திரைக்கதையை தாங்கிப்பிடிக்கிறார்.

மொத்தத்தில் அரவான் - தமிழ் ரசிகர்களை அரவனைத்துவிட்டான் .


No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்