Loading

Tuesday, March 13, 2012

THE DIRTY PICTURE (சில்க் ஸ்மிதா )


1980களில் நம் வாழ்க்கையில் கவர்ச்சி போதையாக தெரிந்த சில்க் ஸ்மிதா ,அவளின் வாழ்க்கை
சிறப்பாக இருந்ததா என்ற கேள்விக்கு
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அலசும் இந்த படம் சொல்கிறது . முதலில் நம்முடைய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை பதிவு செய்ததற்காக DIRTYPICTURE குழுவினருக்கு வாழ்த்துக்கள் .இந்த திரைப்படத்தில்
சில்க் ஸ்மிதாவாக நடித்து ,சமீபத்தில் தேசிய விருது பெற்ற வித்யாபாலனுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் .
இந்த படத்தின் கதை ஒரு இயக்குனரின் மூலம் சொல்லப்படுகிறது .
ஒரு கிராமத்தில் பிறந்து ,சினிமாவுலகுக்கு வர ஆசைப்படும் வித்யாபாலன் (சில்க்ஸ்மிதா ) அதன்படியே அவளின் அம்மாவுடன் 
நகரத்திற்கு வருகிறார் .முதலில் சான்ஸ் கிடைக்க சிரமப்பட்டாலும் ,மனதில் எந்த தாழ்வுமனப்பான்மை இல்லாமல்   அப்போது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறாள்
பின்னாளில் ,எதேச்சையாக ஒரு கவர்ச்சி பாடல் காட்ச்சியால் ஓவர்நைட்டில் புகழடைகிறார். 
அப்புறம் படவுலகின் சூப்பர்ஸ்டார் சூர்யகாந்தை வளைத்து போடுகிறார் வித்யாபாலன் .சூர்யகாந்த் அவரை 
வெறும் படுக்கையறைக்கு மட்டுமே உபயோகித்து கைவிடுகிறார் .இதனால் முதலில் மனம்உடையும் வித்யாபாலன் 
அடுத்து சூர்யகாந்தின் தம்பி ரமாகாந்தை காதலிக்கிறார் ..அவர் சில்க்ஸ்மிதா யாருக்கும் அடங்கமாட்டார் என்பதை புரிந்துகொண்டு 
அவரும் கைவிடுகிறார் ..இதனிடையே புகழின் உச்சியில் இருந்த வித்யாபாலன் படிப்படியாக திரைப்பட வாய்ப்பில்லாமல் தல்லாடுகிறார் .வித்யாபாலனின் 
அம்மாவும் அவரை வெறுக்கிறார் .
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டிருந்தார் . அந்த நேரத்தில் முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் (இவரின் மூலம்தான் கதை சொல்லப்படுகிறது )
வித்யாபாலன் மீது கரிசனம் கொள்கிறார் . ஆனால் வித்யாபலனை ஆரம்பத்தில் குறைசொல்லியே வந்த இந்த இயக்குனரை வித்யாபாலன் அவ்வளவாக கண்டுகொல்வதில்லை .

வித்யாபலனுக்கு கடன்தொல்லை கழுத்தை நெறிக்கிறது.சான்ஸ் கேட்டு போராடுகிறார் .இறுதியில் அவருக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறது .நிர்வாண படத்தில் நடிக்கச்சொல்லி..
வேறுவழியில்லாமல் போதையில் சம்மதம் தெரிவிக்கிறார் ..அதன்பின் உண்மையை உணர்ந்து அழுகிறார் ..அழுதுகொண்டே ஒரு முடிவு எடுக்கிறார் .இதை அந்த இயக்குனரிடம் 
சாடை மாடையாக சொல்கிறார் வித்யாபாலன் ..இயக்குனர் வித்யாபாலனின்  வீட்டுக்கு வந்து பார்கிறார் .வித்யாபாலன் தூக்கமாத்திரை விழுங்கி தற்கொலை செய்துகொன்டதை 
பார்த்து அதிர்ச்சியடைகிறார் ..அத்துடன் முடிகிறது இந்த திரைப்படம் ..

வித்யாபலனின் நடிப்பை ,அந்த கேரக்டரின் ஈடுபாடை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் .வாழ்கையை அதன் போக்கில் விட்டுவிடுவது ,எதையும் ஸ்போர்ட்டிவாக
எடுத்துகொள்ளும் வித்யாபாலன் ,அப்படியே சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டியிருக்கிறார் .1980களின் ஹீரோக்களை சூர்யகாந்த நியபகப்படுத்துகிறார்
நாக்க முக்க பாடலை வித்யாபலனின் அதிரடி ஆட்டத்திற்கு பின்னணி இசையாக சொருகிஇருக்கிறர்கள் .


என் பள்ளிப்பருவத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் ,சில்க்ஸ்மிதாவின் பாடல்களை அடிக்கடி பார்த்து ரசிப்பார் ..சில்க்ஸ்மிதாவையும் அவரையும் இணைத்து
நாங்கள் ஏதாவது சொன்னாலும் அவர் சந்தோசப்படுவார் .துரதிஷ்டவசமாக அன்றைய வருடமே சில்க்சஸ்மிதாவின் தற்கொலை செய்தியை கேட்டு அவர் குலுங்கிஅழுததை 
என்னால் நம்பமுடியவில்லை ..சில்க்ஸ்மிதாவை எவ்வளவு நேசித்து இருக்கிறார் என்பதை அவரின் அழுகை சொல்லியது .சில்க்ஸ்மிதா ..ரசிகர்களுக்கு போதையை ஏற்றி 
தானும் போதையால் வீழ்ந்த சில்க்ஸ்மிதா இன்றும் ஒரு மர்மம்தான் .





































No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்