இந்த ரோஜாவை வாங்குபவள்
எந்த மகராசியோ என
என் உள்மனதில்
எண்ணங்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன ,
எவளும் வாங்கமாட்டாள் என '
எகத்தாளப் பார்வையுடன்
சில காதலன்கள் கிளம்புகிறார்கள்
காதலிகளை இழுத்துக்கொண்டே
மாலை வரத்தொடங்கிய
வேளையில்தான் புரிந்தது
இந்த வருடமும் .
காதலி கிடைப்பதற்கில்லையென,
இப்பொழுது நினைக்கிறேன்
அம்மாவின் தலையில் வைத்து
அழகு பார்த்திருக்கலாம்
இந்த ரோஜாவை ...
ஐந்து வருடத்திற்கு முன் ,ஒரு இனிய காதலர் தினத்தன்று
எழுதியது இந்த கவிதை .
இப்பொழுது நினைக்கிறேன்
ReplyDeleteஅம்மாவின் தலையில் வைத்து
அழகு பார்த்திருக்கலாம்
இந்த ரோஜாவை ...
கவிதை வாழ்கிறது இந்த வரிகளில்..என்ன அழகான எளிமையான கவிதை..ஐந்து வருடங்கள் என்றால், தாங்கள் கவிதை எழுத தொடங்கியது எந்த வயதில் நண்பரே..என்னை ரொம்பவும் கவருகின்றன.நன்றி.
.
ஆழகான கவிதை... கலக்கிட்டீங்க!!!
ReplyDelete