Loading

Thursday, February 2, 2012

தமிழக முதல்வருக்கு இது அழகா ?




இந்த வார சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்திருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்திருக்கும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா,தன் கடந்த கால அணுகுமுறையை ,மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.

உள்ளாட்சித்தேர்தல் முடிந்த கையோடு,பால் விலை ,பேருந்து கட்டணம் உயர்தியதில் ஆரம்பித்து, மின் கட்டணத்தை உயர்த்தப்போகும் எண்ணம் வரை,
ஒவ்வொரு நடவடிக்கையிலும் மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல்எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விலையை உயர்த்தியதற்கான காரணம்
மகா சப்பைக்கட்டு. கஜானா காலி என்பதற்காக ,மக்களின் மீதா பாரத்தை ஏற்றுவது?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேமுதிக உறுப்பினர் ,பால் விலை உயர்வு விசயமாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்,அப்படியே
திசை திருப்பி
 எதிர்க்கட்சி என்னிடம் கேள்வி கேட்பதா ?என்ற
வரட்டு பிடிவாதத்தில் , திராணி இருந்தால் தேமுதிக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பார்க்கட்டும் என்று பேசியிருக்கிறார்.
தன் கட்சி சார்பில் ,இதற்கு பதிலளித்து பேசிய விஜயகாந்த் ,ஆளும்கட்சி இடைத்தேர்தலில் ஜெயிக்கும் பாணி எங்களுக்குத் தெரியாதா ?என கேட்டிருக்கிறார்.
அதோடு விட்டிருக்கலாம் ஜெயலலிதா ..




டெப்பாசிட் இழந்த கட்சியென ,தேமுதிகவை கிண்டல் செய்து பேசியிருப்பது ,முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவுக்கு துளியும் அழகில்லை ..
அதோடு ,தேமுதிகாவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன் என்றும் பேசியிருக்கிறார். இவையெல்லாம் தேவையில்லாத வார்த்தைகள் என்றே பலராலும்
பார்க்கப்படுகிறது. பின்நாட்களில் இவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ,நாடாளுமன்றத் தேர்தலுக்கு ,மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்.
வைகோவை அவமானப்படுத்தியாகி விட்டது ,கம்யுனிஸ்டை கண்டுகொள்ளாமல் விட்டாகி விட்டது, விஜயகாந்தையும் வம்புக்கு இழுத்தாகி விட்டது, பாட்டாளி மக்கள் கட்சியை 
பழி வாங்கி விட்டாச்சு,மிச்சம் மீதி இருக்கும்
சமத்துவ மக்கள் கட்சி ,புதிய தமிழகம் , போன்றவைகளையும் சீந்துவதில்லை என்றாகி விட்டது. அரியணையில் ஏற்றி விட்ட தமிழக மக்களையும் மதிப்பதில்லை.

இவை தவிர ,நீதிமன்றத்தின் மூலம் ,தினமும் குட்டு வாங்கினாலும், ஜெயலலிதா திருந்துவதாக இல்லை..நல்லாட்சி தர போராடுகிறோம் ,என்று நாள்தோறும் 
அறிக்கையில் சொன்னாலும் ,அதற்கான ஆரோக்கியமான அணுகுமுறை ,கொஞ்சம் கூட ஜெயலலிதாவிடம் தெரியவில்லை..மின்வெட்டு நேரம், முந்தைய ஆட்சியை விட
பல மணி நேரம் கூடிவிட்டது மட்டுமே ,ஜெயலலிதாவின் சாதனையாக  தெரிகிறது.

முடிவாக ஒன்று! 
இனியும் ஜெயலலிதா மாறுவதற்கு வாய்ப்பில்லை, வளமை போல் ,தமிழக மக்கள்தான் ,அடுத்த மாற்றத்திற்கான நாளுக்காய் காத்திருக்க வேண்டும் .
.

5 comments:

  1. ரொம்ப கிரிஷ்ப்பா நச்ன்னு எழுதிருக்கடா!

    மேட்டரோட உண்மை நேர்மைய பத்தி ஆராய்வது விட்டுவிடுவோம். ஆனால் நடந்த நிகழ்ச்சியின் பின்புலத்தையும் அந்த காட்சியின் நேர்த்தியான வர்ணணையையும் அழகா, தெளிவா, முக்கியமா “சுருக்கமா” எழுதியதைப் பார்த்து அசந்துட்டேன்.

    கலக்குடா!

    ReplyDelete
  2. என் இனிய இரவு வணக்கம்,
    எனக்கு அரசியல் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாதுங்கோ..மன்னிச்சுருங்க.ஏதோ பார்க்குறது படிக்கிறதோட சரி..ஆனால், பதிவு சூப்பர்.நல்ல நெத்தியடின்னு நினைக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ..உங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும்

    ReplyDelete
  4. மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது

    ReplyDelete
  5. பிரச்சினையே நம் மக்கள் தானே..........இடை தேர்தல் என்றால் கண்டிப்பாக பணம் விளையாடும்...........சங்கரன் கோவில் கிராமங்கள் அதிகம் உள்ள பகுதி.............பணத்தை வாங்கி கொண்டு மக்கள் கண்ணை மூடி கொண்டு ஆளும் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள்............நம் மக்களை திருத்த முடியாது...........பரவாயில்லை பெரிய ஆப்பு ஒன்னு காத்திருக்கிறது.............இப்பொழுது ரயிலஅகழி அதிகம் பேர் போவதால் பஸ் கட்டணம் இன்னும் அதிகம் பேரை பாதிக்க வில்லை என்று கூற வேண்டும் ........மின்சார கட்டணம் கூடும் பொழுது தான் ..அது அதிகம் கிராம மக்களை பாதிக்கும் என நினைக்கிறேன்...தச்சை கண்ணன்

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்