வீட்டிற்கு வந்ததும் அப்பா ,என் மீது எரிச்சலை கொட்டியது ,ஏன் என தெரியவில்லை .
எந்த தவறை என் மீது கண்டுபிடித்தார் எனவும் தெரியவில்லை .
மூன்று நாட்களுக்கு முன்பு ,"கமலாவிடம்" கைகுலுக்கிக்கொண்டு ,பேசியதை தெரிந்துகொண்டு திட்டினாரா ?
இல்லை ,
ஒரு மாதத்திற்கு முன்பு பெருமாள் கோவிலில், "பிரபாவை" பிரசாதம் வாங்கும்போது கரெக்ட் செய்ததை
கண்டுபிடித்து திட்டினாரா ?
அதுவும் இல்லையென்றால் ,
மூன்று மாதத்திற்கு முன்பு ,தங்கரீகல் தியேட்டரில் ,தங்க ஜரிகை போட்ட ,பாட்டியாலா சுடிதார் அணிந்திருந்த
தன்ஷிகாவுக்கு பொறி உருண்டை வாங்கிக்கொடுத்ததை ,என் வளர்ச்சி?? பிடிக்காத ,சில நண்பர்கள் அப்பாவிடம்
சொல்லிக்கொடுத்ததால் என்னை திட்டினாரா ? என பல தவறுகளை பட்டியல் போட்டு யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ..
எதற்கும் அம்மாவின் ரியாக்சன் ,எப்படியிருக்கிறது என அறியும் ஆவலில்,கிச்சனுக்குள் போனேன் .
வாடா ரவி ,சாப்பிடுறா ,,என அம்மா டெம்ப்ளேட் வசனத்தை உதிர்த்தபோது ,கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருந்தது .அம்மாவிடம்
நம்மைப்பற்றி ,அப்பா இன்னும் சொல்லவில்லை போல .
ஆனால் ........
அம்மாவை பார்த்தபோதுதான் நியாபகம் வந்தது .அம்மாவின் பால்ய கால தோழியை பார்க்க ,அம்மாவும் ,நானும்
போயிருந்தோம் .அம்மா பால்ய தோழியுடன் பேசிக்கொண்டிருக்கையில் ,நான் சும்மா இருக்காமல் ,பால்ய தோழியின் மகளான
சரண்யாவை ஓரக்கண் வைத்து பார்த்ததை ,நெற்றிக்கண் திறந்து எவன் மாட்டிவிட்டானோ தெரியவில்லை ,என பயந்துகொண்டிருந்த போதுதான்
சுரேஷின் நியாபகம் வந்தது .
சுரேஷ்ணு சொன்ன உடனே ,ஏன் அப்படிப் பார்க்கிறீங்க ?
நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது ,அப்படி எந்தக் கன்றாவியும் இல்லை
சுரேஷ் எனக்கு நண்பன் மட்டும்தான் .
சுரேஷிடம் என் அப்பாவின் எரிச்சலை பற்றி கேட்டேன் .சுரேஷ் சிரித்துக்கொண்டே ,என் வயிற்றில் சிட்ரிக் ஆசிடை ஊற்றினான் .
டேய் ரவி ,மாட்டுனடா மவனே ,
ஏண்டா இப்படிப் பண்ண ?
எங்க அப்பாதாண்டா ,உங்க அப்பாகிட்ட உன் வண்டவாளத்தை சொன்னாரு ,
போயும் போயும் ஏண்டா உனக்கு இப்படி புத்திப் போகுது ,
சுரேஷ் விஷயத்தை சொல்லாமல் ,இழுத்தடிக்கும்போதே எனக்கு தலை சுற்றியது.
டேய் சுரேஷ் ,நேரா மேட்டருக்கு வாடா ? எந்த தப்ப ,எங்க அப்பா தெரிஞ்சுகிட்டாரு ?
அது ஒன்னுமில்லைடா ரவி ,]
மூணாவது தெருவுல ,உங்க அப்பா கரெக்ட் பண்ணி வைச்சுருந்த ,மும்தாஜ் ஆண்டியை ,நீ ரூட் விட்டதை ,எங்க அப்பா பார்த்துட்டார்டா !
அதான் உங்க அப்பாவால தாங்க முடியலை.....
நல்ல கதை..இண்டிரஸ்டிங் ஸ்டோரி..எண்டிங் சூப்பர்..கதையெல்லாம் எழுதி அசத்துரீங்க..விமர்சனம் எப்ப நண்பரே ??
ReplyDeleteமிக்க நன்றி.
இனிய சகோ...லிப்ஸ்டர் அவார்ட் அப்படிங்கற ஒரு விருதை எனக்கு தந்துள்ளார்கள்..இதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..இதை தங்களை கவன்ற ஐந்து பதிவர்களுக்கு பகிரவும்..நன்றி,
ReplyDeleteஇப்பொழுதுதான் உங்கள் வலைப்பூ பக்கம் வருகிறேன்.
ReplyDeleteவிருதுக்கு வாழத்துக்கள், நண்பரே!
* அசத்தலாக கதை எழுதியிருக்கிறீர்கள். இதுபோல இன்னும் பல காமெடி சிறுகதைகள் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்..!
மிக்க நன்றி நண்பர்களே ,குமரன் அவர்களே ,உங்களுக்கு என் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDelete