Loading

Wednesday, February 22, 2012

IN TIME (2011)ஹாலிவுட் விமர்சனம்




இந்த திரைப்படத்தை பார்த்தபோது ,சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்னு ,எழுத்தாளர் சுஜாதா சொன்னதுதான் நியாபகம் வருது .

சுத்தி வளைக்காம ,கதைய பார்த்துடலாம் ..

ஒவ்வொரு மனிதனுக்கும் ,25 வருஷம் மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகிறது .இந்த 25 வருட
கணக்கை ,ஓவ்வோருவரின் மனிக்கட்டிலும் சுட்டிகாட்டப்பட்டிருக்கும் .மேற்கொண்டு வாழ ஆசைபட்டால் ,வேலைகள் செய்தோ ,மற்றவர்களிடம்
கடன் வாங்கியோ உங்கள் வாழ்நாள் நேரத்தை கூட்டிக்கொள்ளலாம் .இப்படித்தான் ஹீரோவும்,அவனின் அம்மாவும் ,
வாழ்நாளை கூட்டிக்கொள்ள வேலை பார்க்கிறார்கள் ..

இதனிடையே 100 வருடத்திற்கு ஆயுளை வைத்திருக்கும் ஒருவனை ,வில்லன் கூட்டம் (மற்றவர்களின் நேரத்தை ,மிரட்டி
வாங்கிக்கொள்ளும் கூட்டம் ) பிடிக்க ,அவர்களிடமிருந்து ஹீரோ அவனை காப்பாற்றுகிறார். அதிர்ஷ்டவசமாக ,அந்த நூறு வருட ஆயுள்
நேரத்தையும் ஹீரோவிடமே கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்..,இப்போது ஹீரோவை அந்த வில்லன் கூட்டம் துரத்துகிறது.



ஹீரோவுக்கு கிடைத்த நூறு வருட ஆயுளில் ,சரிபாதியை அவரின் அம்மாவுக்கு கொடுக்க நினைக்கிறார்,ஆனால் துரதிஷ்டவசமாக் 
அவரின் அம்மா ,நேரமின்மை காரணமாக இறக்கிறார்.அதன்பிறகு ஹீரோ சீட்டாட்டத்தின் மூலம் மேலும் ஆயிரம் வருடங்களை 
பெற்றுக்கொள்கிறார் .இப்படிப்பட்ட நேரத்தில் ,வில்லன் படை ,ஹீரோவை பிடித்து ஆயிரம் வருட ஆயுளையும் பறித்துக்கொண்டு 
வெறும் ரெண்டுமணிநேரத்தை மட்டும் ஹீரோவுக்கு விட்டுச்செல்கிறார்கள் .அந்த நெருக்கடியான கட்டத்தில் இருந்தது ஹீரோ தன் ஆயுள் நேரத்தை மீட்டாரா  ?எதிரிகளை 
 பழிவாங்கினாரா ?இல்லையா ? என்பதை 
கொஞ்சம் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்கள் .

இந்த திரைக்கதையின் சுவாரஸ்யம் என்னவென்றால் ,25 வயதிற்கு மேல் யாருடைய வயதும் ஏறுவதில்லை ,வெறும் வருடக்கணக்கை
கையில் பார்த்துக்கொள்ளலாம். ஹீரோவும் 25வயது ,அவரின் அம்மாவும் 25 வயது தோற்றம் உடையவள்.இப்படி திரைப்படம் முழுக்க 
சில வினோத கற்பனைத்திறனை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் .சைன்ஸ் பிக்சன் கதையில் ,இந்த திரைப்படமும் ஒரு சுமார் ரகத்தை சேர்ந்த 
வித்தியாசமான படம் .ஒருமுறை பார்க்கலாம் .


3 comments:

  1. ரொம்ப ரொம்ப திரைப்படம் குறித்த நல்ல பார்வை..என்னை போல இல்லாமல் ரொம்ப சுருக்கமாக நச்சினு கதையை சொல்லி அழகாக எழுதி இருக்கீங்க..படம் பார்க்க வேண்டும் என்றே நினைத்தேன்..சில படங்கள் பார்க்க கிடப்பதால் சில நாட்கள் ஆகக்கூடும்.நன்றி நண்பரே.வாழ்த்துக்கள்.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  2. நச் விமர்சனம். வித்தியாசமான கான்செப்ட்டுக்காக மட்டும் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. ஹாலிவுட் ரசிகன் அவர்களே ,நீங்கள் சொல்வது உண்மைதான் ...மிக்க நன்றி

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்