Loading

Tuesday, July 24, 2012

ஜெயலலிதாவின் தொடர்கதை !


ராமாயணத் தொடர் கூட இத்தனை வருடமாக இழுத்திருக்க முடியுமா என தெரியவில்லை.அதையும் தாண்டி
அம்மையாரின் (ஜெயலலிதா )வழக்கை வாரம்,போய்,மாதம் போய் ,வருடங்களும் கடந்துகொண்டே இருக்கின்றன.
மற்றவர்களின் வழக்குகளை எல்லாம் விரைந்து முடிக்கச் சொல்லி ,அறிக்கை விடும் ஜெயலலிதா ,
தன்னுடைய  வழக்கு நிலுவையில் இருக்கிறதென்பதை மறந்தும் ,பொதுவெளியில் காட்டிக்கொள்ளாமல்
நடந்துகொள்கிறார்.

ஒரு நிருபரிடம் ஜெயலலிதா இப்படிப் பதில் சொல்கிறார்,என்னையும் ,கருணாநிதியையும் ஒப்பிட்டுப்
பேசாதிர்கள்,நான் ஊழல்வாதி இல்லையென,ஆங்கில சானல் நிருபரிடம் இப்படிக் கூறுகிறார்.
அவருக்கு ,பெங்களூரு நீதிமன்றத்தில் ,தன் மீதான ஊழல் வழக்கு இருப்பதாகவே ,நினைக்கவில்லை.
அப்படிப்பட்ட நேர்மையான ? ஜெயலலிதா ,தன் மீது புனையப்பட்ட வழக்கென ஒவ்வொரு முறையும்
கூறிக்கொள்பவர்,நேரடியாக சென்று வழக்கை சந்தித்திருந்தால் ,ஒரு வருடத்தில் முடிந்திருக்குமே.

ஒவ்வொருமுறையும் ,எதையாவது காரணம் சொல்லி ,கீழ்கோர்ட்,மேல்கோர்ட்டென அப்பீல் வாங்கி ,தனிநீதிமன்றம்
அமைத்து,பின் அங்கேயும் உயர்நீதிமன்ற அப்பீல்,உச்சநீதிமன்ற அப்பீல் என காலம் கடத்திக்கொண்டிருப்பதைப்
பார்த்தாலே தெரிகிறதே ,ஜெயலலிதா  ஒரு வரலாற்று சிறப்புபெற்ற ஊழல்வாதியென.அரசு வழக்கறிஞர்,அடுக்கடுக்காக
ஜெயலலிதா  மீது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை வைத்து வாதாடினால்,அதற்கான விளக்கத்தை தராமல்,அந்த
வழக்கறிஞரை மாற்றத்தான் ஜெயலலிதா அன் கோ  முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


ஜெயலலிதாவின்  தொடர்கதையில் ,இரண்டாவது கதாநாயகியான சசிகலாவை விட்டு ,எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பென
வாக்குமூலம் கொடுக்கவைத்தாயிற்று.இருப்பினும்,நீதிபதி அம்மையாரை விடுவதாக இல்லையென தெரிந்தபின்,
உடல்நிலை சரியில்லை,சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் ,தினகரனுக்கு வாய்ப்புண் என சகட்டு மேனிக்கு ,அசட்டு 
காரணங்களை அடுக்கி ,அடுத்தடுத்த வாரங்களை கடந்தாயிற்று .நீதிபதியும் வெறுத்துப்போய் ,அடுத்தமுறை 
காரணம் எதுவும் சொல்லக்கூடாதென,கண்டிப்புடன் கூறி ,வழக்கு விசாரணையை ஜூலை31ம் தேதி 
ஒத்திவைத்துவிட்டார்.இப்போதும் ஒரு காரணத்தை சொல்ல ,ரெடியாக இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை மாதங்கள் ,வருடங்கள் இந்த பெங்களூரு தொடர்கதையை இழுக்கப் போகிறாரென தெரியவில்லை.

வளர்க ஜெயலலிதாவின் தொடர்கதை.

3 comments:

  1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நண்பரே.விஷ கிருமிகள் பரவிவிட்டன என்று சொன்ன அந்த பெரியவர் வாயிக்கு சக்கரைதான் போட வேண்டும்.

    ReplyDelete
  2. ஹி ஹி..எல்லா அரசியல் கிருமினல்ஸ்ஸூம் ஊழல் பார்ட்டிதான் நண்பா...
    ஊழல் இல்லாத காலத்துக்கு இன்னும் 100 வருஷம் பின்னாடி போகனும்

    ReplyDelete
  3. சிட்டுகுருவியார் சொல்லவந்தது என்னவென்றால் நாங்கள் {dmk மற்றும் admk }மட்டுமல்ல காமராஜரும் ஊழல் பேர்வழி தான்,எங்கள் பாட்டன் வெள்ளைக்காரன் தான் யோக்கியன்.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்