Loading

Friday, November 2, 2012

FORREST GUMP (மிகச்சிறந்த ஹாலிவுட் திரைக்காவியம் )




இன்று, வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்வதற்கு இங்கே எத்தனை பேர் தயாராய் இருப்பார்கள் ?
அப்படி நாம் தயாராக இருந்தாலும்,நம்முடைய குடும்ப வட்டம்,நம்மை அப்படி வாழ அனுமாதிப்பார்களா ?
உங்கள் நண்பர்களின் வருங்காலக் கனவுகளுக்கு ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?
இல்லை வாழ்க்கையில் பல அடிகள் வாங்கிய முன்னாள்  காதலியை எந்தவித சங்கோஜம் இல்லாமல் ஏற்று இருக்கிறீர்களா  ?
ஒருக்கால்
இவைகள் அனைத்தையும்  நம் மனநிலை செய்ய அனுமதித்தாலும்,நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை நம்மை  ஒருபோதும் செய்ய
அனுமதிப்பதில்லை.இந்தப் படத்தின் கதாநாயகன்(FORREST) எந்தவித குழப்பமும் இல்லாமல் எப்படி பல விசயங்களை
கடக்கிறான் என்பதை ஃபாரஸ்ட்கம்ப் திரைப்படம் நமக்கு மிகஇயல்பாக புரியவைக்கிறது.
மிகுந்த தன்னம்பிக்கையூட்டும் பட வரிசைகளில் "ஃபாரஸ்ட் கம்ப்" மிக முக்கிய இடம் வகிக்கிறது.




சரி ஃபாரஸ்ட்கம்ப் திரைப்படத்தின் திரைக்கதையை பார்க்கலாம்.

ஃபாரஸ்ட் கம்ப் (நாயகனின் பெயர்')பேருந்திற்காக பஸ்ஸ்டாப்பில் காத்திருக்கிறார்.அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒரு
பெண்மணியிடம் பேச்சுவாக்கில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார்.
ஃபாரஸ்ட் தன்னுடைய இளவயதில் இயல்பாக நடக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.. இதனால் சிறுவன் ஃபாரஸ்டை
வழமையான ஸ்கூலில் சேர்க்க அவரின் அம்மா தன்னையே பள்ளி மேலாளரிடம் கொடுத்துத்தான் சேர்க்க
முடிகிறது. முதலில் ஃபாரஸ்ட்டுக்கு யாருமே பள்ளி வாகனத்தில் அமர இடம்தர மறுக்கிறார்கள்.பின் ஜென்னி என்ற
சிறுமி இடம் தருகிறாள்.அதன் பின் ஜென்னியும்,ஃபாரஸ்ட்டும் சிறந்த நண்பர்களாகிறார்கள்.
ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் ஃபாரஸ்ட்'டை கல்லால் அடிக்கிறார்கள்,இதைப் பார்த்த ஜென்னி  ஃபாரஸ்ட்டை
ஓடச்சொல்கிறாள்.ஒழுங்காக நடக்கமுடியாத ஃபாரஸ்ட் ,காலை இழுத்துக்கொண்டே ஓடமுயற்சிக்கிறான்,
பின் மெதுமெதுவாக வேகத்தை கூட்டி தன்னால் மற்றவர்களைப் போல ஓடமுடியும் என்பதை
உணர்கிறான்.

ஃபாரஸ்ட்டின் கதையை கேட்டுக்கொண்டிருக்கும் பெண்மணிக்கு பேருந்து வந்துவிட அவர் கிளம்பிவிடுகிறார்.பின்
மற்றொருவரிடம் கதையை தொடர்கிறான் நாயகன் ஃபாரஸ்ட்.




பள்ளிக்காலம் முடிந்து ஃபாரஸ்ட்டும் ,ஜென்னியும் கல்லூரிக்கு செல்கிறார்கள்.இப்போதும் ஃபாரஸ்ட்டை சில 
இளைஞர்கள் கல்லால் அடிக்க முற்பட,ஜென்னி ஃபாரஸ்ட்டை ஓடச்சொல்கிறாள்.ஃபாரஸ்ட்டும் ஓடத்துவங்குகிறான்.
பல தூரம் ஓடி,ரக்பி விளையாடும் மைதானத்திற்குள் ஓடுகிறான்,அவனின் ஓட்டத்தை கவனிக்கும்
ரக்பி கோச், ஃபாரஸ்டை  விளையாட்டில் சேர்த்துக்கொள்கிறார்.அதிலும் ஃபாரஸ்ட் கல்லூரிக்காலம் முழுவதும் 
ஜொலிக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடித்த ஃபாரஸ்ட்டுக்கு ராணுவத்தில் சேர அழைப்பு.ராணுவ முகாமுக்கு செல்கிறான்.ராணுவ வண்டியிலும் 
ஃபாரஸ்ட்டுக்கு இடம் தர மறுக்கிறார்கள்,பின் ஒருவர் இடம்தருகிறார்.அவர் பெயர் பாபா.இருவரும் வியட்நாம் போருக்கு 
அமெரிக்க ராணுவப் படையுடன் சேர்ந்து செல்கிறார்கள்.பாபாவும் ஃபாரஸ்ட்டும் சிறந்த நண்பர்களாகிறார்கள்.ராணுவப் 
பணி முடிந்தவுடன் பெரிய அளவில் மீன்வியாபாரம் செய்யப் போவதாய் பாபா ஃபாரஸ்ட்டிடம் சொல்லி வைக்கிறான்,நீயும் கூட
பார்ட்னராக சேரலாமென ஃபாரஸ்ட்டிடம் கூறுகிறான்.

வியட்நாம் போர்ப்படையில் ஃபாரஸ்ட் ,பாபா இருக்கும் அணிக்கு லெப்டினன்ட் டேன் தான் சீனியர் ஆபிசர்.அவர் சொல்வதைக்
கேட்டுத்தான் வீரர்கள் செயல்படுகிறார்கள்.ஒரு கட்டத்தில் எதிரணி விமானம் லெப்டினன் டேனின் குழுவை தாக்க, 
அதில் பல பேர் காயமடைகிறார்கள்.லெப்டினன் டேன் தன்னுடைய இரு கால்களையும் இழந்துவிடுகிறார்.
ஃபாரஸ்ட்டின்  நண்பன் பாபா இறந்துவிடுகிறான்.

இறந்திருந்தால் எனக்கும் பேர் கிடைத்திருக்கும்,இப்படி இரு கால்களை இழந்தும் தன்னை ஏன் காப்பாற்றினாய் என ஃபாரஸ்ட்டிடம் லெப்டினன்ட் டேன் 
சத்தம்போடுகிறார்.பின் லெப்டினன் டேனை பணியில் இருந்து ராணுவம் விடுவிக்கிறது.

இந்த ரெண்டு விசயத்திலும் ஃபாரஸ்ட்டுக்கு வருத்தம் இருந்தாலும்,ராணுவ முகாமில் விருப்பு,வெறுப்புகளை 
காட்டக்கூடாதென லெப்டினன்ட் டேன் முன்பு கூறியிருந்ததால் அதையே கடைபிடிக்கிறான்
ஓய்வு கிடைக்கும்போது 
ராணுவமுகாமில் நாயகன் ஃபாரஸ்ட் டேபிள்டென்னிஸ் கற்றுக்கொள்கிறார்.பின் அதிலும் 
சிறப்பாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.
சில மாதங்களில் ஃபாரஸ்டின் ராணுவப் பணி முடிவுக்கு வருகிறது.

வீட்டிற்கு திரும்பிவரும் ஃபாரஸ்ட்டை அவரின் அம்மா,டேபிள் டென்னிஸ்
போட்டியில் ஜொலிக்குமாறு சொல்கிறார்.ஆனால் ஃபாரஸ்ட் தன்னுடைய நண்பனின்
கனவான மீன்வியாபாரத்தை நடத்த முடிவெடுக்கிறார்.
இதனிடையே தன்னுடைய  ஆரம்ப காலத் தோழியான ஜென்னியை கிளப்பில் பாடகியாக பார்க்கிறார்.
பல பேர் அவளை சீண்டுவதை பார்த்து கோபமடைகிறார் 
தன்னுடன் வந்துவிடுமாறு ஜென்னியை அழைக்கிறான் ஃபாரஸ்ட்.பலவித குழப்ப நிலையில் 
இருக்கும் ஜென்னி அதை மறுத்து,தனக்கு நிறைய வேலை இருப்பதாக கூறுகிறாள் . 




இந்தநேரத்தில் லெப்டினன்ட் டேன்னை எதேச்சையாக சந்திக்கிறான் ஃபாரஸ்ட்.அவருடன் 
கொஞ்ச நாட்கள் தங்கும் ஃபாரஸ்ட்,தான் மீன் வியாபாரம் செய்யப்போவதாய் சொல்கிறான்.
இதைக் கேட்டு சிரிக்கிறார்' லெப்டினன்ட் டேன்.எதைப்பற்றியும் கவலைப்படாமல்
மீன்பிடி தொழிலில் இறங்குகிறான்.லெப்டினன்ட் டேன்னும் உதவிக்கு வருகிறார்.
அதிலும் படிப்படியாக முன்னேறும் ஃபாரஸ்ட் ,நகரத்திலேயே பெரிய
மீன்வியாபார கம்பெனியாய் கொடிகட்டி பறக்கிறார்.
அதில் வரும் வருமானத்தில் பாதியை இறந்த நண்பன் பாபாவின் வீட்டிற்கு தந்துவிடுகிறான்.
லெப்டினன்ட் டேன்,தன்னை வியட்நாம் போரில் காப்பாற்றியதற்கு ஃபாரஸ்ட்டிற்கு இப்போது நன்றி தெரிவிக்கிறார்.

ஒருநாள் ஃபாரஸ்ட்டின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத தகவலைக் கண்டு வீட்டிற்கு வாருகிறான்.
ஃபாரஸ்டின் அம்மா ,தான் மனநிறைவாக இருப்பதாக கூறுகிறாள்.பிறிதொரு நாளில்
ஃபாரஸ்ட்டின் அம்மா இறந்துவிடுகிறாள். ஃபாரஸ்ட்டின் வீடு இப்போது
வெறுமையாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் ஜென்னியின் வாழ்க்கை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது,போதைப்பொருளுக்கு
வேறு அடிமையாக மாறிப் போயிருக்கிறாள்.
ஃபாரஸ்ட் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.மிக நீண்ட நாட்களாக தூக்க கலக்கத்தில்
இருக்கும் ஜென்னி,ஃபாரஸ்ட்டின் வீட்டில் ஓய்வு எடுக்கிறாள்.

இறுதியில் ஃபாரஸ்ட்  ஜென்னியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா என 
கேட்கிறான்.ஜென்னியோ நான் உனக்கு ஒத்துவரமாட்டேன் என விரக்தியுடன் கூறுகிறாள்.
அன்றைய இரவில் ஃபாரஸ்ட்டின் ரூமிற்கு வரும் ஜென்னி,ஃபாரஸ்டுடன்
உறவு வைத்துக்கொள்கிறாள்.
மறுநாள் அவசர அவசரமாக ஜென்னி வீட்டை விட்டு கிளம்பிவிடுகிறாள்.இதனால் 
பெரும் மனச் சுமையில் இருக்கும் ஃபாரஸ்ட், திடிரென ஓடக் கிள்ளம்புகிறான்.
ஒருநாளல்ல ஒரு வாரமல்ல,மூன்று வருடமாக அமெரிக்கா முழுவதும் ஃபாரஸ்ட்
ஓடுகிறான்.இதன் மூலமும் அமேரிக்கா முழுவதும் பிரபலமடைகிறான்.
டிவிசெய்தி மூலம் ஜென்னியும் அறிந்துகொள்கிறாள்.பின் ஃபாரஸ்டிற்கு
கடிதமெழுதி அவளின் இருப்பிடத்திற்கு வரச்சொல்கிறாள்.


அதற்காகத்தான் பஸ்ஸ்டாப்பில் காத்திருப்பதாக,தன்னுடைய கதையை கேட்கும்
பாட்டியிடம் ஃபாரஸ்ட் கூறி விடைபெறுகிறான்.ஜென்னியை சந்திக்கும்
ஃபாரஸ்ட்,அவளுக்கு பையன் இருப்பதை அறிந்துகொள்கிறான்.அது 
நம்முடைய மகன்தான் என ஃபாரஸ்டிடம் கூறுகிறாள் ஜென்னி.

இந்தமுறை ஜென்னியே,திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்கிறாள்.\
சந்தோஷமாக சம்மதம் சொல்லும் ஃபாரஸ்ட்,திருமணம் செய்துகொள்கிறான்.
திருமணத்திற்கு வருகை புரியும்,லெப்டினன்ட் டேன்,செயற்கைகால் பொருத்தியிருப்பதை
மிக ஆச்சர்யமாக கேட்கிறான் ஃபாரஸ்ட்.

நாட்கள் ஓடுகிறது.ஜென்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் இறக்கிறாள்.
முதன்முறையாக ஜென்னியின் கல்லறை முன் அழுகிறான் ஃபாரஸ்ட்.
அம்மா,ராணுவ வீரன் பாபா,லெப்டினன்ட் டேன் அத்தனை பேரையும்
விட ஜென்னிதான் என் வாழ்க்கையில் முக்கியமானவள் என்பதை 
நினைவுகூறும் ஃபாரஸ்ட்,தன்னுடைய மகனை ஸ்கூல் வேனில் 
அனுப்புவதற்காக காத்திருக்கிறான்.

"ஃபாரஸ்ட்டின் காலுக்கு கீழே இருக்கும் ஒரு இறகு,காற்றில் பல திசைகளில் பறப்பதுடன் "நிறைவுபெறுகிறது.

திரைப்படத்தின் மொத்த கருவையும் அந்த ஒற்றை இறகு அழகாக உணர்த்திவிடுகிறது.

ஃபாரஸ்ட் தன் வாழ்க்கையை பற்றி குறிப்பிடும்போது
அன்றைய நேர அரசியல் சூழ்நிலையையும் \
அவ்வப்போது நினைவு படுத்துகிறார்.
அமெரிக்க அதிபர்களை தான் சந்தித்ததை எந்தப் பெருமையிமின்றி 
ஃபாரஸ்ட் கூறுவதை ,பேருந்திற்காக நிற்கும் பயணிகள் 
ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.எந்தவிதப் தற்புகழ்ச்சி 
இல்லாமல் ,தன்னுடைய சுய வாழ்க்கை குறிப்பை 
ஃபாரஸ்ட் சொல்வதுதான் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

மிகச் சிறந்த படமாக கருதப்படும் ஃபாரஸ்ட்கம்ப்,பை
விடுமுறை நாளில் அமைதியான சூழ்நிலையில் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணங்களில் 
இந்தப் படமும் இடம்பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை சுருக்கமாக சொல்ல நான் முயன்றாலும்,
நாயகன் ஃபாரஸ்டின் வாழ்க்கையைப் போலவே 
இந்தப் பதிவையும் அதன் போக்கிலே விட்டுவிட்டேன்.

ஃபாரஸ்ட் கம்ப்பின் முக்கிய கதாபாத்திரங்களான
1)ஃபாரஸ்ட் கம்ப்
2)ஜென்னி
3)ஃபாரஸ்டின் நண்பன் பாபா 
4)லெப்டினன்ட் டேன் 

ஆகியோரை பற்றிய குறிப்புகளையும்,சில நுணுக்கமான காட்சிகளை பற்றியும்  இன்னொரு பதிவில் எழுதவேண்டியிருக்கிறது.
நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்,நன்றி !

நடிகர் :டாம் ஹாங்க்ஸ் மற்றும் பலர்
ஒளிப்பதிவு:டான் பர்கஸ்


3 comments:

  1. சுட சுட சூடான பதிவுகளை ஒட்டியின் மூலமாக சென்றையுங்கள்,,, உங்களுக்கு பிடித்த தளங்களை Follow செய்து சேகரித்து வையுங்கள்,,,

    உடனே ஒட்டியுடன் இணையுங்கள்....

    www.otti.makkalsanthai.com

    ReplyDelete
  2. மிக அழகாக திரைப்படத்தின் கதையையே சொல்லி முடித்திருக்கிறீர்கள் கதை கேட்ட எனக்கு பார்க்கனும் என்ற ஆசை அதிகமாகிவிட்டது
    விரவில் பார்க்கிறேன்

    ReplyDelete
  3. நன்றி சிட்டுக்குருவி அவர்களே

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்