எங்கே போனது
உன் பொழிவான முகம் ?
உன் துறுதுறு
கேலிப்பேச்ச்சும் ,
கிண்டலுடன் வரும்
வசிய வார்த்தைகளும்
எங்கே போனது ?
அனைவரையும் கவர
உபயோகப்படுத்தும் ஸ்டைல்களும்,
நல்ல விசயங்களை
தேடுகின்ற அக்கறையும்
எங்கே போனது ?
இவையனைத்தையும் விட ,
உன் வெள்ளைமனது
இன்று சிதிலமடைந்திருப்பதற்கு
காரணமென்ன ...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட செல்ல மகளே .
டீச்சர் திட்டியதற்காகவா இத்தனை அலங்கோலம் ?
அருமை அருமை
ReplyDeleteகுழந்தைக்குத்தான் அதன் பாதிப்பு தெரியும்
அதைச் சொல்லிச் சென்றவிதமும்
இடைவெளி கொடுத்து அதைச் சொன்னவிதமும்
மிக மிக அருமை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த/ம 1
மிக்க நன்றி தோழரே , மிக்க நன்றி :-)
ReplyDeleteஉங்களைப் போன்ற பெரிய பதிவர்கள் ,கமென்ட் செய்வதுதான் பெரிய விஷயம் நன்றி ரமணி அவர்களே :-)
ReplyDeletesuper!
ReplyDeleteநன்றி ஸ்ரீ
ReplyDeleteபூமனம் கொண்ட குழந்தைகள், தங்கள் ஆசிரியர்களை, மிக உயர்வாக மதிக்கின்றன. அவர்கள் முகம் கோணும்போது, குழந்தைகள் பாதிப்படைகின்றன. இதை அழகாக சொன்ன உ.பி.யை வாழ்த்துகிறேன்!
ReplyDelete