Loading

Saturday, December 10, 2011

எங்கே போனது ?


எங்கே போனது
உன் பொழிவான முகம் ?

உன் துறுதுறு
கேலிப்பேச்ச்சும் ,
கிண்டலுடன் வரும்
வசிய வார்த்தைகளும்
எங்கே போனது ?

அனைவரையும் கவர
உபயோகப்படுத்தும் ஸ்டைல்களும்,
நல்ல விசயங்களை
தேடுகின்ற அக்கறையும்
எங்கே போனது ?

இவையனைத்தையும் விட ,
உன் வெள்ளைமனது
இன்று சிதிலமடைந்திருப்பதற்கு
காரணமென்ன ...?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அட செல்ல மகளே .
டீச்சர் திட்டியதற்காகவா இத்தனை அலங்கோலம் ?


6 comments:

  1. அருமை அருமை
    குழந்தைக்குத்தான் அதன் பாதிப்பு தெரியும்
    அதைச் சொல்லிச் சென்றவிதமும்
    இடைவெளி கொடுத்து அதைச் சொன்னவிதமும்
    மிக மிக அருமை
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த/ம 1

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழரே , மிக்க நன்றி :-)

    ReplyDelete
  3. உங்களைப் போன்ற பெரிய பதிவர்கள் ,கமென்ட் செய்வதுதான் பெரிய விஷயம் நன்றி ரமணி அவர்களே :-)

    ReplyDelete
  4. பூமனம் கொண்ட குழந்தைகள், தங்கள் ஆசிரியர்களை, மிக உயர்வாக மதிக்கின்றன. அவர்கள் முகம் கோணும்போது, குழந்தைகள் பாதிப்படைகின்றன. இதை அழகாக சொன்ன உ.பி.யை வாழ்த்துகிறேன்!

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்