Loading

Friday, July 27, 2012

பிரபலம் !


சரியாக 12 வருடங்களுக்கு முன் ,எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழா சமயம் ,
ஒவ்வொரு பெரிய மனிதர்களும் தன் பங்குக்கு ,இரவு நேர நிகழ்ச்சிக்கான பொறுப்பை
எடுத்துக்கொள்வார்கள்.ஆடல் பாடல் ,இசைநிகழ்ச்சி'நாடகமென ஒவ்வொரு நாளும்
நடைபெறும்.அப்படிப்பட்ட நேரத்தில் ,அந்த நேரத்தில் எம்.எல்.ஏ  வாக இருந்த ஒரு பெரியவர்.
ஒரு இளம்பெண்ணை மேடை ஏற்றி ,இவர்தான் கிருபானந்த வாரியாரின் இளம்சிஷ்யையென
அறிமுகப்படுத்தினார்'.சொற்பொழிவாற்றுவதில் திறமை மிக்கவரென சிலாகித்தார்.

அவர் சொன்னபடியே ,நிறைய புராணக் கதைகளை ரசிக்கும்படியாகவே சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்
அந்தப் பெண்.அதே  நேரத்தில் சொற்பொழிவு கேட்பதில் ,எங்கள் கிராமத்து மக்களுக்கு மிகவும்
அயர்ச்சியாக இருந்ததால் ,நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அதைக்கண்டும் ,மனம்தளராமல் .அதைப் பற்றி கவலைப்படாமல்
அந்தப் பெண் உரையாற்றிக்கொண்டிருந்தாள்.

அந்த எம்.எல்.ஏ இருக்கும்வரை ஒவ்வொரு திருவிழா சமயம்  அந்தப் பெண் ,கண்ணன் கதைகள்.
ராமாயண நெறிமுறைகள் ,என பல ஆன்மிக கதைகளை ஒவ்வொரு தினமும் கூறிக்கொண்டிருந்தார்.அதைக் காத்துகொடுத்துக்
கேட்க ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் மக்கள் கூட ஆரம்பித்தனர்.ஒருமுறை என் அப்பா கூட ,அந்தப் பெண்ணின்
பேச்சுத் திறமை கண்டு ,அவருடைய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.அந்த பெண் கூட எங்கள் வீட்டில்
இரண்டு நாள் தங்கினார்.மிகவும் எளிமையாக ,நம் வீட்டுப் பெண் போல நடந்துகொண்டார்.3000ரூபாய்,4000ரூபாய் அளவுக்கு
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்ததால்,சுற்றியுள்ள கிராமங்களிலும் அந்தப் பெண்ணை சொற்பொழிவாற்ற
கூப்பிட்டார்கள்.எப்போது மெட்ராஸ் வந்தாலும் ,எங்கள் வீட்டுக்கு வாருங்களேன கூறிவிட்டுச் சென்றார்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தார்.

பின் ஒரு லோக்கல் சானலில் ,அரை மணி நேர ஆன்மீக சொற்பொழிவாற்றி ,அதை சிடியாக விற்க ஆரம்பித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்புதான் சொற்பொழிவாற்ற 7000ரூபாயாக மாற்றினார்.அந்த சமயம் ,டிவி சானல்களில் தோன்றி ஆன்மீக
உரையாற்றினார்.என் அப்பா கூட சந்தோஷப்பட்டார்.பின் சன் டிவி ,ராஜ் டிவி ,ஜெயா டிவியென பல சானல்களில் தற்போது
ஆன்மிக தளங்களை பற்றி நிகழச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை ஊர் திருவிழாவிற்காக ,அப்பா ,அந்தப் பெண்ணை அழைத்துவர நினைத்து அந்த பெண்ணின் அப்பாவிடம் பேசினார்.
"ஒரு மணிநேர சொற்பொழிவிற்கு 40,000 கேட்டார்'.
எதுவும் பேசாமல் அப்பா தொலைபேசியை வைத்துவிட்டார்.

5 comments:

  1. யாருங்க...அந்த சொற்பொழிவாளர்..?

    ReplyDelete
    Replies
    1. i think, she is thesamangarkarasi, am i correct?

      Delete
  2. வெலைவாசி நிலவரம் அப்படி!

    ReplyDelete
  3. தேச மங்கையர்க்கரசியா? அவுங்க மேல் எனக்கு ஒரு கோபம் இருக்கு.

    போனவருசம் சென்னையில் தொலைக்காட்சியில் பார்த்த ஆன்மீக நிகழ்ச்சியில் இவுங்க பேசுனாங்க. அதுலே......

    குழந்தை இல்லாதவங்க பாவிகள். அவுங்க நரகத்துக்குத்தான் போவாங்கன்னு பேசுனதைக்கேட்டு ஆடிப்போயிட்டேன். என்னமோ குழந்தை இல்லாத அந்தப் 'பாவிகள்' ' வேணுமுன்னே பாவிகள் ஆகிட்டமாதிரி! எத்தனை பேருக்கு அதைக் கேட்டதும் மன உளைச்சல் வந்துருக்கும்:( என்ன ஆன்மீகச் சொற்பொழிவாளரோ..... சீன்னு போச்சு.

    ReplyDelete
  4. சரிதான் நண்பர்களே

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்