என் மதத்தில் பிறந்திருந்தால்,
என்னை மணம் முடித்துவிட்டுத்தான்
மறுவேளை பார்ப்பேன் என
அழுத்த வார்த்தை கூறிச்சென்றாய்..
ஒவ்வொரு முறையும்
இதயத்திலான பரிசுப்பொருளை
பாசமாய் கொடுத்து ,என் இரவை
பாடாய்படுத்திவிட்டுசென்றாய்..
எனக்கு வாய்ப்பவள்
கொடுத்து வைத்தவள் என
அடிக்கடி கூறி
அம்மாவுக்கு வைத்திருந்த மிச்ச அன்பையும்
உனக்கே பொழிய வைத்தாய் ..
போடா பொறுக்கி,முகரக்கட்டையென,
செல்ல வார்த்தை பேசி
இதயத்தினுள் மணி அடிக்கச்செய்து
இனிக்க வைத்தாய் ..
ராட்சசியே ..
வேறு வழி தெரியவில்லை
பிரிந்துவிடமாட்டேனென சத்தியம் செய் .
நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் ...!
//என் மதத்தில் பிறந்திருந்தால்,
ReplyDeleteஎன்னை மணம் முடித்துவிட்டுத்தான்
மறுவேளை பார்ப்பேன் என
அழுத்த வார்த்தை கூறிச்சென்றாய்..// இந்த வரிகள் காதல் தோல்வி வரிகள் போல் உள்ளன ஆனால் இறுதி வரிகள் இன்னும் காதல் இருக்கின்றது போல் உள்ளது //பிரிந்துவிடமாட்டேனென சத்தியம் செய் .
நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் ...// ஏன் இந்த முரண்பாடு ?? ஆனாலும் அருமை பாஸ்
என்னை திட்ட மாட்டேன் என்று நீங்க சொன்னால்....நானும் உங்கள் கவிதையைப்பற்றி ஒன்று சொல்வேன்! :)))
ReplyDelete- வாசகர்களை யோசிக்க வைத்த அந்த கடைசி வரிகள் அருமை!
சாதாரணக் கவிதை. காதல் கொண்டவர்களுக்கு அசாதாரணம்..!!
ReplyDeleteஎனது வலையில் இன்று:
ReplyDeleteமாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
பதிவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஅதே சமயம் உங்கள் தளத்தில் word verification -ஐ எடுத்துவிடுங்கள். இதனால் பல வாசகர்களும் சிரமமின்றி தங்களது கருத்துக்களை வெளியிட ஏதுவாக இருக்கும்..
word verification எப்படி எடுப்பது? என்பதற்கு இந்தப் பதிவு உங்களுக்கு கட்டாயம் பயன்படும்.
உங்கள் பிளாக்கரில் கருத்துப்பெட்டியின் கீழ் வரும் word verfication நீக்க
நன்றி அன்பானவரே..!!
@ilaya singam அது பாருங்க சிங்கம் ,தோழிகள் நம்மகிட்ட பேசிட்டு கடைசியா போகும்போதுதான் இப்படி எதையாவது சொல்லிட்டு போவாங்க ,,அதுதான் அந்த வரிகளில் நான் சொன்னது ..கடைசி வரிகள் என் பார்வையில் எழுதியது
ReplyDelete@karunaakku sir நல்லா இருக்கீங்களா ,உங்கள் கமேன்ட்டுக்கு நன்றி
ReplyDeleteதங்கம்பழனி அவர்களே ..ஆமாம் எளிய நடைதான் ..அதுதானே எல்லாருக்கும் புரியும்
ReplyDeleteசுப்புடு அவர்களே ,நல்ல தகவல் நன்றி ,செயல்படுத்தி விட்டேன் !
ReplyDeleteஅடடே நல்லாருக்கே இது.. :-)
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே ...
ReplyDelete