Loading

Monday, January 16, 2012

நண்பன் (சினிமா விமர்சனம் )


ஹிந்தி திரைப்படத்தை ரிமேக் செய்து எடுக்கப்பட்டிருந்தாலும் ,பெருவாரியான மக்கள் ,ஹிந்தி படத்தை பார்க்காததால் ,நண்பன் அனாயசமாக ஹிட் அடித்திருக்கிறது.
நம் கல்விக் கொள்கையை சாடுவதுதான் , நண்பன் திரைப்படத்தின் கதைக் களம். அதை நையாண்டி செய்து சொல்லப்பட்டதுதான் மிகவும் ரசிக்க வைக்கிறது.
நம் ஊரில் ,கணக்குப் பாடத்தை கூட ,மனப்பாடம் செய்து படிக்கும் ,பிள்ளைகளை இன்றும் பார்க்க முடிகிறது. அவர்களுக்கும் ,அவர்களின் பெற்றோர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் புரியும்படியாக கதையை நகர்த்திய விதம அருமை .


ஸ்ரீகாந்த் , ஜீவா ,விஜய் மூவரும் கல்லூரி நண்பர்கள் .ஸ்ரீகாந்த்துக்கு போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பது ஆசை ,பெற்றோரின் அழுத்தத்தால் இன்ஜினியரிங் படிக்க வருகிறார் ,
ஜீவாவின் குடும்பம் வறுமையில் இருப்பதால் ,மன அழுத்தத்துடன் படிக்க வருகிறார்.இவர்கள் இருவருக்கும் ,புரிஞ்சி படிச்சா ஜெயிக்கலாம் என எடுத்துச் சொல்கிறார் விஜய். 
கல்லூரியின் முதல்வர் சத்தியராஜ் , மாணவர்களை படி படியென எந்நேரமும் நச்சரிக்கிறார். இது பிடிக்காத விஜய், படிப்பு முறையை மாற்ற வேண்டுமென ,சத்யராஜுக்கு அட்வைஸ் செய்கிறார். இதனால் ஆத்திரமுற்ற சத்தியராஜ் , விஜய்யின் நண்பர்களை பிரிக்க முயற்சி செய்கிறார். 
அது தோல்வி அடைகிறது. ஒரு நேரத்தில்  விஜய் செய்த விளையாட்டால் காயமடைகிறான் சத்யன் என்ற கல்லூரி நண்பன் . இதனால் ஆத்திரமுற்ற சத்யன் , விஜய்யிடம் சவால்  விடுகிறான் .

பத்து வருடம் கழித்து நாம் சந்திப்போம் ,அப்போது யார் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்களோ , அவன்தான் பெரியவன் என்று சவால் விடுகிறான் . பத்து வருடம் கழித்து ,

சத்யன் 
ஸ்ரீகாந்த் ,ஜீவாவுடன் , விஜய்யை தேட கிளம்புகிறார்கள் , அங்கு போய் பார்த்தால் விஜய் இல்லை .. விஜய் என்ன ஆனார் ? யார் ஜெயித்தார்கள் என்பதை ,நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார்கள் .
சத்தியராஜுக்கு புதுமையான கதாபாத்திரம் .. செம அழகாக பொருந்துகிறார். நடை ,உடல் மொழி என பின்னுகிறார் . விஜய் ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்துக்கு இந்த திரைப்படத்தில் வலுவான கதாபாத்திரம்தான் ,அவர் பார்வையில்தான் கதையே நகர்கிறது. ஜீவா  இரண்டாம் பாதியில் மனம் நெகிழ வைக்கிறார். சத்யன் காமெடியில் பின்னுகிறார்,அந்த மேடைப் பேச்சில் தூள் பறத்துகிறார்.சின்ன கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா வருகிறார்.
சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ,அது பெருசா ஒன்னும் இடிக்கலை.

கதாநாயகி இலியானா ,படத்தின் நேரத்தை நகர்த்த பயன்பட்டிருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை ,கதைக்கு ஏற்றவாறு பொருந்தித்தான் போகிறது. ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் விளையாடுகிறது.

இந்த கதைக்கு ஷங்கர் தேவையா என சிலர் கேட்க்கிறார்கள்.. இளைஞர்கள் மனசுல பதியுற மாதிரி சொல்றதுக்கு ஷங்கர் கண்டிப்பா தேவைதான்.

நீண்ட நாட்களாக அடிதடி , பன்ச் டயலாக்கில் மட்டுமே பார்த்து பழகிய விஜய்யை , அமைதியான நடிப்பில் ,பார்க்க இயல்பாய் இருக்கிறது.

நண்பன் _ நச்சுன்னு இருக்கு.

4 comments:

  1. தமிழ் படத்துக்கு எல்லாம் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிடீங்களா ?? அருமை அருமை தொடரட்டும் தங்கள் பணி..

    நான் இன்னும் படம் பார்க்கல..(3 இடியட்ஸ் - சூப்பர்)..இந்த படமும் நல்லா இருக்கோமுன்னு நெனைக்கிறென்.
    ஏனா ரொம்ப நல்ல விமர்சனம்.நன்றி.

    ReplyDelete
  2. Short and Sweet விமர்சனம். மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. குமரன் அவர்களே தங்கள் அளவுக்கு என்னால் முடியாது. பிடித்த படங்களை எழுதுகிறேன் ,அவ்வளவுதான்

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஹாலிவுட் ரசிகன் அவர்களே , ஷார்ட் அண்ட் ஸ்வீட்ட்டா இருந்தா மட்டுமே அதிகம் ரசிக்கிறார்கள் ,இல்லையென்றால் நிறைய எழுதலாம் .. நன்றி

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்