Loading

Monday, January 2, 2012

STRAW DOGS (2011) சினிமா விமர்சனம்


அன்றாடம் நாம் கேள்விப்படும் பிரச்சினைதான் ,இந்த திரைப்படத்தின் கதை. ஒருவித சஸ்பென்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் மூலக் கதை ,நாவலில் இருந்து கையாளப் பட்டிருக்கிறது.
1971ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் ரீமேக் செய்திருக்கிறார்கள் .

கதை இதுதான் .
கணவன் ,மனைவி சந்தோஷமாக வாழ்கிறார்கள். மனைவியின் பூர்விக வீட்டிற்கு சென்று கொஞ்ச காலம் தங்கியிருக்க ஆசைப்படுகிறார்கள். அந்த வீட்டின் ஒரு பகுதியை  சீரமைக்க ,அங்குள்ள ஆட்களை  வேலைக்கு அமர்த்துகிறார்கள், வேலைக்கு அமர்த்திய ஆட்களில் ஒருவன் மனைவியின் முன்னாள் காதலன் .
ஆரம்பித்திலிருந்தே ,இந்த முன்னாள் காதலனும் ,அவனுடைய ஆட்களும் ,ஹீரோவின் மனைவி மீது ஒருவித கள்ளப் பார்வையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒருநாள் இந்த வேலையாட்கள் ,ஹீரோவை தாஜா செய்து ,மான் வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் சென்ற இடத்தில் ,ஹீரோவை தனியாக விட்டுவிட்டு ,காணாமல் போகிறார்கள்.இந்த நேரத்தில் ,முன்னாள் காதலன்,ஹீரோவின் மனைவியை வலுக்கட்டாயமாக அடைகிறான், அடைந்த அடுத்த நிமிடத்தில் ,முன்னாள் காதலனின் கூட்டாளியும் ,ஹீரோவின் மனைவியை வன்புணர்ச்சி செய்கிறான். 

வேட்டையாடிவிட்டு வீடு திரும்பிய ஹீரோவிடம் ,ஹீரோயின் எதுவும் சொல்லாமல் ,நீ ஒரு கோழை என சொல்கிறாள்.
ஹீரோவும் ,இந்த வேலையாட்கள் வந்ததிலிருந்தே பிரச்சினை என எண்ணி ,அவர்களுக்கு அதிக தொகை கொடுத்து ,வேலையை விட்டு அனுப்புகிறான். 

இந்த நேரத்தில் ரக்பி கோச்சின் மகளை ,நீண்ட நாளாக அவளை பின்தொடர்ந்தவன் எதிர்பாராதவிதமாக அவளை கொன்றுவிடுகிறான் .இது தெறியாமல் ஹீரோ ,அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார், இதை தெரிந்துகொண்ட அந்த முன்னாள் காதலன் ,ரக்பி கோச்சிடம் சொல்கிறார். ஆத்திரப்பட ரக்பி கோச் ஹீரோவின் வீட்டை உடைக்க சொல்கிறார்.அதிலிருந்து ஹீரோவும்,ஹீரோயினும்  எப்படி தப்பித்தார்கள் என்பதை பதட்டம் நிறைந்த கிளைமாக்ஸாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படம் உளவியல் ரீதியாக ,அனைவருக்கும் ஒரு சிறு அதிர்வை உண்டாக்கும். "முடிந்தால் பாருங்கள்".

2 comments:

  1. இந்த படத்தின் ஒரிஜினல் வெர்ஷனை கேள்விப்படு இன்னும் வாட்ச்லிஸ்டிலேயே இருக்கிறது..இப்போது ஒரு புது படத்தை மிக கச்சிதமான முறையில் அழகாக வழங்கியுள்ள தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.படம் பார்க்கிறேன்..

    ReplyDelete
  2. kumaran sir நீங்கள் வழங்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்