Loading

Monday, March 26, 2012

Seeking justice (ஹாலிவுட் சினிமா விமர்சனம் )



நிகோலஸ்கேஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் !பல முடிச்சுகளோடு கதையை நகர்த்திய
விதத்தில் seeking justice கவனத்தை ஈர்க்கிறது !


நிகோலஸ் கேஜ் ஒரு ஸ்கூல் டீச்சர் ,அவருக்கு ஒரு அழகான மனைவி !இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி 
கொண்டிருக்க ,துரதிஷ்டவசமாக நிகோலஸின் மனைவியை ஒருவன் கற்பழித்து காயப்படுத்துகிறான் .
மனைவியை மருத்துவமனையில் பார்த்து ஆத்திரப்படும் நிகோலசை ,சைமன் என்பவன் சந்தித்து 
உன் மனைவியை கற்பழித்தவனை தண்டிக்க வேண்டுமா என கேட்க்கிறான் ,முதலில் தயங்கும் நிகோலஸ் 
பிறகு சம்மதிக்கிறான் !
சைமன் சொன்னபடியே,நிகோலஸ் மனைவியை  கற்பழித்தவன் மறுநாள் காலை கொலையாகி கிடக்கிறான் .

ஆறு மாதம் கழித்து ,நிகோலஸுக்கு ஒரு போன் கால் வருகிறது .சைமன் பேசுகிறான் .தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமென .
நிகொலஸுக்கு சைமனை பிடிக்காவிட்டாலும் ,தன் மனைவியை கற்பழித்தவனை கொன்றதற்கு உதவி புரிந்ததால் 
சம்மதித்து ,என்ன உதவி வேண்டுமென சைமனிடம் கேட்கிறான் நிகோலஸ் .




சைமன் ,ஒரு கொலையை செய்ய வேண்டுமென நிகோலஸுக்கு கட்டளையிடுகிறான் .அதை மறுக்கும் நிகோலஸ் 
சைமனை திட்டி அனுப்புகிறார் .இருந்தும் சைமன் ,தொடர்ந்து நிகோலஸ்சை நச்சரித்துக்கொண்டே இருக்கிறார் .இதனால் 
மனம் வெறுத்துப் போன நிலையில் ,கொலையை செய்ய அரை மனதுடன் சம்மதிக்கிறார் .கொலை செய்ய வேண்டிய நபரின் 
போட்டோவையும் ,அவர் செய்த செக்ஸ் குற்றங்களையும் ,ஒரு கவரில் கொடுத்து அனுப்புகிறான் சைமன் .
சைமன் சொன்ன இடத்திற்கு வருகிறான் நிகோலஸ் . தான் கொலை செய்யப்போகும்  நபரிடம் பேசிப்பார்க்கலாம் 
என நிகோலஸ் முயற்சிக்கும்போதே ,நிகோலஸ்சை தாக்க முயற்சிக்கிறான் .தாக்குதலில் இருந்து தப்பிக்க நிகோலஸ் முயற்சிக்கையில் 
தாக்கியவன் பாலத்தில் இருந்து விழுந்து மரணமடைகிறான் .
இதைக்கண்டு பயந்து போன நிகோலஸ் ,வேகமாக வீட்டிற்கு வருகிறான் .வீட்டிற்கு வந்த ,அடுத்த மணிநேரத்தில் 
போலீஸ் நிகோலஸ்சை கைது செய்கிறது . நிகோலஸ் கொலை செய்யவில்லையென வாதிடுகிறார் .

எந்தப் போலிசும் நம்பத் தயாராக இல்லை .இறுதியில் ஒரு காவல்துறை அதிகாரி ,நிகோலஸ்சை ஓடச்சொல்கிறார் .
அவர் சொன்னபடியே அங்கிருந்து தப்பித்து , சைமன் யார் ? அவனின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க 
நிகோலஸ் எடுக்கும் முயற்சியே இந்த "சீக்கிங் ஜஸ்டிஸ் " திரைப்படத்தின் கதையாகும் .


பல வருடத்திற்கு முன்பு பார்த்த ,நிகோலஸ் இன்னும் அதே இளமையுடன் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது .நடுத்தர தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லாம் 
பத்து வருடம் கழித்து ,தொப்பையுடன் காட்ச்சியளிக்கையில் ,நிகோலஸ் மட்டும் ,அதே உடலமைப்புடன் இருப்பது ,ஆச்சர்யத்தை 
அளிக்கிறது .நிகோலஸ்சிற்கு இந்த மாதிரி படங்கள் அழகாக பொருந்துகிறது .அவருடைய மனைவியாக வருபவரும் ,தன்னுடையை 
பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார் .



கார் சேசிங் காட்சி ஒன்றில் ,கேமேராவின் மெனக்கெடல் நன்றாக தெரிகிறது .வழமையாக வரும் ஹாலிவுட் சினிமா ,கிளைமாக்ஸ் 
டச் ,இந்த படத்திலும் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது .

seeking justice - தேட முயற்சித்து இருக்கிறது 

2 comments:

  1. கதையின் முதல் சில வரிகளில் சேரனின் "முரண்" படம்தான் ஞாபகம் வந்தது..
    நல்ல பதிவு நண்பா!

    ReplyDelete
  2. படம் பார்க்கலாம் போலவே...

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்