Loading

Sunday, February 12, 2012

FRIENDS WITH BENEFITS(2011) (ஹாலிவுட் பட 18+ விமர்சனம் )




பொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் .
காமத்தை அல்ல என்று .நடைமுறையில் இந்த கோட்பாடை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்துகொண்டே இருக்கிறார்கள் இன்றைய காதலர்கள் .
காதல் என்று வந்துவிட்டால் ,காமம் வெளிப்படாமல் போவதில்லை .சரி ,அறிமுகமில்லாத  ,ஆண்,பெண் இருவரும்  ஒருவொருக்கொருவர் விருப்பபட்டு
காமத்தை வெளிபடுத்தினாலும் ,அந்த இடத்தில் காதல் பூக்குமா ? பூக்காதா ? அதுதான் இந்த படத்தின் ஒன் லைன் கதை . 




ஹீரோ வேலை விசயமாக , நியுயார்க்  வருகிறார் .ஹீரோயின்தான் ஹீரோவுக்கு நேர்காணல் நடத்துகிறார் .ஹீரோ பளிச்சென இருப்பதால் ஹீரோயினுக்கு பிடிக்கிறது .
நம்மூர் பெண்கள் சொல்வது போல் ,பிரெண்ட்சாக இருக்கலாமென சொல்லுகிறார் .ஹீரோவும் சம்மதிக்கிறார் .பல விஷயங்கள் பேசுகிறார்கள்.பேச்சு அப்படியே செக்ஸ் பக்கம் திரும்புகிறது .
இருவரும் உடலுறவு கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்கள் .ஆனால் ஹீரோயின் ஒரு கண்டிஷனை முன்வைக்கிறார் .உடலுறவு கொள்கையில் காமம் மட்டுமே இருக்கவேண்டும் ,ஒரு துளி
காதல் கூட இருக்ககூடாது என ! இப்படியொரு புதுமையான ஐடியாவை ,எல்லாக் காதலனும் ஒப்புக்கொள்வது போல ,அந்த ஹீரோவும் ஒப்புக்கொள்கிறார் .
ஒவ்வொரு நாளும் ,இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் ,காமக் களியாட்டங்களை காதல் ? உணர்வோடு நாமும் பார்த்து பரவசமடையலாம் .இப்படி போய்க்கொண்டிருக்கும்
இவர்கள் வாழ்க்கையில் ,இவர்களுக்குத் தெரியாமலையே ,ஒருவருக்கொருவர் மனதிலும் காதல் தோன்றுகிறது .அதை ஹீரோ சொல்ல வருகிறான் .அவனுடைய காதலை ,ஹீரோயின் ஏற்றுக்கொண்டாளா ?
என்பதை உணர்ச்சியைத் தூண்டி சொல்லியிருக்கிறார்கள் .ஹீரோயின் படுக்கையறை காட்சிகளில்  பின்னி பெடலெடுக்கிறார்.ஹீரோவும் நன்றாக ஈடு கொடுக்கிறார்.


இந்த படத்தை பற்றி எழுதுவதாக எண்ணமே இல்லை ,காதலர் தின கன்றாவிக்காக ,எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது .
நீங்களும் படத்தை பார்த்து பரவசமடையுங்க .


6 comments:

  1. சுவாரஸ்யங்கள் நிறைந்த கச்சிதமான விமர்சனம் நண்பரே..வாழ்த்துக்களோடு நன்றிகள்/

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே , உங்கள் ஒருவரின் ஊக்கம் எனக்குப் போதும்

    ReplyDelete
  3. விட்டா காதலர் தினத்தில் ஒரு புதுப் புரட்சியை உண்டு பண்ணிவிடுவீங்க போல இருக்கே? இந்த மாதிரி ஐடியா எல்லாம் நம்ம நாடுகளுக்கு சரிப்பட்டு வராது. நானும் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்க.

    http://hollywoodrasigan.blogspot.com/2011/12/friends-with-benefits-2011.html

    உங்கள் பார்வையும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது சரிதான் ஹாலிவுட் ரசிகரே ,உங்கள் விமர்சனம் படித்தேன் ,நீங்கள்தான் கதையை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் .நன்றி

    ReplyDelete
  5. உமது கலைச்சேவையை யாம் பாராட்டுகிறோம் @தண்ட்சோறு

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்