Loading

Monday, April 30, 2012

THE DARKEST HOUR (ஹாலிவுட் விமர்சனம் )


திடீரென மர்மமான ஜந்துக்கள் ,விண்வெளியிலிருந்து இறங்கி நம்மை தாக்கினால் எப்படியிருக்கும் ?
என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த DARKEST HOUR திரைப்படம் .



ஒன்றரை மணிநேர விறுவிறுப்பு திரைப்படத்தை உருவாக்கிய விதத்தில் DARKEST HOUR
ஓகே ரகம்தான் .இனி சுருக்கமான திரைக்கதையை பார்க்கலாம் ..

அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் ,ஒரு பிராஜக்ட் விசயமாக வரும் இரண்டு
பையன்கள் ,இவர்களுக்கு  ரஷ்யாவின் மொழி ,வழி என எதுவுமே தெரியாமல் இருக்கிற நேரத்தில் விண்வெளியிலிருந்து
வேற்று கிரக ஜந்துக்கள் இறங்கி ஒட்டுமொத்த மக்களையும் பஸ்மமாக்குகிற நேரத்தில் உயிரை கையில் பிடித்து ஒரு
ரூமில் தங்குகிறார்கள் .ஐந்து நாட்களுக்குப் பிறகு ,இதற்கு மேல் ரூமில் அடைந்து கிடக்க முடியாதென முடிவெடுத்து
வெளியே வருகிறார்கள் .ஜந்துக்கள் இன்னும் ரஷ்யாவை விட்டுப் போகவில்லை என்பதை உணர்ந்து ,வேறுவழியில்லாமல்
அதை எதிர்க்க துணிகிறார்கள் .இறுதியில் அதை எதிர்த்து வெற்றி கண்டார்களா என்பதே THE DARKEST HOURன் திரைக்கதை .

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை அறிவியல் அறிவு வேண்டுமென்பதை ஓரளவுக்கு இந்த படத்தில்
புரிய வைக்கிறார்கள் .பல முனைகளிலிருந்து தாக்கினால் எவ்வளவு பலமுள்ள எதிரியும் காலிதான்
என்ற ரீதியில் வேற்றுகிரக ஜந்துக்களை விரட்டியடிக்கும் பாணி தமிழ் சினிமாவை பார்த்து எடுக்கப்பட்டதோ என எண்ணத்தோன்றுகிறது




இந்த நால்வருடன் சில ரஷ்ய ஆட்களும் இடையில் சேர்ந்து எதிர்த்து போராடும்போது ,ரஷ்யர்கள் தன்னுடைய நாட்டை
மீட்டாக வேண்டுமென டயலாக் அடிப்பது நன்றாகவே எடுபடுகிறது .கிராபிக்ஸ் யுக்திகள் ஏற்கனவே பார்த்து
பழக்கப்பட்டதுதான் என்றாலும் ,வேற்று கிரக வாசிகள் பூமியில் உள்ள உயிர்களை தேடித் தேடி கொல்லும் பாணி புதியதுதான் .பின்னணி இசை மிரட்டும்
பாணியில் உள்ளதால் ,படத்தில் ஆர்வத்துடன் ஒன்ற முடிகிறது .

THE DARKEST HOUR _ த்ரில்லர்  பொழுதுபோக்கு !




2 comments:

  1. நல்ல விமர்சனம் நண்பரே, இந்த படம் பார்க்கலாம் என்று உள்ளேன்.பார்த்துவிட்டு சொல்கிறேன்.மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நல்ல படம் ஆரம்பித்த 5 நிமிடம் முதல் விறுவிறுப்பு ........

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்