இரண்டு மாதங்களாக சமச்சீர் கல்வி வருமா ,வராதா ,,என்ற இழுபறிக்கு ,,உச்சநீதிமன்றம் தீர்வு அளித்திருக்கிறது ! சமச்சீர் கல்வியே தொடர ஆணையிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். சமச்சீர் கல்வியில் சில ,பல குளறுபடி இருந்தாலும் ,அதை ஆரம்பித்தால்தானே ,குறைகளை களைவதற்கான வழிவகை பிறக்கும் என்பது பலரது வாதம் !
இந்த விசயத்தில் ஜெயலிதாவின் அணுகுமுறை சரியா ,,என்பதில் மக்களிடையே இருவேறு கருத்துக்கள் இருக்கிறது ..எது எப்படியோ ,,பிள்ளைகளின் ரெண்டு மாத அலைச்சலுக்கு ஒரு தீர்வு கிடைத்து இருக்கிறது! அது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லதா ,,கெட்டதா என்பது அடுத்த வருடம் தெரிந்துவிடும் !
எதிர்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு ,இன்னும் சில நாட்களுக்கு ,,மேடைகளில் முழங்குவார்கள் ! அது அவர்கள் பாடு ! படிப்பது நம் பிள்ளைகளின் பாடு! இதை சொல்வது என் பாடு!
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது