விஜயகாந்த் அவர்களே ! முதலில் உங்கள் பிறந்தநாளுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
மதுரையில் பிறந்து ,திரைத்துறையில் கால் நூற்றாண்டு கோலோச்சிய, சில நடிகர்களில் நீங்களும் ஒருவர், என்பது எங்களுக்குப் பெருமையே !
நடிக்கும் காலத்திலுருந்தே அரசியல் பற்றி தெரிந்துகொண்டீர்கள் . இடைவெளி விட்டு, பகுதி பகுதியாக ரசிகர்களை உருவாக்கிக் கொண்டீர்கள் .ஆறு வருடங்களுக்கு முன்பு கூட, ஹிட் படத்தை கொடுத்தீர்கள் .சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தாலும் ,இப்போது அரசியலில் பொறுத்துப்போவதைபோல் பொறுத்துக்கொண்டீர்கள் ..
சிலர் கூறியது போல ,எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என மழுப்பாமல் ,தெளிவாக அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினீர்கள் .சொன்னதுபோல் அரசியலில் காலடி வைத்து ..
நான் ஆட்சிக்கு வந்தால் ,ஐந்து வருடத்தில் சிங்கப்பூராக்கிக் காட்டுகிறேன் என சவால் விட்டீர்கள் ..ஆரம்பத்தில் நீங்களும் கட்சியின் கொள்கை என ஒரு பட்டியலை கொடுத்தீர்கள் ,அதை இன்றைய தமிழன் ,படிக்கக் கூட நேரமில்லாமல் ,கொள்கையே இல்லாமல் ஒரு கட்சி நடத்துகிறார் என அனைவரும் கிண்டல் செய்தார்கள் ..
ஒரு பகுதி மக்கள், உங்களை ஆதரித்தாலும் ,ஒட்டுமொத்தமாக எல்லா அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் ,உங்கள் கட்சியை பற்றி பேச மறுத்து ஒதுக்கினார்கள் ..அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ,முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்குகளை அள்ளி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தீர்கள்! .கருணாநிதியை, நீங்கள் சாடியது போல் ,ஜெயலலிதா கூட சாடியிருக்க மாட்டார் ! ஆனால் அவரும் உங்களைப் பார்த்து பயந்து, குடிகாரர் என ஆரம்பித்து வைத்தார் ,நீங்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து ,அரசியலில் ஒரு படி முன்னேறச் செய்தீர்கள் !ஆனால் ,நீங்கள் எந்தக் கருணாநிதியை எதிரித்து பேச ஆரம்பித்தீர்களோ ,,அவரைப் போல இரட்டை அர்த்த வசனம் பேசி ,உங்கள் பேரைக் கெடுத்துக் கொண்டீர்கள் !!
அதன் பிறகு ,சட்டமன்ற கூட்டத்திற்கு சில நாள் சென்று ,பல நாள் தோல்விப் படங்களில் நடித்து, பொழுதைக் கழித்தீர்கள். இடை இடையே ,பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து,தொண்டர்களை தக்க வைத்து ,நானும் இருக்கிறேன் என காட்டினீர்கள். இலங்கை பிரச்சினை தீவிரமாக நடந்தபோது ,மரியாதை ஷூட்டிங்கில் உட்கார்ந்து ,உங்கள் மரியாதையை கெடுத்துக் கொண்டீர்கள் .!
அதையும் காலப்போக்கில் மறந்து ,நாடளமன்றத் தேர்தலில் ,என்னைப் போன்ற இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்து ,குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை ,தக்கவைத்துக் கொள்ள உதவி செய்தோம் ...பின் கட்சியின் "நலன்" கருதி கூட்டணி முடிவைப் பற்றி ஜோசியரிடம் ஆலோசித்து ,பரபரப்பை ஏற்ப்படுத்தி ஆதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தீர்கள் ..உங்கள் முதல் கொள்கையே டமாலாகிப் போனதைப் பற்றி நீங்களும் கவலைப் படவில்லை ,நாங்களும் கவலைப் படவில்லை !சட்டமன்றத் தேர்தலும் ஆரம்பித்தது .,,
உங்கள் கட்சியின் சிறப்பே ,,உங்கள் எளிமையான கிராமத்து பேச்சுதான் ,,அதையும் உங்கள் கரகர தொண்டை ,கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியது ,,பாண்டியன் என்ற பாஸ்கரை அடித்தீர்கள் என பிரச்சாரம் செய்தார்கள் ,குடிகாரர் என ஏளனம் செய்தார்கள் ,,எதையும் கண்டுகொள்ளாத உங்கள் மனதைரியத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும் ,,ஆனால் அது மட்டும் போதுமா ? திருத்திக் கொள்ள வேண்டாமா ??
சொன்னபடியே எதிர்க்கட்சி தலைவர் ஆகி ,உங்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்த செய்தீர்கள் !! இதோ ,தேர்தல் முடிந்து நூறு நாட்களாகி விட்டது ! இருபத்தி ஒன்பது எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ,ஒரு செயலில் கூட ஈடுபட முடியவில்லை ..சிலர் சொல்வது போல உள்ளாட்சித் தேர்தல் வியூகம் என சொல்கிறார்கள் !! மக்கள் பிரச்சினையில் போராடினால்தானே அதிலும் ஜெயிக்க முடியும் ,என்ற விசயத்தையெல்லாம் உங்களிடம் யார் சொல்வது !!எல்லாக் கட்சிகளும் ,ஏதோ ஒரு பிரச்சினையில் போராட ,பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள கட்சி ,கிட்டத்தட்ட நூறு நாள் ,ஓய்வெடுத்துக் கொண்டதுபோல் கோமாவில் கிடக்கிறது !
முடிவாக ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன் ,விஜயகாந்த் என்றாலே அதிரடிப் பேச்சுக்கள் ஞாபகம் வரும் ,அந்த, "விஜயகாந்த்" பதவிக்கு முன், இந்த தமிழ்நாட்டில் இருந்தார் !!
இதை விரைவாக எழுதியதால் ,நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தது !!அதற்காக அடியேனை மன்னிக்கவும் !
ReplyDeleteஎழுத்து பிழைகள் இருந்தாலும் சொல்ல வந்த கருந்து நிஜம் நண்பரே...
ReplyDeleteப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?
நன்றி கருண் அவர்களே
ReplyDelete