காவல்துறையில் ஒழுக்கசீலர்கள் என்ற விசயமெல்லாம் ,,பொதுமக்களே மறந்த போன விஷயம் ..அதனால் அதை விட்டுவிடுவோம் .நான் .சொல்லப்போகும் காவல்காரரின் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது ..மதுரை வீதிகளில் ,நெரிசல் மிகுந்த பஜாரில் ,இவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் இருக்கிறார் ..இவரின் ஆசையே மிகவும் அல்பமானது ...அது என்னவென்று பார்க்கும் முன் ...
போன மாதம் வரை ,மதுரை வீதிகளில் ,திருட்டு டிவிடி கடைகள் ,சந்துபொந்தெல்லாம் நிறைந்து கிடந்தன ,,எல்லா டிவிடிக்களுமே பதினைந்து ரூபாய் ,,இருபது ரூபாய் வீதம் புதுப்படங்களை கூறு போட்டு விற்று கொண்டிருந்தார்கள் ,,
நம் ஏட்டு ,,என்ன செய்வார் என்றால் ,,பெரிய அதிகாரிகள் ,,ரெய்டு என்று வரும்போது ,,முன்கூட்டியே தகவலை , திருட்டு டிவிடி விற்பவர்களிடம் கூறிவிடுவார் .. அதற்க்கு சன்மானமாக புதுப்பட டிவிடிக்களை இலவசமாக அள்ளிச்செல்வார் ,,இதனால் டிவிடி கடைக்காரர்களின் பிழைப்பு பிழையில்லாமல் இருந்தது ..
அதோடு விடுவாரா நம் ஏட்டு ,,பலான பட டிவிடிக்களை ,,மறக்காமல் கேட்டு வாங்கிக் கொள்வார் ,,அதற்க்கு அவர் உச்சரிக்கும் வார்த்தையை சொல்லியாக வேண்டும் ,,,"சாவு இருக்கா " என்றுதான் கேட்பார் !! தினமும் புதுவிதமான காட்சியுள்ள டிவிடிக்களையே இலவசமாக வாங்குவார் ....இப்படி இவர் வாங்கிய டிவிடிக்கள் ஆயிரத்தை தாண்டும் !புரியுதோ புரியவில்லையோ ,,ஹாலிவுட் பட டிவிடிக்களையும் வாங்கிக்குவார் ..
யார் கண் பட்டதோ தெரியவில்லை ,,அவர் பிழைப்பில் மண் விழுந்தது ,,ஆட்சி மாறியது ,,காட்சியும் மாறியது , புதிய ஆதிகாரிகள் ,,மதுரையில் உள்ள திருட்டு டிவிடிக்கள் கடையை முற்றிலுமாக மூடச் செய்தார்கள் !! நடத்திய ரெய்டில் இரண்டாயிரம் டிவிடிக்கள் கைப்பற்றப்பட்டன !!
இன்று நம் ஏட்டு என்ன செய்கிறார் தெரியுமா?? ,,கைப்பற்றிய ரெண்டாயிரம் திருட்டு டிவிடிக்களை அதிகாரிகளின் வீட்டுக்கு சப்ளை செய்து வருகிறார் !!
காலமும் மாறியது காட்சியும் மாறியது-;))
ReplyDeleteஆமாம் தோழரே
ReplyDelete