பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ,வளர்க்கப்படும் பாடு சொல்லி மாளாது !!அதுவும் இந்த கலியுக காலத்தில் ,பாலியல் தொந்தரவை சந்திக்காத பெண்களே கிடையாது என்ற சூழ்நிலைக்கு வந்துவிட்டதால் ,பெற்றோர்கள் ,பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர வேறெங்கும் பிள்ளைகளை ,தனியாக அனுமதிக்க பயப்படுகிறார்கள் !!அப்படி பள்ளிக்கு அனுப்பிய பிள்ளைகள் ,,அங்கேயும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்தால் ??
தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,இந்தியா முழுவதுமே ,பெண் மாணவிகள் ,,குறிப்பாக எட்டாம் வகுப்பு ,ஒன்பதாம் ,,பத்தாம் வகுப்பு மாணவிகளை குறி வைத்து ,,அந்த பள்ளிகளின் ஒரு சில ஆசிரியர்களே பாலியில் தொந்தரவுகளைத் தர ஆரம்பித்து விடுகிறார்கள் !!இதனால் அம்மானவிகளின் கல்வி பெருமளவு பாதிக்கப் படுகிறது !!
இந்த தொந்தரவுகளை சகிக்காமல் ,பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்டவர்கள் ,இந்தியாவில் அநேகம் பேர் !
சில பிள்ளைகள் ,எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ,ஆசிரியர்களுக்கு தன்னை இரையாக்கி ,ஆண்கள் என்றாலே வெறுப்பை கக்குகிறார்கள் ! சிறு வயதிலேயே அவர்கள் யாருடனும் பேச பயப்பட்டு தனிமையின் துயரை அனுபவிக்கிறார்கள் !
சில வருடங்களுக்கு முன்பு ,ஆசிரியர் ,ஒருவர் ,பெண்ணை கற்பழித்து விட்டு ,தன் சக ஆசிரியர்களுக்கும் ,,அவளை இரையாக்கிய கொடுமை ,இந்திய தேசத்தில்தான் நடந்தது !! வயதான ஆசிரியர்களும் ,,,இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது !!
பெண்மாணவிகள் ,ஆசியர்களின் செய்கைகளை ,,ஆரம்பித்தேலேயே கண்டித்திருந்தால் ,,இது போன்ற சம்பவங்கள் ,ஓரளவேனும் குறைய வாய்ப்பிருக்கிறது !!சில ஆசிரியர்கள் ,மாணவிகளுக்கு ,,மதிப்பெண்களை கூட்டுகிறேன் என்று ஆசை காட்டி ,,தன் தொந்தரவுகளை ஆரம்பிக்கிறார்கள் !!
இதைத்தடுக்க ,,பெண்மாணவிகள் ,தைரியமாக முன்வந்தால் தீர்க்கலாம் !! ஆனால் ,இந்தியாவில் ,பெண்கள்,, ,,எங்கே நம் மீது ,அவப்பெயர் ஏற்பட்டு விடுமோ என்றே அஞ்சுகிறார்கள் !வேலியே பயிரை மேயும் இக்கலாச்சாரம் ,வேரறுக்கப்படுவது எப்போது ??
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது