Loading

Wednesday, August 10, 2011

தெய்வத்திருமகள் !! புதிய கோணம் !



ஒரு திரைப்படத்தின்  கதையை  எங்கிருந்து உருவினாலும் ,,அதை திரைக்கதையாக செதுக்கி ,விறுவிறுப்பு குறையாமல் எடுப்பது என்பது ,,சாதாரண விசயமல்ல !! அந்த வகையில் ,,வேற்று மொழி படத்தின் மையக்கருவை  மட்டும் உருவி ,இன்ன பிற விசயங்களை சேர்த்து ,,ஒரு அழகான காவியமாக கொடுக்கப்பட்டதுதான் தெய்வத்திருமகள் திரைப்படம் !

படத்தின் கதை அனைவரும் அறிந்ததே ,ஐந்து வயது மகளை ,,சிறிதளவில் மன வளர்ச்சி குன்றிய  தந்தை எவ்வாறு பராமரிக்க முடியும் ? என்பதே கதையின் மையக்கரு ! இந்த கதையை ,,தமிழுக்கு ஏற்றாற்போல் சிறப்பாக அனுபவம் இல்லாமல் செதுக்க முடியாது ! நிறைய தமிழ்ப்படங்கள் வேற்றுமொழி படக் கதையை உருவி எடுத்தும் கூட ,,வந்த சுவடே தெரியாமல் போயிருக்கிறது ! இன்றைய சூழலில் ,,அழுகை நிறைந்த காட்சிகளை  எடுத்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள் .அதிலும் புதுவித பாணியை கையாண்டிருக்கிறார் இயக்குனர் விஜய் !

குழந்தைப் படம் என்று பெரிவர்கள் நினைத்துவிடாதபடி ,திரைக்கதை அமைத்திருக்கிறார் .உதாரனத்திற்கு,அந்த நீதிமன்ற க்ளைமாக்ஸ் காட்சியே ஒரு நல்ல எடுத்துக்காட்டு .. இரு மூத்த வக்கீல்களின் சின்ன  பாத்திரங்கள் கூட ரசிகர்களை கவர்ந்து இழுத்தன ! அவர்கள் பேசும் அடாடாட ,,அபபபபாபா என்ற வாக்கியங்களை கேட்கும்போது ,அந்த சோகமான கதைச்சூலளையும் கலகலப்பாக ஆக்கிய திறமை விஜய்க்கே சாரும் !


ஜி .வி பிரகாசின் ,,பின்னணி இசை ,,இளையராஜாவின் பின்னணி இசை பாணியில் சிறப்பாக இருந்தது ,பாடல்கள் எல்லாமே ,,எங்கிருந்தோ உருவிய பாடல்கள் என்றும் சொல்லபட்டால் கூட ,,கதையின் போக்குக்கு ஏற்ற விதமாய் அமைந்து இருந்தது ! முக்கியமாக ஆரிரோ ,,இது தந்தையின் தாலாட்டு ,,மிகவும் நேர்த்தியான வார்த்தைகளால் அமைக்கப்பட்ட பாடல் .

நடிகர்களை பற்றி சொல்வதென்றால் ,,விக்ரம் ,,நாசர் ,,சந்தானம் ,பாஸ்கர் என்று அத்தனை பேருமே தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள் !நடிகைகள் அனுஸ்காவுக்கு முக்கிய கதாபாத்திரமாய் ஜொலித்திருக்கிறார் ,,அமலா பாலின் நடிப்பு போதுமானதாய் இருந்தது !

மொத்தத்தில் தெய்வத்திருமகள்  எடுத்த 'தெய்வதிருமகன்' விஜய்க்கு வாழ்த்துக்கள் !! இந்த வருடத்திற்க்கான சில ,பல விருதுகளை வெல்லும் என்று நிச்சயமாக சொல்லலாம் !

1 comment:

  1. நான் ஐம் சாம் படத்தை பார்த்திருக்கிறேன்.நல்ல படம்,
    அதே நேரம் தெய்வத்திருமகளையும் ரசித்தேன்.
    இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கும்.
    விக்ரமின் நடிப்பு நன்று.
    நல்ல பதிவாக தந்துள்ளீர்கள்.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்