நாம் தேர்ந்தெடுக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ,,ஒழுங்காக கடமையை செய்கிறார்களா ? என்பதை, எல்லாம் மக்களும் நினைப்பதில்லை ,,அந்த உறுப்பினரும் நினைப்பதில்லை !
பொதுவாக தமிழகத்தில் ,,சட்டசபை உறுப்பினர்கள் ,,அவர் கட்சி சொல்வதைத்தான் கேட்கிறார்கள் ..தனி மனிதனாக ,,தன் தொகுதியின் ,பிரச்சினையை ,நினைத்த உடனே ,சொல்லிவிட முடியாது ..இரு திராவிட கழகங்களின் கட்டுப்பாட்டில்தான் ,இந்த உறுப்பினர்களின் வாயசைவுகள் இருக்கும் !!
மற்றொன்று ,,கட்சியே ,சில நேரத்தில் பேச அனுமதி கொடுத்துவிட்டாலும் ,,இவர்கள் வாயை திறந்து ,,தொகுதி பிரச்சினையை ,,சட்டசபையில் பேசுவதே இல்லை ,,சில உறுப்பினர்கள் ,பணத்தால் எம் எல் ஏ ,சீட்டை ,வாங்கியதால் ,,அவர்களுக்கு என்ன பேசுவதென்றே ,தெரியாது !
மூத்த உறுப்பினர்கள் பேச்சை கேட்டு ,,பழகும் இளம் எம் எல் ஏக்கள் என்று தமிழகத்தில் ,யாருமே இல்லை ! நிறைய ,உறுப்பினர்கள் ,சட்டசபை நிகழ்சிகளில் ,,சில நாட்கள் மட்டும் வந்துவிட்டு போவார்கள் ! பல பேர் ,,கலந்துகொள்வதே இல்லை !கையெழுத்து மட்டும் போட்டு ,சம்பளத்தை இடது கையால் பெற்றுக்கொண்டு ,,கிம்பலத்தை வலது கையால் ,,பல பேரிடம் பெற்றுக்கொண்டு சுகமாக வாழ்கிறார்கள் !
இப்படிப்பட்ட மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ,,நீங்கள் சட்டசபை முழக்கத்தை ஞாபகப்படுத்தினால் ,,உங்களை பைத்தியக்காரர் ,என்று சொல்லாமல் வேறென்ன சொல்வார் !!
No comments:
Post a Comment
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது